Sunday, November 14, 2010

அழகான டொல்பின்கள்

http://www.sailingissues.com/dolphins/striped-dolphin6.jpg
மனிதர்களிடம் நட்புடன் வாழும் ஒரே கடல் வாழ் உயிரினம் டொல்பின் மீன்கள்தான். அழகான டொல்பின்களை எல்லோருக்கும் பிடிக்கும் . சிறியோர்கள் பெரிதும் டொல்பின்களின் விளையாட்டை ரசிப்பது வழமை . மனிதனிடம் தானாகவே வந்து நட்புறவு கொள்ளும் டொல்பின் மீன்கள் பார்ப்பதற்கு அழகானவை மட்டுமல்ல. மிகவும் புத்திசாலியான விலங்கும்கூட.
http://www.dolphinsc.com/images/Dolphin.jpg
தமிழில் ஓங்கில் அல்லது கடற்பன்றி, ஆங்கிலத்தில் டால்பின் (Dolphin) என்பது நீரில் வாழும் ஒரு பாலூட்டி ஆகும். இவை திமிங்கலங்களுக்கு நெருக்கமான இனத்தைச் சேர்ந்தவை. பதினேழு வகையான பேரினங்களில், சுமார் நாற்பது வகையான ஓங்கில் இனங்கள் உள்ளன. ஓங்கில்களின் உடல் திமிங்கலம் போல் இழைவரிவமுடையது. வால் துடுப்பு குறுக்கு நிலையில் தட்டையானது. அதன் நுனி கூர்மையாய், விளிம்பில், சுழியுடையதாய் இருக்கின்றது. ஓங்கில்கள் 1.2 மீட்டரில் இருந்து 9.5 மீற்றர் நீளம் வரை உள்ளன
http://www.lingualogue.com/blog/wp-content/uploads/2009/08/dolphin-kiss2.jpg
டொல்பின் மீன்கள் அவை வாழும் பகுதியின் சுற்றுச்சூழலின் அளவுகோலாக இருக்கிறது. டொல்பின்கள்  அதிகம் வாழும் பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருப்பதாக சூழலியல் அறிஞர்கள் கருதுகின்றனர். இந்த டொல்பின்  மீன்களை பழக்கி பொழுதுபோக்கு பூங்காக்களில் பயன்படுத்தும் பழக்கம் நீண்ட காலமாக உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகிறது. பல பூங்காக்களில் எல்லாம் அதிசய விளையாட்டுகள் , வித்தைகள் காட்டுகின்றன இந்த டொல்பின்கள் . தவண்டு தவண்டு விளையாட்டு காட்டும் . பந்துகளை பரிமாறி அடித்து விளையாடும் .

இன்று இந்த டொல்பின்  மீன்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. காரணமாக இருப்பவன் வழக்கம்போல மனிதன்தான். மனிதன் எல்லாவற்றையும் பயன்படுத்துவான் . அவற்றை அழிப்பவனும் அவன் தான் . இதுதான் அவனது பழக்கம் . அழகான இந்த டொல்பின்கள் இப்போது அழிந்து வருகின்றன என்பதை நினைக்கும் போது வேதனையாக உள்ளது . 2007ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையினால் பன்னாட்டு ஓங்கில் (டால்பின்) ஆண்டாக அறிவிக்கப் பட்டுள்ளது. டென்மார்க்கில் உள்ள ஃபாரோத் தீவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான டால்பின் மீன்கள் படுகொலை செய்யப்படுகின்றன. இவை வேதனை அளிக்க கூடிய சம்பவமாக இருக்கிறது .
http://www.allposters.com/IMAGES/PYR/MPP50024-Dolphin-Trio-80mm.jpg
கூட்டம் கூட்டமாக வாழும் இவ்வினம் மிகவும் வேகமாக கடலில் நீந்த கூடியது .இதன் முதுகு பகுதி கறுப்பாகவும் அடிப்பகுதி வெண்மையும் கொண்டவை. இவ்வினங்கள் 32 உள்ளன .இவை 8  அடி நீளம் வரை உள்ளது .சிறந்த பாலூட்டி இனமான டொல்பின்கள் குட்டி பிறக்கும் போது அதன் வால்பகுதிதான் முதலில் வரும் .கடலில் வாழும் மீன்கள், நண்டுகளை விரும்பி உண்ணும்.
http://i.telegraph.co.uk/telegraph/multimedia/archive/01249/bottlenose_dolphin_1249780c.jpg
இவை 40 கிலோகிராம் எடையில் இருந்து 10 டன் எடை வரை உள்ளன. டொல்பின்கள்  ஊனுண்ணிகள் ஆகும். . பொதுவாக இவை 20 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. இவை உலகம் முழுவதும் காணப்படுகின்றன. சிறப்பாக கண்டத் திட்டுக்களின் ஆழம் குறைந்த கடல் பகுதியில் இவற்றைக் காணலாம். ஓங்கில்கள் அறிவுக் கூர்மை வாய்ந்த விலங்குகளில் ஒன்றாகும். இவை மனிதர்களுடன் நன்கு பழகுகின்றன

பிரசவமாகும் போது பல பெண் டொல்பின்கள் தாயைச் சுற்றி நின்று பாதுகாக்கின்றன. பிறந்தகுட்டியை முதல் மூச்சு விடச் செய்ய நீர்மட்டத்தின் மேல்பகுதிக்கு கொண்டு வருகின்றன. குட்டி தாயிடம் ஒரு வருடம் வரை பால் குடிக்குமாம். ஒவ்வொரு டொல்பினும் தனித்துவமான சீட்டி ஒலியை எழுப்புகின்றன. இவை மனிதர்களின் கை இரேகையைப் போல் ஒவ்வொரு டால்பினுக்கும் தனித்தன்மையானவை
http://www.dolphinhealing.net/images/dolphinsdm_800x446.jpg
இதன் ஒலி முனங்குவது போலவும் குரைப்பது போலவும் நம் காதில் கேட்கும். இதன் எதிரொலி மூலம் எதிரில் உள்ள பொருளின் தன்மையை டொல்பின் அறிந்து கொள்கிறது. ஒலி எழுப்பிய நேரத்தையும் அந்த ஒலி எதிரொலித்துத் திரும்ப வந்த நேரத்தையும் வைத்து அப்பொருள் இருக்கும் தூரத்தையும் அறிந்து கொள்கிறது. உணவுகளை வேட்டையாடவும் கூட இந்த ஒலியே டொல்பின்களுக்கு பெரிதும் உதவுகிறது.கப்பல்கள் கடலில் சென்று கொண்டிருக்கும்போது அதனருகே நீந்திச் செல்வதும் இதன் குணங்களில் ஒன்று.  மீனவர்களின் நண்பன் எனப்படும் இந்த அரியவகை உயிரினமான டொல்பின் இனம் ஆகும் .
http://media-cdn.tripadvisor.com/media/photo-s/00/18/06/c2/dolphin-dance.jpg
அழகான டொல்பின்களை அழிவின் விளிம்பில் இருந்து காத்து கொள்ள வேண்டும் . டொல்பின்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும் . அவை காட்டும் சாகசங்கள் எப்போதுமே பார்த்து ரசிக்கலாம் . மிகவும் அழகாக இருக்கும் .

5 comments:

சே.குமார் said...

புதிய தகவல்களுடன் நல்ல இடுகை.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

அழகான படங்களுடன் சுவையான தகவல்கள்.

Pavi said...

நன்றி குமார் உங்களது வருகைக்கும், கருத்துக்கும்

Pavi said...

நன்றி முருகானந்தன் ஐயா அவர்களே.

ஹரிஸ் said...

அழகான படங்கள்.
நிறைய தகவல்கள்.தொடருங்கள்..

டொல்பின்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும் .//
எனக்கும் தான்..