Friday, December 4, 2009

தலயின் அசலின் வருகைக்காக காத்திருக்கும் ரசிகர்கள்

 
பல எதிர் பார்ப்புக்கு உள்ளாகி இருக்கும் அஜித்தின் அடுத்த படமான அசல் எப்போது வெளிவரும் என அவரது ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். பொங்கலுக்கு வெளிவரும் அசல் என்றும் சொல்கிறார்கள் . இல்லை பொங்கலுக்கு பிறகு எனவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. 
வெற்றி நிச்சயம் 

 

அமர்க்களம், அட்டகாசம் என வெற்றி பட கூட்டணியான சரண் , அஜித் கூட்டணி இந்த படத்திலும் ஒன்று சேர்ந்துள்ளனர் . பல எதிர் பார்ப்புக்கு உள்ளாகிஉள்ளது . அஜித்தின் அசல் கெட்டப்பு  பெரிதும் எதிர்பார்க்கபடுகிறது . வித்தியாசமான காட்சி அமைப்பு . மற்றும் சக நடிகர்கள் என எதிர்பார்ப்புக்கு பஞ்சமில்லை .

  இந்தியில் இருந்து வந்திருக்கும் வில்லன் கரக்டர் , மற்றும் வாரணம் ஆயிரம் படத்தில் நடித்த சமீரா ரெட்டி , பாவனா என நடிகைகளும் நடிப்பின் சிகரம் பிரபு என பட்டாளங்கள் அதிகம் .


எல்லோரும் பார்த்து ரசிக்கும் வண்ணம் நல்ல படத்தை கொடுப்போம் , அஜித்தின் ரசிகர்களுக்கு அசல் நல்ல தீனியாக இருக்கும் என இயக்குனர் சரண் கூறி உள்ளார் . 


 

வில்லனை... ஹோலிவுட்டில் இருந்து கூட்டி வராமல் பாலிவுட்டில் இருந்து கூட்டி வந்திருக்கிறார். இந்த வில்லன் வேறுயாரும் அல்ல. பிரபுதேவாவின் மிஸ்டர் ரோமியோ படத்தில் வில்லனாக நடித்த அதே சுரேந்திரபால் தான். இவர் அமிதாப்பச்சன் முதல் ஹ்ரித்திக் ரோஷன் வரை ஏகப்பட்ட இந்தி பிரபலங்களின் படங்களில் வில்லனாக நடித்தவர். இவர் மிஸ்டர் ரோமியோவைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடிக்கும் தமிழ் படம் இது.


இது பற்றி இந்த வில்லன் நடிகர் கூறும்போது ::  ‘சரண் அமைதியாக இருந்தாலும் அவர் படங்கள் ஆக்ரோஷமாக இருக்கும்... அந்த வகையில் இந்தப் படமும் ஆக்க்ஷன் படமாக இருக்கும். அஜித் நல்ல திறமையான நடிகர். அஜித்தும் சரணும் இந்தப் படத்தில் இணைவதால் நிச்சயம் இந்தப் படம் வெற்றிப் படமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தப் படத்திற்குப் பிறகு தமிழில் எனக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று அசலில் நடிக்கும் வில்லன் சுரேந்திரபால் சொல்கிறார்.

ம்ம்ம்ம்ம்ம்ம் பார்ப்போம் . அசல் எப்பிடி இருக்கிறது என்று ? அசலுக்காக காத்து இருக்கிறோம் .

 




4 comments:

sathishsangkavi.blogspot.com said...

நாங்களும் காத்து இருக்கிறோம்..........

அசல் அசத்தலா இருக்கும்னு..............

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம் காத்து இருப்போம்

Unknown said...

poi polappa paarunga

Arun said...

Nice review, wishes to Ajith team for great success from this flim..