Saturday, December 5, 2009

மருதாணி போடல்


இப்போது ஏதாவது நிகழ்ச்சிகள் என்றால் தவறாமல் கூடுதலான பெண்கள் மருதாணி போட்டு வருவது வழமையாகி விட்டது . 

முன்னைய காலத்தில் மருதாணி கைகளுக்கு போடும் வழக்கம் இருந்தது . அதைத்தான் இப்போது சிலர் பச்சை குத்துதல் என்று சொல்கிறார்கள் .


கல்யாணம் ஆகப்போகும் பெண்ணுக்கு கல்யாணத்துக்கு முதல் நாள் இந்த மருதாணி போடுவார்கள் . இதை இப்போது மெஹந்தி போடல் என்று கூறுவார்கள் . முதல் நாள் போட்டால் தான் கல்யாண நாள் அன்று பளபளப்பு ஆகவும், அழகாகவும் இருக்கும் என்பதற்க்கு ஆகவே அப்படி செய்கிறார்கள் .

எங்களுக்கு ஏதாவது ஒரு டிசைனில் ஏதாவது வரைய தெரியுமாக இருந்தால் அந்த டிசைனை போல நாமே போடலாம் . கடைகளில் இப்போது ஒரு கோன் வடிவில் ஒரு பக் போல் கிடைக்கிறது . அதை வாங்கி எங்களுக்கு தேவையான டிசைனில் நாமே கைகள் , கால்களுக்கு போட்டு அழகு படுத்தலாம் .
 

எங்களுக்கு நாங்களே போடுவதை விட இன்னொருவர் போட்டால் இன்னும் நல்லம் என்று சொல்கிறார்கள் . இயற்கையானது . கலப்படம் இல்லாதது இந்த மருதாணி .

பாருங்கள் எப்படி எல்லாம் மெஹந்தி போடுகிறார்கள் என்று ...............வடிவாக இருக்கின்றது அல்லவா ? விரும்பியோர் நீங்களும் மருதாணி போட்டு ஒரு தடவை பாருங்களேன் .


 
 

  
  
  
 

2 comments:

sathishsangkavi.blogspot.com said...

படங்கள் எல்லாம் அருமை பவி.....

மருதாணி வைக்கும் போது இதையும் செஞ்சு பாருங்க......

மருதாணி நன்றாக கலர் பிடிக்க மருதாணி ஆயில் மற்றும் கிராம்புத் தைலம் கலந்து விடவும்.

கைகளில் இருந்து மருதாணி உதிராமல் இருக்க, கொஞ்சம் காய்ந்தவுடன் சர்க்கரையும் எலுமிச்சைசாறும் கலந்து வைக்கவும்.

அதிக கலர் கைகளில் பிடிக்க, சூடான வாணலியில் கிராம்பு போட்டு வெடிக்க விட்டு, அதன் மேல் வரும் புகையில் கைகளை காட்டவும்.

Pavi said...

உங்களது தகவலுக்கு எனது நன்றிகள் .