Saturday, March 6, 2010

பனம் கிழங்குக்கு சரியான கிராக்கி

http://upload.wikimedia.org/wikipedia/ta/5/54/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.JPG
பனம் கிழங்கு தோலுடன்
இப்போது பனம் கிழங்கு காலம் . எல்லோர் வீட்டிலும் எல்லா இடங்களிலும்  பனம் கிழங்கை காணலாம் . பனம் கிழங்கை விரும்பாதோர் எவரும் இல்லை . எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள் .

மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது இந்த பனம் கிழங்கு . பனம் கிழங்கை அவித்து சும்மாவும் சாப்பிடலாம் .  வெங்காயம் , பச்சை மிளகாய் போட்டு துவைத்தும் உண்ணலாம் . கூடுதலாக பல்லு இல்லாதவர்கள் இப்படி உண்பார்கள் .  
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVieoGAMaqLb8qy_Ta-8FJzqjz-IudqDSdDGPOCv4_R3C9TV8yHOX62G_B-A7XwwAShjJBcN948v_6PwwoJj72R0UyISNzUwSaR-JtgRn0T9rW_2go8SW9C1v5AmGOyUscXd_M0sfTucy-/s400/panam+kilangku.JPG  
பனம் பழங்கள் கிடைக்கும் காலங்களில் விதைகளைச் சேமித்து வைக்கும் மக்கள், உரிய காலத்தில் மண்ணைக் குவித்து மேடை போல அமைத்து, அதன்மேல் பனம் விதைகளைப் பரவி விடுவர். விதை முளைத்துக் கிழங்கு உருவானதும் அதனைக் கிண்டி எடுத்துப் பயன்படுத்துவர்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJd3xiYJBrgyf6qGmlio3ChD1LSMcPeIQ-CTwSRKNezPqleBRbG2CrrtjTiZboX9nMORCsrBlb6MSiyoL3XXsj2EExUPeRroEOoI4gVk7dsRRa0X2nl-jbThjyJKrEonTBrHiqzV09B1Q/s320/800px-Borassus_ake-assii_MS_1315.jpg
பனம் பழம்
 சரி . இனி பனம் கிழங்கு எவ்வாறு உருவாகின்றது ? பனையில் இருந்து விழும் பனம் பழத்தின் விதை தான் பின்பு பனம் கிழங்காக வருகின்றது . பனம் விதைகள் முளைக்கும்போது, நிலத்துட் செல்லும்வேரில்  மாப்பொருள் சேமிக்கப்பட்டுக் கிழங்காக  உருவாகின்றது. இதுவே பனங்கிழங்கு ஆகும்.

ஒரு முனை கூராகவும், மறு முனை சுமார் ஒரு அங்குலம் விட்டம்  கொண்டதாகவும் உள்ள ஒடுங்கிய  கூம்பு வடிவான இக் கிழங்கு ஒரு அடி வரை நீளமானது.

பனங் கிழங்கைப் பச்சையாக உண்பதில்லை. உடனடியாக உண்பவர்கள் அதனை நீரில் இட்டு அவித்து உண்பர். கிழங்கை அவிக்காமல் நெடுக்கு வாட்டில் இரண்டாகக் கிழித்து, வெய்யிலில் காய விடும்போது, சிலநாட்களில் அது நீரை இழந்து, கடினமான ஒன்றாக ஆகும். இது ஒடியல்  என அழைக்கப்படுகின்றது. 

இதை அப்படியே உண்பதில்லை. இதனை மாவாக்கிப் பிட்டு , கூழ்  முதலிய உணவு வகைகளைச் செய்யப் பயன் படுத்துவது வழக்கம். அவித்த கிழங்கை வெய்யிலில் காயவிட்டுப் பெறப்படும் பொருள் புழுக்கொடியல்  (புழுக்கிய ஒடியல்) எனப்படும். 

புழுக்கொடியலை நேரடியாகவே உண்ணலாம். ஒடியல், புழுக்கொடியல் இரண்டுமே, நீண்டகாலம் கெட்டுப்போகாமல் இருக்கக் கூடியன.
http://images.travelpod.com/users/indianature/7.1216326600.mbpm-palmyra-palm-fruit.jpg
பனங்கிழங்கை அவித்து காய வைத்து வரும்  புளுக்கொடியல்  மாவை காலை உணவாக உண்ணலாம் . அதற்க்குள் சீனியும் , தேங்காய் பூவும் போட்டு குழைத்து சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும் . வயிற்றுக்குள் பூச்சி இருந்தால் இறந்துவிடும் . 

 
dsc022439lg.jpg
 
 பனங்கிழங்கை அவிக்காது எடுக்கப்படும் ஒடியலில் இருந்து ஒடியல் மா எடுப்பார்கள். ஒடியல் மாவில் இருந்து ஒடியல் பிட்டு, ஒடியல் கூழ் ஆகிய உணவுகள் தயாரிக்கப்படுகிறது. இவை  மிகவும்  பிரபலமான  உணவுகள்.

பனம் கிழங்குக்கு இப்போது இருக்கும் கிராக்கியோ கிராக்கி . அப்பிடி கிராக்கி . யாழ்ப்பாணத்துக்கு இப்போது எத்தனையோ பஸ் , வான் என்று  போய் கொண்டு இருக்கின்றன . அதுவும் தீவுப்பகுதிக்கு கூடுதலான பயணிகள் போய் வருகிறார்கள் . நயினாதீவுக்கு அதிகமான சிங்களவர் புத்தகோவிலை வணங்க செல்கிறார்கள் . குறிகட்டுவான் பகுதியில் பனம் கிழங்குகளை அடுக்கி வைத்து  விற்கிறார்கள் . ஓகோ என அமோக விற்பனை நடக்கின்றது .

இப்போது எல்லா இடங்களிலும் பனம் கிழங்கு விற்பனை சூடு பிடித்து இருக்கிறது . ஒரு கிழங்கு 10 ரூபாய்க்கு கிடைக்கிறது . வெளிநாட்டவர்கள் பலர் விரும்பி வாங்கி புளுக்கொடியலாக வாங்கி வெளிநாட்டுக்கு கொண்டு செல்கிறார்கள் . 

பனையின் பயன்கள் ஏராளம் . அதன் ஒருபகுதி பனம் கிழங்கு மட்டும் தான் நான் சொல்லி இருப்பது .    

19 comments:

தமிழ் அமுதன் said...

அடடா ...! பனங்கிழங்கை பற்றி அறிந்திடாத பல முக்கிய தகவல்கள்...!இதுவரை அவித்த கிழங்கை உண்டதோடு சரி..! நீங்கள் சொல்லியிருக்கும் தகவல்கள் படி முயற்சிக்க வேண்டும்..! சுட்ட பனங்கிழங்கும் நன்றாகத்தான் இருக்கும்..! தமிழ் நாட்டிலும் பனங்கிழங்கு ஏராளமாய் கிடைக்கிறது..! ஆனால் அவித்து உண்பதை தவிர வேறுவகையில் பயன்படுத்தியதாக நான் அறிந்திருக்க வில்லை..!

தமிழ் அமுதன் said...

பனம்பழம் சுட்டு சாப்பிடுவது பிடித்தமான விஷயம்..!

பனம் கொட்டையில் இருந்து கிழங்கு முளைவிடும் பக்குவத்தில் இருக்கும் போது
அந்த கொட்டைக்குள் இருக்கும் பூ மிக சுவையாக இருக்கும்..! அதை உடைத்து சாப்பிடுவதும் உண்டு...!

தமிழ் அமுதன் said...

மேலும் பனைமரம் பலவகைகளில் பலன் அளிக்க கூடியது அதை தமிழ் நாட்டில் முழுமையாக பயன்படுத்தியதாக தெரியவில்லை..!

இப்படி உள் நாட்டில் கிடைக்கும் தாவர புதையல் களை சரியாக பயன்படுத்தி கொண்டால்...!வெளிநாட்டுகாரன் கத்தரிக்காய்களை விற்க இங்கே வரமாட்டான்...!

ஆடுமாடு said...

பனங்கிழங்கை தமிழ்நாட்டுல அவிச்சு, அல்லது காய வச்சு, துண்டு துண்டா நறுக்கி தின்போம்.

இதுல இவ்வளவு விஷயம் செய்யலாமா?

தகவலுக்கு நன்றி.

EKSAAR said...

send me some..
eksaar.blogspot.com

Muruganandan M.K. said...

அழகான படங்களுடன் உங்கள் பனங் கிழங்கு பற்றிய பதிவு நாவூற வைக்கிறது. நன்றி

Anonymous said...

nalla pathivu pavi.
panam kilankai ninaikka vaai oruthu.


siva

akila said...

அருமை பவி. ஆசையா இருக்கு பனம் கிழங்கு சாப்பிட .

Anonymous said...

pavi kilanku sappida veeta varava?


anpudan
siva.

Pavi said...

நன்றி ஜீவன் .
பல தகவல்களை உங்களிடமிருந்தும் நான் அறிந்து கொண்டேன் . நீங்களும் என்னுடைய பதிவில் இருந்து பலவிடயங்களை அறிந்து கொண்டதற்கு நன்றிகள் .

பனம் கொட்டையில் இருந்து கிழங்கு முளைவிடும் பக்குவத்தில் இருக்கும் போது
அந்த கொட்டைக்குள் இருக்கும் பூ மிக சுவையாக இருக்கும்..! அதை உடைத்து சாப்பிடுவதும் உண்டு...!ம்ம்ம்ம்ம்ம் அது பூரான் என்று சொல்வார்கள் . மிகவும் இனிப்பாக ருசியாக இருக்கும் . நானும் சாப்பிட்டது உண்டு .

Pavi said...

நன்றி உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் ஆடுமாடு.

Pavi said...

நன்றி Dr.எம்.கே.முருகானந்தன்
பனம் கிழங்கு வாங்கி சாப்பிடுங்கோ .

Pavi said...

நன்றி சிவா .
சாப்பிடுங்கோவன்

Pavi said...

நன்றி அகிலா
இப்போது தானே எல்லா இடங்களிலும் கிடைக்கிறது .

Pavi said...

நன்றி சிவா .
என்னிடம் இப்போது கிழங்கு இல்லை சிவா .
கடையில் வாங்கி சாப்பிடு .

இருமேனிமுபாரக் said...

வறட்சியான இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு பனம் கிழங்கு சிறந்த உணவாகவும்,ஏழைகளின் துணைத் தொழிலாகவும் இருக்கின்றது. ஆனால் முன்னைப் போல் இல்லாமல் இப்பொழுது தேடித் திரிந்துதான் அதை வாங்கி உண்ண வேண்டியிருக்கிறது. பனை வாரியம் என்று வைத்திருக்கிறார்கள் ஆனால் உறுப்படியான ஒன்றும் செய்வதில்லை. தோற்றுப் போன அரசியல்வாதிகளுக்கு ஒக்காந்து திங்க ஒரு மடமாகவே அதை பயன் படுத்துகின்றனர்.

Unknown said...

இனிப்பாக ருசியாக இருக்கும் .
நானும் சாப்பிட்டது உண்டு .

Unknown said...

இனிப்பாக ருசியாக இருக்கும் .
நானும் சாப்பிட்டது உண்டு .

Aradhya said...

பனங்கிழங்கு நன்மைகள் மற்றும் தீமைகள்