Thursday, March 25, 2010

தனித்திறமை

http://keepingkidsfirst.files.wordpress.com/2009/03/leadership.jpg

எல்லோருக்குள்ளும் திறமை இருக்கிறது . அதனை எல்லோரும் பயன்படுத்துவதில்லை . தனித்திறமைகள் எல்லோரிடமும் உண்டு . ஒருவருக்கு கிரிக்கட்டில் ஆர்வம் இருக்கும் என்றால் அவருக்கு மற்றைய விளையாட்டுகளில் ஆர்வம் குறைவாக இருக்கும் . அவரின் விருப்பம் போலவே கிரிக்கட்டில் அவர் தனது பயிற்ச்சிகளை மேற்கொள்ளும் இடத்தில் அவர் முன்னேறலாம் .


சிலருக்கு தலைமை தாங்கும் பண்பு அதிகமாக இருக்கும் . பாடசாலைகளில் வகுப்பு தலைவனாகவும் , ஒவ்வொரு விளையாட்டுகளுக்கும் தலைவனாகவும் செயற்பட்டும் திறமை இருக்கும் . அவனுக்கு குழுவாக இயங்கி வெற்றியடைய செய்யும் மனோதிடமும் , தலைமை தாங்கும் பாங்கும் அவனிடத்தில் இருக்கும் இடத்தில் அவன் ஒரு சிறந்த தலைவனாக இருக்கிறான் . அவனிடம் இருக்கும் தனித்திறமை அது .
http://www.profitminute.com/blog/wp-content/uploads/2009/12/leadership-1.gif
கிரிக்கட்டில் பார்த்தால் சில போட்டிகளில் தலைவர் செயற்படும் விதத்தில் , சாதுரியத்தில் , அவர் கைக்கொள்ளும் உத்திகளினால் அந்த அணி வெற்றி பெற கூடியதாக இருக்கிறது . அந்த தலைவர் சில உத்திகளை கையாளாமல் விட்டால் அல்லது வீரர்களை சிறந்த முறையில் களத்தடுப்பு பக்கம் நிறுத்தாமல் விட்டால் என பல காரணங்கள் இருக்கிறது . அப்படி செய்யும் இடத்தில் அந்த அணி அன்றைய போட்டியில் தோல்வியை சந்திக்கிறது .

சிறந்த தலைமைத்துவம் வேண்டும் . அது எல்லாவற்றுக்கும் பொருந்தும் . அது ஒவ்வொரு நாட்டையும் எடுத்து கொண்டாலும் இந்த தலைமைத்துவம் விளங்கும் . அதாவது ஒரு நாட்டின் தலைவரின் செயற்பாட்டால் தான் அந்த நாடு முன்னேறுவதும் , பொருளாதரத்தில் சரிவதும் அந்த நாட்டின் தலைவர் எடுக்கும் ஒவ்வொரு செயற்பாடுகளிலே தங்கி உள்ளது. 
http://www.iwoman.in/images/images/images/CAPTAN.jpg
இன்று விதைப்பது, இன்னொரு நாளில்தான் பலன் கொடுக்கும். தலைமை தாங்குகிற மனோபாவமும் அப்படித்தான். குழந்தைப் பருவத்தில் வகுப்புத் தலைமை மாணாக்கனாக இருப்பது, விளையாட்டு, மாணவர் மன்றம் போன்ற இதர நடவடிக்கைகளில் ஈடுபடுவது இவையெல்லாம் பின்னாள் உயர்வுக்கு இந்நாளில் போடப்படும் அடித்தளமாகும். தலைமைக்குரிய தகுதியை பரீட்ச்சைகள் தீர்மானிப்பதில்லை . உலக அறிவு , பறந்து பட்ட அறிவு மிகவும் முக்கியம் .

எல்லோரும் பிறக்கும் போது நல்லவர்களும் இல்லை . கெட்டவர்களும் இல்லை . பிறந்தவுடன் தலைவன் ஆக முடியாது . அவர்கள் தான் வாழும் வீடு, சமூகம் என்ற பல காரணிகளினால் உருவாக்கப்படுகிறார்கள் . சிறு வயதிலேயே தலைமைக்குரிய மனோபாவத்தை பெற்றோர் அவர்களுக்குள் வளர்த்து விட்டிருப்பார்கள்.
http://transition2008.files.wordpress.com/2008/12/leadership.jpg
நிறுவனத்தின் தலைவர், விளையாட்டின் தலைவர் , நாட்டின் தலைவர் என அவர்களின் பின் புலன்களும் இருக்கும் . அவர்களின் தந்தை, தாய் , தத்தா , சித்தப்பா என அவர்களின் பின் புலன்களும் அவர்களை தலைமை பதவிக்கு இட்டு செல்ல வைக்கிறது . நான் தாத்தாவை போல் இருக்கணும் . எனது தந்தை போல் வங்கியில் முகாமையாளராக இருக்க வேண்டும் என சிறு வயதிலே அவனுக்கு இந்த எண்ணம் வந்து விடுக்கிறது .
http://www.swu.edu/news/headlines_09/images09/leadershipPCtour.jpg
பல தலைமை பொறுப்புகளை ஏற்கிறான் . பின்பு தனது இலச்சியத்தை அடைகிறான் . சிறந்த தலைமைத்துவத்தை அடைகிறான் . அவனுக்குள் திறமை என்பதும் கூட இருந்தமையால் தான் இந்த நிலைக்கு அவன் செல்ல உதவியது .
. ஒரு நிறுவனத் தலைவர், விளையாட்டுக் குழுவின் கேப்டன், ஆராய்ச்சித் துறை முதல்வர் என்று அவரவரின் பின்னணியை ஆராய்ந்தால் உண்மை விளங்கும்.

6 comments:

Unknown said...

அருமையான விளக்கத்துடன் கூடிய நல்ல பதிவு mullaimukaam.blogspot.com

Anonymous said...

ellorum padikka vendiya pathivu.


mano

Anonymous said...

asaththikkondu irukkeenka pavi. nalla pathivu. padankal arumai.



suba.

Pavi said...

நன்றி JKR
உங்களது வருகைக்கும், கருத்துக்கும்

Pavi said...

நன்றி மனோ .
ம்ம்ம்ம்ம்ம்ம் நீங்க சொன்ன சரி தான்

Pavi said...

நன்றி சுபா .
உங்களை போல் எல்லோரும் என்னை ஊக்குவிப்பதால் தான் என்னால் இவ்வளவு முடியுது . நல்ல பதிவுகளை உங்களுக்கு தர .