Friday, March 26, 2010

திருட்டு சம்பவங்கள்

http://www.istockphoto.com/file_thumbview_approve/9980514/2/istockphoto_9980514-thief-with-heavy-bag-of-cash.jpg
நாட்டில் இப்போது அதிகமான இடங்களில் வழிப்பறிகளும் , கொள்ளைகளும் சர்வ சாதரணமாக இடம்பெற்று வருகின்றன . அதிகமாக தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகளில் கூடுதலாக இந்த கொள்ளை சம்பவங்கள் இடம்பெறுகின்றன .
http://www.alexbeads.com/images/chain_gold.JPG
பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியரை வழிமறித்த இளையர்கள் இருவர் அவரிடம் இருந்த சங்கிலியை பறிக்க முற்பட்ட போது ஆசிரியரும் சங்கிலியை பறிக்க வந்த திருடர்களும் தள்ளுப்பட்டுள்ளனர் . தாங்கள் கொண்டு வந்த கத்தியால் ஆசிரியரின் கைகளில் குத்தி விட்டு  ஆசிரியரை வாய்க்காலுக்குள் தள்ளி விட்டு அவர் போட்டு இருந்த சங்கிலி , காப்பு என்பவற்றை களவாடி சென்றுள்ளனர் . அதுவும் சன நடமாட்டம் உள்ள இடத்தில் இந்த சம்பவம் நடந்தது . ஒருத்தர் கூடி தடுக்க முன்வரவும் இல்லை . திருடர்கள் போன பின்பும் அந்த ஆசிரியருக்கு உதவி செய்யவும் இல்லை . மனிதாபிமான உதவியை கூட நாம் இன்னொருவரிடம் இருந்து எதிர்பார்க்க முடியாத அளவுக்கு இருக்கின்றனர் மக்கள் .
http://www.fineartpromo.co.uk/wp-content/2009/03/40thieves.jpeg
எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் . பஸ்ஸில் பயணிக்கும் போது இயலாதவர்கள் வந்தால் அவர்களுக்கு பஸ்ஸில் ஆசனத்தை கொடுக்க வேண்டும்  என்றெல்லாம் சொல்லி கொண்டு இருக்கிறோமே தவிர நடைமுறையில் இவை எல்லாம் நடக்கின்றனவா?

ஒருவர் செத்து கிடந்தால் அவரை கடந்து போகும் உலகம் இது . காலம் இது . என்ன செய்வது . அப்போது இருக்கும் போது எல்லோரிடமும் மனிதாபிமானம் இருக்கும் என்பதை நாம் எதிர்பார்க்க முடியாது . ஆயிரத்தில் ஒருவர் மனிதாபிமானம் உள்ளவராக இருப்பர். தம்பி படத்தில் மாதவனை போல .
http://images.veer.com/IMG/PILL/MAI/MAI0002391_P.JPG
ஒரு வேலை காரணமாக வந்த இடத்தில் ஒரு இடத்துக்கு சென்றிருக்கிறார் அந்த நபர் . அவரிடம் ஒரே ஒரு சங்கிலி மட்டும் தான் இருந்தது. போட்டு கொண்டு போய் இருக்கிறார். ஒருவர் இதை கவனித்து விட்டு கழுத்தில் கை வைத்து அறுத்து கொண்டு போய் விட்டார் . வந்த வேலை முடியாமல் சங்கிலியை பறி கொடுத்தது தான் மிச்சம் அந்த நபருக்கு .

தங்கத்தின் விலை ஏறிக்கொண்டு போகிறது தானே. திருடர்கள் இப்படி ஒவ்வொன்று என்று அறுத்தால் பெரும் பணக்காரர் ஆகி விடுவார்கள் போல் உள்ளது . அதுவும் நம்ம ஆக்கள் போடுவது கால்பவுண் , அரைபவுணா? இரண்டு பவுண், மூன்று பவுண் அல்லவா ?
http://files.posterous.com/scanman/WZ4lZjDNRQk0gQgeS6hJUHKZxFZ3vdmALyOogGxm2pfD8oZQUr4hM9SCGwdV/thieves.jpg.scaled.1000.jpg?AWSAccessKeyId=1C9REJR1EMRZ83Q7QRG2&Expires=1269587073&Signature=CGdEqN8abdowj%2BHEfSr%2BX1byDhs%3D
அடுக்கு மாடிகளுக்கு சென்று திருட செல்வது . ஒருவரின் பெயரை சொல்லி வீட்டுக்குள் நுழைந்து பின்பு தகவல்களை சேகரித்து விட்டு வேறு ஒருவரிடம் இந்த தகவலை கூறி அந்த வீட்டுக்கு அனுப்புவது என்று பல சம்பவங்கள் நடக்கின்றன. அந்த வீட்டில் யார் யார் இருக்கிறார்கள் . என்று கவனித்து விட்டு ஒரு கிழவி தான் அங்கு இருக்கிறது  என்பதை தெரிந்து கொண்டு வீட்டுக்கு போய்  அவரை  தள்ளி விழுத்தி விட்டு அவரிடம் உள்ள காப்பு, சங்கிலி, மோதிரம் என்பவற்றை பறித்து கொண்டு சென்று விட்டார்கள் .
http://www.mooneyland.com/thiefCartoon.jpg
தினம் தினம் இவ்வாறன சம்பவங்கள் நடக்கின்றன . அவை எல்லாம் எல்லோருக்கும் தெரிவதில்லை. சங்கிலியை பறி கொடுத்தவருக்கு  திண்டாட்டம் , களவு எடுத்தவனுக்கு கொண்டாட்டம் தான் என்று தான் சொல்ல வேண்டி உள்ளது .

இப்படியான சம்பவங்கள் அதிகரித்து விட்ட நிலையில் எல்லோரும் கலர் கலர் மாலைகள் கடையில் விற்கிறார்கள் . அவற்றை வாங்கி போடுங்கள் . மணிகள் கோர்த்த மாலைகள். என பல டிசைன்களில் கடைகளில் கிடைக்கின்றன. விலையும் குறைவு . அப்படி எல்லோரும் போட தொடங்கினால் தான் இந்த திருட்டு சம்பவங்களை ஒழிக்கலாம்.


6 comments:

அண்ணாமலையான் said...

gud idea

Anonymous said...

imitation nakaikalai podunkovan


latha

Anonymous said...

ini maalaikal thaan vanki poda vendum. mmmmmm nalla idea thaan.


vishnu

Pavi said...

வாங்க அண்ணாமலையான்
நீண்ட நாட்களுக்குப்பின்
நன்றி .

Pavi said...

நன்றி லதா
வாங்க என்னுடைய தளத்தை பார்த்து உங்க கருத்த சொல்லுங்க .

Pavi said...

விஷ்ணு இப்ப உங்களுக்கு விளங்குது தானே . என்ன போடா வேண்டும் என்று .
உங்களுக்கும் களவு குடுத்த அனுபவம் உண்டு தானே .