Sunday, April 4, 2010

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சாதனை வெற்றி




நேற்று  ஐ.பி.எல்.லின் 32   வது ஆட்டம் சென்னையில் நடைபெற்றதுராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் சென்னை மோதியது. நாணய சுழற்ச்சியில் வென்ற  சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது . தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய மாத்யூ ஹெய்டனும், முரளி விஜய்யும் விளாசித் தள்ளினர்.  அபாரமாக ஆடினர் .  முரளி விஜய்யின்  துடுப்பாட்டம் சும்மா அகோரமாய் இருந்தது  .

Front page news and headlines today
பிரமிப்பூட்டும் வகையில் ஆடிய முரளி விஜய், ராஜஸ்தான்  பந்து வீச்சை  தவிடுபொடியாக்கினார். ஆட்டத்தின் கடைசி ஓவர் வரை அடித்து நொறுக்கிய முரளி  127    ஓட்டங்களை  குவித்து புதிய சாதனை படைத்தார். சென்னை அணியின் அதிரடி நட்சத்திரமாக தொடர்ந்து ஜொலிக்கிறார் தமிழக வீரர் முரளி விஜய். பரபரப்பான  போட்டியில் முரளி விஜய் 56 பந்தில் 127 ஓட்டங்களை எடுத்தார் .
.
கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்றுவரும் ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை அணியின் 246 ஓட்டங்களே  மிக அதிகபட்ச ஓட்டங்களாகும் . இதற்கு முன்னர் கடந்த ஐ.பி.எல் போட்டியில் பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 240 ஓட்டங்கள்  எடுத்ததுவே அதிகபட்ச ஓட்டமாக  இருந்தது. இதுவரை எந்தப் போட்டிகளிலும் இல்லாத அளவுக்கு இரு அணி வீரர்களும் சேர்ந்து அதிகபட்சமாக 30 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்தனர். அதேபோல் 39 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன. 



6வது ஓவரில் வாக் வைடாக வீசிய பந்தை ஹெய்டன்  அடிக்க முற்பட்டு வாட்சனிடம் பிடி  கொடுத்து அவுட்டானார். அவர் 21 பந்துகளில் 34 ஓட்டங்களை  குவித்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும், ஒரு கட்டத்தில் ஹெய்டன் தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகளை அடித்து ராஜஸ்தான் அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.ஹெயடனுக்குப்பின்   சுரேஷ் ரெய்னா, விஜயுடன் ஜோடி சேர்ந்தார். அவர் 7 பந்துகளில் 13 ஓட்டங்கள்  எடுத்திருந்தபோது வார்னே பந்தில் டெய்ட்டிடம் பிடி கொடுத்து அவுட்டானார்.
 
ஆல்பி மார்கல், முரளி விஜய் இணைந்து ராஜஸ்தான் பந்துவீச்சை சிதறடித்தனர். யார் பந்துவீசினாலும் அடித்து நொறுக்கிய இவர்கள், சென்னை ரசிகர்களை  பிரமிக்க வைத்தனர்  . யூசுப் பதான் வீசிய  14வது ஓவரில் இருவரும்  2 சிக்சர், 2 பவுண்டரி அடிக்க, மொத்தம் 22  ஓட்டங்கள்  எடுக்கப்பட்டன. நார்வல் வீசிய 16வது ஓவரில் விஜய் 3 சிக்சர், மார்கல் ஒரு சிக்சர் அடிக்க, மொத்தம் 26 ஓட்டங்கள்  எடுக்கப்பட்டன. 
 
வார்ன், வாட்சன் ஓவர்களிலும் பவுண்டரி, சிக்சர்கள் பறந்தன. மார்கல் 26 பந்தில் தனது இரண்டாவது அரைசதம் எட்டினார். வாட்சன் வீசிய கடைசி ஓவரின் 2வது பந்தில் மார்கல்(62) ஓட்டம் எடுத்து  அவுட்டானார். 4வது பந்தில் முரளி விஜய் 127 ஓட்டங்களுக்கு (8 பவுண்டரி, 11 சிக்சர்) அவுட்டானார். 5வது பந்தில் தோனி(0) வெளியேறினார். சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 246  ஓட்டங்களை எடுத்தது.


சூப்பர் கிங்ஸ் அணி புதிய சாதனையைப் படைத்தது. சென்னை அணியின் முரளி விஜய் அபாரமாக ஆடி அட்டகாசமான சதத்தைப் பெற்றார் .சென்னை அணியும் ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிகபட்ச ஓட்டங்களை  எடுத்து புதிய சாதனை படைத்தது. முதல் சுற்றுப் போட்டியில் ஐந்து தோல்விகளைச் சந்தித்தது சென்னை. அதில் நான்கு தொடர் தோல்விகளாகும். மூன்றில் மட்டுமே சென்னை வென்றிருந்த்து. இனி வரும் போட்டிகள் அனைத்திலும் சென்னை வென்றாக வேண்டிய இக்கட்டான நிலை. எனவே ஒவ்வொரு போட்டியும் அந்த அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்த்தாக மாறியுள்ளது.
 http://www.rajasthanroyals.com/Data/Sites/1/skins/ipljaipur/img/downloads/team_800.jpg
பதிலெடுத்து ஆடிய  ராஜஸ்தான் அணி . லம்ப் 37 ஓட்டங்கள் எடுத்து  மார்கல் பந்தில் வெளியேறினார். யூசுப் பதான்(4) ஏமாற்றினார். இதற்கு பின் வாட்சன் மிரட்டினார். மார்கல் ஓவரில் 'ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார். பின் முரளிதரன் வீசிய  15வது ஓவரில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி சேர்த்து 23 ஓட்டங்கள்  எடுத்தார். இந்த நேரத்தில் மீண்டும் பந்துவீச வந்த போலிஞ்சர், வாட்சனை(60) போல்டாக்கி திருப்புமுனை ஏற்படுத்தினார். முரளிதரன் சுழலில் பசல்(4) வீழ்ந்தார்.

கடைசி ஓவரில் 35 ஓட்டங்கள்  எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. சுதீப் தியாகி பதட்டப்படாமல் பந்துவீச, 11 ஓட்டங்கள்  தான் எடுக்க முடிந்தது. ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 223 ஓட்டங்களை  எடுத்து தோல்வி அடைந்தது. போராடிய ஓஜா 94 ஓட்டங்களுடன்  (8 பவுண்டரி, 6 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தார். கடந்த போட்டியில் பெங்களூருவை வென்ற சென்னை அணி, மீண்டும் வெற்றி பெற்று, சொந்த ஊரில் சாதித்துள்ளது. ஆட்டநாயகன் விருதை முரளி விஜய் தட்டிச் சென்றார். கடைசி ஓவர் வரை போராடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆட்டம் வீணானது. தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்த சென்னை அணி, அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.
 http://wallpapers99.com/Chennai_Super_Kings_IPL_Season_2--w800x600--0--0--images/wallpaper/800x600/Chennai_Super_Kings_IPL_Season_2_7706.jpg
நேற்று 34 ஓட்டங்கள் எடுத்த சென்னை கிங்ஸ் அணியின் ஹைடன், ஐ.பி.எல்., வரலாற்றில் ஆயிரம் ஓட்டங்களை  கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமை பெற்றார். இவர் 25 போட்டிகளில் மொத்தம் 1022  ஓட்டங்களை  எடுத்துள்ளார்.

சென்னை அணியின் முரளி விஜய்-ஆல்பி மார்கல் ஜோடி, 3வது விக்கெட்டுக்கு 152 ஓட்டங்களை  சேர்த்தது. இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில் 3வது விக்கெட்டுக்கு அதிக ஓட்டங்கள்  சேர்த்த ஜோடி என்ற சாதனை படைத்தது. முன்னதாக தொடரின் 21வது லீக் போட்டியில் சென்னை அணியின் ரெய்னா-பத்ரிநாத் ஜோடி, மும்பை அணிக்கு எதிராக 142  ஓட்டங்களை  சேர்த்தது சாதனையாக இருந்தது. 

ராஜஸ்தான் அணிக்கு எதிராக 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 246 குவித்த சென்னை கிங்ஸ் அணி, ஐ.பி.எல்., அரங்கில் அதிக ஓட்டங்கள்  சேர்த்த அணிகள் வரிசையில் முதலிடம் பிடித்தது.  சென்னை 246, ராஜஸ்தான் 223 ஓட்டங்கள் எடுத்தன. இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில் இரு அணிகள் சேர்ந்து, அதிகஓட்டங்கள்  (469 ஓட்டங்கள் ) குவித்த போட்டி என்ற சாதனை படைத்தது.





















































10 comments:

S Maharajan said...

HIGHLIGHTS பார்த்த உணர்வு ஏற்பட்டது.
நன்றி பவி...

A Simple Man said...

Good post. keep it up.

ஞானப்பழம் said...

எல்லாம் மெத்தியூ ஹெய்டன் வந்த நேரம்!!

Anonymous said...

super article pavi.
keep it up.


basu

Anonymous said...

supera irukku article.
naanka neril paarththa unarvu poola irukku

suba

Pavi said...

நன்றி மகாராஜன்

Pavi said...

நன்றி மனிதா

Pavi said...

நன்றி தலைவன் குழுமம்.
எனக்கும் வாய்ப்பு அளித்தமைக்கு

Pavi said...

நன்றி ஞானப்பழம்

Pavi said...

நன்றி வாசு