Thursday, April 22, 2010

மும்பை அணியுடன் மோதப்போகும் அணி எது ?

http://static.cricketnext.com/pix/slideshow/03-2010/key-players-chennai/dhoni_big.jpg

இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டது சச்சின் தலைமையிலான மும்பை அணி . மும்பை அணியுடன் மோதப்போகும் மற்றைய அணி எது ? தீர்க்கமான போட்டி இன்று இடம்பெற இருக்கிறது . சென்னை அணிக்கும் , டெக்கான் அணிக்கும் இடையில் .
http://www.instablogsimages.com/images/2010/03/07/chennai-win_e3FnX_17022.jpg
சென்னை அணியில்  தோனி , ஹைடன், முரளி விஜய், ரெய்னா, பத்ரிநாத், மார்கல், கெம்ப், மைக்கேல் ஹசி, முரளிதரன், அஷ்வின், ஜகாதி, பாலாஜி, சுதீப் தியாகி, போலிஞ்சர் ,  துஷாரா. இந்த வீரர்களுடன் களமிறங்குகிறது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி . துடுப்பாட்டத்தில் தோனி, ஹைடன், முரளி விஜய், ரெய்னா, பத்ரிநாத், மார்கல், கெம்ப், மைக்கேல் ஹசி போன்றோர் சிறப்பாக துடுப்பெடுத்து ஆடும் பட்சத்தில் சென்னை அணி நல்ல ஸ்கோரை பெறும். இவர்களின் சிறப்பாட்டம் மிக முக்கியம் . அதிரடியாக ஆடி ஓட்டங்களை குவிக்க வேண்டும் .
http://images.dailyradar.com/media/uploads/cricket/story_large/2009/05/05/ipl_winning_celebration.jpg
பந்து வீச்சை பொறுத்த வரையில் முரளிதரன், அஷ்வின்,   போலிஞ்சர் ,  துஷாரா இவர்கள் பந்து வீச்சில் அசத்த இருக்கிறார்கள் . டெக்கன் அணிக்காக சிறந்த பந்து வீச்சை கொண்டமைந்த வீரர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் . பந்து வீச்சிலும் சிறப்பாக இருந்து  விக்கட்டுகளை கைப்பற்ற வேண்டும்

சிறந்த களத்தடுப்பு அவசியம் . தோனி,  ரெய்னா, பத்ரிநாத், மார்கல் போன்ற வீரர்கள் களத்தடுப்பில் அசத்துகிறார்கள் . அவர்களின் பங்களிப்பும் அவசியம் .
http://worldcuplivesports.com/wp-content/uploads/2010/03/Deccan-Chargers-in-IPL.jpg
டெக்கான் அணியை பார்த்தால் கில்கிறிஸ்ட் , பிரக்யான் ஓஜா, லட்சுமண், கிப்ஸ், சுமன், ரோகித் சர்மா, சைமண்ட்ஸ், மோனிஷ் மிஸ்ரா, ராகுல் சர்மா, மைக்கேல் மார்ஷ், வாஸ், ஜஸ்கரன் சிங், ஹர்மீட் சிங், ஆர்.பி.சிங் மற்றும் டுவைன் ஸ்மித் போன்ற வீரர்கள் உள்ளனர். சிறப்பான துடுப்பாட்டம், பந்துவீச்சு போன்றவற்றில் அசத்துபவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் இன்று.
http://www.freakygossip.com/wp-content/uploads/2010/03/CSK-Vs-DC-coverage.jpg
கில்கிறிஸ்ட் , பிரக்யான் ஓஜா, லட்சுமண், கிப்ஸ், கில்கிறிஸ்ட் , பிரக்யான் ஓஜா, லட்சுமண், கிப்ஸ் போன்ற வீரர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கும் பட்சத்தில்  நல்ல ஸ்கோரை பெறலாம் .  மிஸ்ரா, ஆர்.பி.சிங், வாஸ், ஜஸ்கரன் சிங் போன்றோர் பந்து வீச்சில் அசத்த காத்து இருக்கிறார்கள் .
http://www.webhush.com/wp-content/uploads/deccan-chargers-ipl-2009-winners.jpg
இரு அணியிலும் மிகவும் பிரபலமான சிறந்த துடுப்பாட்ட வீரர்களும், பந்து வீச்சாளர்களும் உள்ளனர் . இன்றைய போட்டியில் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று கூறமுடியாது . போட்டி நேரத்தில் வீரர்களின் செயற்பாடும் , அதிஸ்டமும் தான் கைகொடுக்கும் .
http://static.cricinfo.com/db/PICTURES/CMS/103500/103561.jpg
இரண்டு முறை டெக்கானிடம் தோல்வியடைந்துள்ள சென்னை அணி, இன்று பழி தீர்த்து இறுதி போட்டிக்கு நுழையுமா என்பது தான் எல்லா ரசிகர்களதும் பேரவா . பொறுத்திருந்து பார்ப்போம் . இதுவரை இரு அணிகளும் 6 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இரண்டு முறை சென்னை அணியும், 4 முறை டெக்கான் அணியும் வென்றுள்ளன. சென்னை அணியின் பலம் துடுப்பாட்டம் தான் .
http://static.cricinfo.com/db/PICTURES/CMS/103100/103163.jpghttp://www.instablogsimages.com/images/2009/05/07/sharma-with-team_KNAku_17022.jpg
சுரேஷ் ரெய்னா , தோனி , முரளி விஜய், முரளிதரன், அஷ்வின், சைமண்ட்ஸ், ரோகித் சர்மா, பிரக்யான் ஓஜா, ஹாரிஸ் இந்த வீரர்களின் செயற்பாடுகள் தான் அணியின் வெற்றிக்கு வழிவகுக்கும் . இந்த வீரர்களின் கையில் தான் உள்ளது வெற்றி . எனினும் ஏனைய வீரர்களும் இன்றைய போட்டியில் சோபிக்கலாம் . முன்னணி வீரர்கள் ஏமாற்றலாம் . என்ன நடக்கின்றது என்று பார்ப்போம்.





14 comments:

Bala said...

எனக்கென்னவோ டெக்கான் அணிக்கு வாய்ப்பு இருப்பது போல தெரிகிறது. கில்லி என்னும் புயல் எப்பவுமே முக்கிய போட்டிகளில் எதிரணியை புரட்டி எடுத்து விடும். உதாரணமாக உலக கோப்பை, சென்ற வருட ஐபிஎல் இறுதி போட்டி ஆகியவற்றை சொல்லலாம். மேலும் ரோஹித் நல்ல பார்மில் உள்ளார். சைமண்ட்ஸ் சும்மா சுத்துனாலே சிக்சர் பறக்குது. நம்ம சென்னை அணி துடுப்பாட்ட வீரர்கள் கொஞ்சம் டிசிப்ளினா பந்து வீசினாலே சாய்ந்து விடுவார்கள். இதில் வாஸ், ஆர் பி சிங், ஓஜா மூவரும் அபாரமாக பந்து வீசுகிறார்கள். ரைனா, டோனி கொஞ்சம் மனது வைத்தால் நல்ல ஸ்கோரை எட்ட முடியும். அது போல நம்ம கண்மணிகளில் பீல்டிங் தான் கண் கலங்க வைக்குது. அதை கொஞ்சம் திருத்தினால் போதும். இவை எல்லாவற்றையும் விட புக்கிகள் மனது வைக்க வேண்டும்:)))

கவிதன் said...

சென்னை அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம் பவி !!!

ஸ்ரீ.... said...

சென்னையை விட டெக்கான நல்ல ஃபார்மில் இருக்கிறது. முடிவுக்குக் காத்திருப்போம். நல்ல இடுகை.

ஸ்ரீ....

மங்குனி அமைச்சர் said...

நீங்க ஒன்னும் கவலை படாதிக , சென்னை சூப்பர் கிங்க்ஸ் வரும் , அதில புதுசா மன்குநினு ஒரு பேட்ஸ் மென் இருக்காரு , அவரு பாதுபாறு

ஸ்ரீராம். said...

ஏங்க..இதை எல்லாம் சீரியஸ்ஸா எடுத்திகிட்டு..அவங்க பணம்...அவங்க இஷ்டம்..என்ன முடிவு பண்ணி வச்சிருக்காங்களோ...?

Unknown said...

லேட்டா கமெண்ட் போடுறேன்.

சென்னை ஜெயிச்சிருச்சி.. நீங்க சொன்ன மாதிரி ஹைடன், மார்க்கெல், ஹசீ, கெம்ப் இவங்க நல்லா பேட்டிங் செஞ்சா முரளிதரன், போலிஞ்சர், துஷாரா இவங்க சரியா பந்து வீச முடியாது. ஏன்னு சொல்லுங்க?

பவி ஏற்கனவே நான் உங்களைத் தொடரச் சொல்லிக் கேட்டது - ஒரு கிரிக்கெட் தொடரை..

பல பதிவர்கள் எழுதிட்டாங்க நீங்களும் எழுதுங்களேன்?

Anonymous said...

chennai anikku enathu vaalththukkal.


mano

Pavi said...

நன்றி பாலா

Pavi said...

ம்ம்ம்ம் நன்றி கவிதன்

Pavi said...

நன்றி ஸ்ரீ.

Pavi said...

நன்றி மங்குனி அமைச்சர்

Pavi said...

நன்றி ஸ்ரீராம்

Pavi said...

ம்ம்ம்ம் எழுதுகிறேன்
நன்றி முகிலன்

Pavi said...

நன்றி மனோ