Monday, July 12, 2010

முயல்கள் ஒரு தனி அழகுதான்

http://biomed.brown.edu/Courses/BI108/BI108_2008_Groups/group06/Images/rabbit.jpg
சிறு வயதினர் முதல் எல்லோருக்கும் பிடித்த செல்ல பிராணிகளில் ஒன்று முயல்கள் . எல்லோரும் வீடுகளில் விரும்பி வளர்ப்பார்கள் . பார்ப்பதற்க்கு மிகவும் அழகானவை . இரண்டு பெரிய செவிகள் . துள்ளி துள்ளி திரியும் போது அது ஒரு தனி அழகுதான் .
http://blogs.villagevoice.com/forkintheroad/lop_rabbit_easter.jpg
இறைச்சிக்காகவும், தோல் மற்றும் உரோமத்திற்காகவும் முயல்களை வளர்ப்பது உலகின் பல்வேறு நாடுகளில் முக்கியத்துவம் பெற்று வருகின்றது. இந்தியா , இலங்கை போன்ற நாடுகளிலும் முயல்கள் இருக்கின்றன . முயலை  கிராமப் புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் வளர்க்கலாம்.  நிலமற்ற விவசாயிகள், படிக்காத வேலை இல்லாத இளைஞர்கள் மற்றும் பெண்கள் போன்றோருக்கு முயல் வளர்ப்பு ஒரு பகுதி நேர வருமானம் ஈட்டி தரும் தொழிலால இருக்கிறது . 
 http://images2.fanpop.com/images/photos/4200000/2-Rabbits-bunny-rabbits-4233951-1280-1024.jpg
இந்த முயல்  வளர்ப்பின் மூலம் ஒரு குடும்பத்திற்கு தேவையான தரமான  இறைச்சியை உற்பத்தி செய்து செலவை குறைக்கலாம்.  முயல்களுக்கு தீவனமாக எளிதில் கிடைக்கும் இலை, தழைகளையும், வீட்டில் வீணாகின்ற காய்கறிகளையும், குறைந்த அளவு தானியங்களையும் கொடுக்கலாம். இதனால் வீடுகளில் எல்லோரும் தமது செல்லப் பிராணியாக வளர்க்கின்றனர் .
 http://www.julianmorin.com/blog/wp-content/uploads/2007/06/rabbit1.jpg
முயல் மிகவும் சாதுவான பிராணியாதலால்,  சிறுவர்கள், பெண்கள், வயதானவர்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் வளர்க்க ஏதுவானது. பசுந்தீவனத்தை சிறந்ததொரு இறைச்சியாக மாற்றுவதில் முயலுக்கு நிகர் வேறெதும் இல்லை. 
 http://www.parenting-our-kids.com/image-files/rabbit.jpg
முயல் இறைச்சி மருத்துவ குணங்கள் கொண்டது. கொலஸ்ட்ரால் மிக மிகக் குறைவு. இருதய நோயாளிகளும், முதியோர்களும் ஏற்கக் கூடிய இறைச்சி. முயல்களுக்கு தடுப்பூசிகள் ஏதும் தேவையில்லை. குறைந்த சினைக்காலம், அதிக குட்டிகள் ஈணும் திறன், துரித வளர்ச்சி அதிக தீவன மாற்றுத்திறன் ஆகிய குணங்கள் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள் ஆகும்
http://www.fordsweb.co.uk/emz/photogallery/animals/rabbits.jpg
ஐம்பதிற்கும் மேற்பட்ட முயல் இனங்கள் இருக்கின்றன.  அதிக எடை உள்ள இனங்களான வெள்ளை ஜெயண்ட், சாம்பல் ஜெயண்ட், பிளமிஸ் ஜெயண்ட் ஆகியனவும் , நடுத்தர எடை உள்ள இனங்களாக நியூசிலாந்து வெள்ளை, நியூசிலாந்து சிவப்பு, கலிஃபோர்னியா மற்றும் அங்கோரா என்று பல இனங்கள் உண்டு.  
http://josboys.typepad.com/blog/images/angora_rabbit.jpg
அங்கோரா
அங்கோரா இன முயல்களை உயர்தர உரோமத்திற்காக குளிர்ந்த மற்றும் மலைப் பிரதேசங்களில் வளர்க்கலாம். இறைச்சி முயல்களை மலைப் பிரதேசங்களிலும், சமவெளிப் பகுதிகளிலும் வளர்க்கலாம்.வீடுகளில் முயல்களை கூண்டுகளில் வளர்ப்பதே சிறந்தது. 
 http://imagesofpets.com/wp-content/uploads/2009/04/19-04-rabbit-1.jpg
உலகின் பல பகுதிகளிலும் காணப்படும் முயல்கள்  குடும்பமாக வாழும் இவை நான்கு முதல் பத்து ஆண்டுகள்  உயிர் வாழ்கின்றன.  முயல்கள் மிக வேகமாக இனப்பெருக்கம் செய்பவை ஆகும் . ஆரோக்கியமான முயல்கள் தோல் மற்றும் உரோமம் பொலிவாகவும் , ஓரிடத்தில் நில்லாமல் துறுதுறுவென்றும் கண்கள் பளபளப்புடனும் எவ்வித நீர்க்கசிவுகளும் இன்றியும் , முயல்களினுடைய உடல் எடை சீராக அதிகரித்தும் காணப்படும் .
  http://fohn.net/rabbit-pictures-facts/images/baby-rabbits-800x600.jpg
முயல்களுக்கு நீர்க்கோப்பு நோய் , கழுத்துக்கோணல் நோய், கழிச்சல் நோய், மடி நோய் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன . முயல்களை எமது செல்லப்பிராணியாக வளர்ப்போம் . எமக்கும் ஒரு பொழுது போக்காகவும் இருக்கும் .

http://www.dailynews.cz/articles/images/20060128_mbh/04.jpg






4 comments:

Anonymous said...

super



siva

Pavi said...

நன்றி சிவா

சி.பி.செந்தில்குமார் said...

அங்கோரா இதுவரை நான் பார்க்காதது.சோ க்யூட்

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம்ம் நமக்கு தெரியாதன எவ்வளவு இந்த உலகில் இருக்கு .
நானும் பார்த்ததில்லை . கேள்விப்பட்டு இருக்கிறேன் .
நன்றி செந்தில் குமார் .