Monday, August 2, 2010

நோயற்ற வாழ்வு

http://thumbs.dreamstime.com/thumb_41/1139318566oNmz1g.jpg
இப்போது எல்லாம் ஐம்பது வயதை கடந்த  யாரை கேட்டாலும் அவர்களுக்கு ஏதாவது ஒரு வருத்தம் இருக்கத்தான் செய்கிறது . நீரிழிவு , மாரடைப்பு , கொலச்டோல் என்று வியாதிகளை சொல்லிக் கொண்டே போகலாம் . நாம் நோய்  நொடி இன்றி வாழ்வது தற்காலத்தில் கஷ்டம் தான் .

ஆதிகாலத்தில் இயற்கை உணவுகளை உடனுக்குடன் சமைத்து மனிதன் உண்டு வந்தான் . இப்போது எல்லாம் எல்லா உணவு பொருட்களும் கலப்படமும் , இரசாயன பொருட்கள் கலந்தனவாகவும் தானே இருக்கின்றன .இதனால் தான் நோய்களும் நம்முடன் வந்து சேர்கின்றன .
நோயும் மனிதனும் மிக நெருக்கமாக வாழும் காலச் சூழல் இது. காய்ச்சல் தலைவலி போன்ற சாதாரண வியாதிகளைக் கடந்து இன்று நாளொரு வியாதியும், பொழுதொரு மருந்துமாய் மனித வாழ்க்கை நகர்கின்றது.
http://medicineworld.org/images/blogs/2-2008/crohns-disease-55699230.jpg
ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் நம் உடல் இயக்கம் பற்றிய தெளிவு நமக்கு ஓரளவிற்கு அவசியம். தொழில் துறையில் முன்னேறிவிட்ட இந்த இயந்திர உலகத்தில் மனிதன் சுவாசிக்கும் காற்றிலிருந்து குடிக்கும் குடிநீர்வரை எல்லாம் சுகாதாரமற்றதாகவே இருக்கின்றது. புகைபிடித்தல் , மது அருந்துதல் என்பன தவிர்க்கப்பட வேண்டும்


எல்லோரும் முதலில் சுத்தமான தண்ணீரை பருக வேண்டும் . தண்ணீரையும் கொதித்து ஆற வைத்து பருகினால் நன்று . தண்ணீரில் கல்சியம் இருந்தால் கொதிக்க வைத்து குடித்தால் கல்சியம் இருக்காது . தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் . ஒரு நாளைக்கு ஒருவர்  ஒன்றரை லீற்றர் தண்ணீர் குடிக்க வேண்டும் .

அடுத்தது ஒவ்வொரு நாளும் குளித்து சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும் . துவைக்காமல் ஒரே உடுப்பை மாறி மாறி போட்டால் நோய்க்கிருமிகள் உண்டாகும் . சுத்தம் அவசியம் . கை, கால்களில் உள்ள நிகங்களை வெட்டி துப்பரவாக வைத்திருக்க வேண்டும் . அப்படி இல்லாவிட்டால் நாம் சாப்பிடும் போது நோய்க்கிருமிகள் வாய்க்குள் சென்று விடும் . எனவே , நாம் முதலில் சுத்தமாக இருக்க வேண்டும் .
http://sparkyblue.org/archive/wp-content/uploads/2009/08/global1.jpg
நாம் சுத்தமாக இருந்து வீட்டையும் , சுற்று புற சூழலையும் துப்பரவாக வைத்திருக்க வேண்டும் . அது மிகவும் முக்கியம் . நுளம்புகள் பெருகி டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் எம்மை தாக்கும் . ஆகவே வீட்டை துப்பரவாக வைத்திருக்க வேண்டும் . சுற்று புற சூழலை கூட்டி , புற்களை வெட்டி , வாய்க்கல்களுக்குள் தண்ணீர் தேங்கி நிக்காத வண்ணம் அடைப்புகளை எடுத்து நுளம்புகள் பெருகா வண்ணம் பாத்திருக்க வேண்டும் .
http://inteyesummer.files.wordpress.com/2007/08/exercise.jpg
நாம் நோய் நொடி இன்றி வாழ மிகவும் முக்கியம் தினமும் உடல் பயிற்சி செய்ய வேண்டும் . மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட  வேண்டும் . காலையும், மாலையும் ஒவ்வொரு மணித்தியாலம் நடை பயிற்சி செய்ய வேண்டும் . தியானம் செய்யலாம் . மனமும் லேசாகும் . யோசனை , கவலைகளை மறந்து மனம் ஒரு நிலைப்படும் .நாம் உடல் பயிற்சி செய்வதால் நம் உடலின் இயக்கங்களையும், உள்ளத்தையும் சீரடையச் செய்து நோய்களிலிருந்து நம்மைக் காக்கிறது, என்ற உண்மை நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. சிலர் உடல் இளைத்து விடும் என்று உடல் பயிற்சி செய்வது இல்லையாம் . அப்படி அங்கு ஒன்றும் இல்லை .

குறிப்பிட்ட சில மணித்தியாலங்கள் நகைச்சுவை படங்கள் , காட்சிகள் என கொஞ்ச  நேரம் பார்க்கலாம் .தினமும் யோசித்து கொண்டு இருக்காமல் வீட்டில் உள்ள எல்லோரும் சேர்ந்து ஒன்றாக கதைத்து , சிரித்து மகிழலாம் . யோசனை, கவலைகளால் தான் பிரசர் கூடுகிறது .

எல்லோரும் சந்தோசமாக நோய்கள் இன்றி வாழ வேண்டும் . நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ஆகும் .



.






2 comments:

Anonymous said...

nalla pathivu pavi.

kala

Pavi said...

நன்றி கலா