Monday, August 23, 2010

நடைபாதையில் ஒரு வறியவர்

 
அவருக்கோ தள்ளாடும்
முதுமை பருவம்
வயதோ எழுபதுக்கு மேல்
இந்த வயதில்
பெற்ற  பிள்ளைகள் எல்லாம்
கைவிட்ட நிலையிலும்
தனது வயிற்று
பசிக்காக பிச்சை
எடுத்து சாப்பிடுகிறார்
இது என்ன கொடுமையப்பா
பெற்று வளர்த்து ஆளாக்கி
விட பிள்ளைகள் செய்யும்
காரியமா இது
http://villagezendo.org/journal/may_07/images/beggar_may_07.jpg
அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு
இந்த பிள்ளைகளை
வளர்த்திருப்பார்கள்
அதனை இந்த
பிள்ளைகள் ஒரு கணம்
சிந்தித்தால் என்ன
சிந்திக்க மறுக்கிறார்கள் .
வயது போனதும்
தாய், தந்தையரை
வீட்டை விட்டு கலைத்தும்
முதியோர் இல்லங்களிலும்
சேர்த்து விடுகிறார்கள்
ஏன் இப்படி செய்கிறீர்கள்
என்று கேட்டால்
அவர்கள் சொல்லும்
விளக்கமோ இது
அதுகள் இருமிக்கொண்டும்
கத்திக்கொண்டும்
சண்டைபிடித்து கொண்டும்
இருக்கிறார்கள் - பெரிய
தொந்தரவு - வீட்டில்
நிம்மதி இல்லை என்று
கூறுகிறார்கள் - கஷ்டப்பட்டு
வளர்த்து நிமிர்த்து
விட பிள்ளைகள்
கடைசி காலத்தில்
கூறும் பதில் இதுதான்
கடவுளே இந்த
உலகம் எங்கே செல்கிறது
சாமியே அருள்பாலியப்பா
எல்லோரையும் காப்பாற்றப்பா
எல்லோருக்கும் நல்ல புத்தியை
கொடப்பா - என்றுதான்
  புலம்ப வேண்டி உள்ளது .......

2 comments:

Anonymous said...

ithuthaan kodumaiyaana visayam pavi.


saaru

Pavi said...

உண்மைதான் சாரு