செல்போன் என்று அழைக்கப்படும் கைத்தொலைபேசிகளை பாவிப்போரின் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. புதிய புதிய வடிவங்களில் செல்போன்களும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. வாங்குவோர் இருக்கும் வரைக்கும் புதிய புதியதாக விற்பனைக்கு வரத்தானே வேண்டும் கைத்தொலைபேசிகள்.
செல்போன்களால் நன்மையையும் உண்டு , அதனைவிட தீமையும் உண்டு என்பதை யாராலும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது . இது நமக்கு எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான் . நாம் எந்த விடயத்திலும் நல்ல விடயங்களை எடுத்து கொள்ள வேண்டும். கெட்ட விடயங்களை எடுத்து கொள்ள கூடாது .
செல்போனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. தேவையே இல்லாவிட்டாலும் கூட இரண்டு, மூன்று செல்போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பலவிதமான நோய்கள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிக நேரம் செல்போனில் பேசுவதால் கழுத்து, கை, காது போன்றவற்றில் வலி ஏற்படுகிறது. சிலர் பேசும்போது காதுக்கும், தோள்பட்டைக்கும் இடையில் செல்போனை வைத்து அழுத்திக் கொண்டு பேசுவர். இவ்வாறு தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் கழுத்தில் வலி ஏற்படுவதுடன், விரைவிலேயே கழுத்தில் உள்ள எலும்புகள் பாதிக்கப்பட்டு வளைந்துவிடும். இதிலும் கவனம் தேவை .
மக்களுக்கு பலனுள்ளதை, பயனுள்ளதை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்ற எண்ணத்தில் எல்லா கண்டுபிடிப்பாளர்களும் தங்கள் படைப்புகளை வெளியிட்டாலும் நன்மையான காரியங்களுக்கு இவைகள் பயன்படுவதைப் போல் தீமையான காரியங்களுக்கும் பயன்படுகின்றன. நல்ல நல்ல செய்திகளை பரிமாறிக்கொள்ள வேண்டிய மாணவ மாணவிகள் ஆபாச குறுஞ்செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் சிலர் எந்த நேரமும் SMS அனுப்ப பட்டன்களை அழுத்தி அழுத்தி அவர்களுடைய விரல்கள் சீக்கிரமாகவே வளைந்து தசைகள் நகர்வதற்கும் வாய்ப்புண்டு. அதுமட்டுமின்றி, அதிக நேரம் பேசுவதால் காதில் உள்ள ஒலி உணர் செல்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் விரைவிலேயே கேட்கும் திறன் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. மேலும், செல்போன்களில் இருந்து வெளிவரும் கதிர்களால் மூளை, இதயம் போன்ற உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன .
இளையோர் முதல் முதியோர்கள் வரை எல்லோரும் செல்போன் பயன்படுத்துகிறார்கள் . வீட்டில் என்ன பொருள் இல்லையோ எல்லோர் வீட்டிலும் செல்போன் கட்டாயம் இருக்கும் . அதுவும் வீட்டில் உள்ள அத்தனை பேரிடமும் செல்போன் இருக்கும் . சிலர் விளையாட்டாக முக்கிய பிரமுகர்களுக்கு செல்போன்களின் மூலம் கொலை மிரட்டல் விடுகிறார்கள். விஷயம் பெரிதாகி செய்தியை அனுப்பியவர் சிறையில் அடைக்கப்படுகிறார். விளையாட்டு வினையாகி போகிறது . எல்லோரும் புரிந்து கொள்ளுங்கள் . ஏன் உங்களுக்கு இந்த நிலைமை வர வேண்டும் ?
வாகனத்தை ஓட்டிக்கொண்டு சென்றாலும் சரி பேசுவதை நிறுத்தமாட்டார்கள். செல்போன்களின் மீது இவர்களுக்கிருந்த எல்லை கடந்த பாசம் விபத்திற்குக்காரணமாகி உயிரையே பறித்துவிடுகிறது. வாகனத்தில் பல பயணிகளை ஏற்றி கொண்டு செல்கின்றோம் அல்லவா , என்னை நம்பித்தானே அவர்கள் வருகிறார்கள் என்று வாகனம் ஓட்டுபவர் சிறிது நேரம் சிந்திக்கிறாரா ? இல்லை . அவர் வாகனத்தை ஓட்டிக் கொண்டு செல்போனை பேசி கொண்டு தான் இருக்கிறார்கள். திருந்துகிறார்கள் இல்லையே .
செல்போன் அதிகளவு உபயோகிப்பதால் கருவில் இருக்கும் குழந்தைக்கு பிரச்சனைகள் வரும். மன அழுத்தம் வருகிறது தூக்கம் பாதிக்கப்படுகிறது. செல்போன்களை பெல்டில் வைத்துக்கொள்வதால் ஆண்மை குறைவு ஏற்படுகிறது .சட்டை பையில் வைப்பதால் இதயத்திற்கு பாதிப்பு வருகிறது.வேலைக்கு போகிறவர்கள் செல்போன் உபயோகிப்பதில் தவறில்லை. ஆனால், வேலை நேரங்களில் செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும் . அதிக நேரம் செல்போனை பயன்படுத்துவதால் மனஅழுத்தம், ஆழ்ந்த தூக்கம் இன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன .
செல்போனில் பேசிக் கொண்டு வீதியில் நடப்பதால், வாகனம் ஓட்டுவதால் விபத்து ஏற்படுகிறது . வீடியோ எடுத்து இன்டர்னெட்டில் உலவ விடுகிறார்கள் . இது எல்லாம் எவ்வளவு பெரிய தவறு . இளம் வயதினரை பார்த்தால் எப்போதும் செல்போனில் யாருடனே பேசிக்கொண்டே இருப்பார்கள் . பணம் செலவாகிறதே என்று கூட யோசிப்பதில்லை . இவர்கள் எல்லாம் எப்போது திருந்துவது என்று பெரியோர்கள் அங்கலாய்த்து கொள்கிறார்கள் மனசுக்குள் .
தேவையான நேரங்களில் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்துங்கள் ." நீங்களே திருந்தினால் உண்டு மற்றவர்கள் உங்களை திருத்துவதட்க்கு முதல் " . நாம் நடந்து கொள்ளும் முறையில் தான் எல்லாம் உள்ளது . நமக்கு தீங்கு என்று பட்டதை செய்யாதீர்கள் . எமக்கு பாதிப்பு வரும் என்று தெரிந்தும் அவற்றின் பாவனையை குறைத்து கொள்ள வேண்டியது எமது கடமை .
எனவே செல்போன்களால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பதை விளங்கி கொண்டு இருப்பீர்கள் . அவற்றில் இருந்து எப்படி விடுபடலாம் என்பதை பற்றி சிந்தியுங்கள் . செல்போன் பாவிக்கத்தான் வேண்டும் . நான் பாவிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை . அப்படி சொல்லவும் மாட்டேன் . நல்ல விடயங்களுக்கு , தேவைகளுக்கு பயன்படுத்துங்கள் .
5 comments:
ஐஐஐஐ... எனக்குத் தன் சுடு சோறு
தகவலுக்க மிக்க நன்றி சகோதரி..
எந்தப்பொருளையும் அதன் பயன்பாட்டின் வரைமுறைகளைத் தெரிந்து பயன்படுத்தினால் ஆபத்தில்லை.
நன்றி சுதா
நீங்கள் சொல்வது சரிதான்.
நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் கந்தசாமி ஐயா அவர்களே
Post a Comment