Tuesday, January 18, 2011

இஞ்சேருங்கோ ................

அவளுக்கென்ன அருமையான 
கணவன் - நமக்கும் இருக்குதுகளே 
என்று கவலை  அடைந்தாள் வேலம்மா 
எல்லாம் பக்கத்து வீட்டு முத்தம்மாவின் கணவனை பார்த்து 
என்ன என்று கேட்டால் எனக்கு அப்போதுதான் 
விளங்கியது வேலம்மா ஏன் கவலைப்படுகிறார் என்று 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZ08PqH4-1PUz_8b1de3crYEuOVsvuRPgClOD0Ckbs7nqI_6ghd8XSTBqhwiRKBtLIm90aPYqJpCChYhMwBSIjiHtO_BqmsF7x99O4DKRS5NnTxV8GgYcHau_6t_tyFIGF934SmjVeqPE/s1600/feedthemonster_cartoon.jpg
அழகான குடும்பம் முத்தம்மாவின் 
குடும்பம் - மனைவி எதை கேட்டாலும் 
வாங்கி கொடுப்பார் மனைவிக்காக 
சமையல் வேலைகளையும் வேலை 
இல்லாத நேரங்களில் கவனிக்கிறார் 

பிள்ளைகளை அன்புடன் வளர்க்கிறார் 
படிக்க வைக்கிறார் - செலவு எல்லாம் 
பார்க்கிறார் - மனைவியை அன்பான 
தாயாக கவனிக்கிறார் 
மனைவியும் கணவனுக்காக 
எதையும் செய்வாள் - என்ன 
சாப்பாடு கேட்டாலும் செய்து கொடுப்பாள் 

இஞ்சேருங்கோ இஞ்சேருங்கோ 
என்று அவள் கூப்பிடும் போது
அவளது அன்பு , பாசம் புரியும் 
எல்லோருக்கும் - இப்படித்தான் 
குடும்பம் என்றால் இருக்க வேண்டும் 
என்று முனுமுனுக்கிறார்கள் அயலவர்கள் 

இப்போது புரிகிறதா வேலம்மாவின் 
கவலைக்கு என்ன காரணம் 
என்று புரிகிறதா இஞ்சேருங்கோ 
ஹி...............ஹி .........................

6 comments:

சக்தி கல்வி மையம் said...

இக்கரைக்கு அக்கரை பச்சை.பதிவு அருமை..

'பரிவை' சே.குமார் said...

இஞ்சருங்கோ... இஞ்சருங்கோல்லாம் எல்லா இடத்திலும் இருக்கும். இருந்தும் அக்கரைப் பச்சைதான் என்றுமே அழகாய்த் தெரியும்...

Srini said...

” வீட்டுக்கு வீடு வாசப்படி “
~~~~~~~~~~~~~~~~~~~~~
“ அடுத்தாத்து அம்புஜத்தப் பாத்தேளா ?
அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா.... “

Pavi said...

நன்றி கருன்

Pavi said...

உண்மைதான் குமார்
நன்றி .

Pavi said...

நன்றி ஸ்ரீனி