வியர்வை சிந்தி உழைக்கிறான்
குடும்பத்துக்காக உழைக்கிறான்
கடினமாக உழைக்கிறான்
உழைத்தல் தான் உயர
முடியும் என்ற நம்பிக்கையில்
உழைக்க தகுதியற்றவன்
உலகில் பிழைக்க தகுதியற்றவன்
ஆகிறான் அல்லவா ?
அதனால் வியர்வை சிந்தி
உழைக்கிறான் - அல்லும்
பகலும் அயராது உழைக்கிறான் .
தானும் மகிழ்ந்து தனது
உறவுகளையும் கட்டி
காப்பாத்தி ஏழைகளுக்கும்
உதவி செய்கிறான் அவன்
தான் மனிதன் - அவனது
வியர்வையின் ஒவ்வொரு
துளியும் ஏழைகளின் கண்ணீரை
துடைக்கின்றனவே அதெல்லவோ
வியர்வை - அவன் தன்மானமுள்ளவன்
அதனால் தானே ஒரு
வயோதிபர்களின் இல்லத்தை
பராமரித்து வருகிறான்
அவர்களின் துயர் துடிக்கிறான்
வியர்வை சிந்தி உழைக்காதவர்களும்
பெரிய பதவிகளில் இருப்போரும்
பெற்றோரை பாரமாக நினைத்து
பணத்தை பெரிதாக நினைத்து
பராமரிப்பு இல்லங்களில் அல்லவா
பெற்றோரை விடுகின்றனர் .
இதில் ரை கட்டி உழைப்பவன்
பெரிதா - அல்லது விறகு
கொத்தியும் வயலில்
விவசாயம் செய்தும்
வியர்வை சிந்தி உழைப்பவன்
பெரிதா - உறவுகளே
சிந்தியுங்கள் சிந்தியுங்கள்
5 comments:
"டை"கட்டி எனஇருக்க வேண்டுமோ?
படங்கள் அழகான தேர்வு. அருமையான ஒரு பகிர்வு.
ரை கட்டி என்பது டை கட்டி என்றிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சரிதானா சகோதரி.
நான் சொன்னது கழுத்துப்பட்டி என்று அழைக்கும் ரை, ஆனால், டையும் பொருந்தும் . இருபொருள் தருகிறது . இரண்டும் கவிதைக்கு பொருந்தும்
நன்றி ரமணி
நன்றி குமார்
அழகான படங்கள். அருமையான வரிகள். நன்றி nanda.
Post a Comment