Monday, October 11, 2010

ரபேல் நடாலின் வெற்றிகள்

http://www.topnews.in/sports/files/Rafael_Nadal,11.jpg

 உலக டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ரபேல் நடால் தனது 24 வயதிலேயே பல சாதனைகளை படைத்து வருகிறார் . ஸ்பெயின் நாட்டின் மயோர்க்கா தீவில் பிறந்த நடால் தனது கடும் பயிற்ச்சி , முயற்சியின் மூலம் டென்னிஸ் உலகில் எல்லோரும் வியக்கும் நட்ச்சத்திரமாக மிளிர்ந்து கொண்டு இருக்கிறார் .
http://i.telegraph.co.uk/telegraph/multimedia/archive/01250/rafael-nadal_1250974c.jpg
ஐந்து முறை பிரெஞ்சு ஓப்பனை (2005,2006,2007,2008, 2010) போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். உலக ஆடவர் தரப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் நடால் . 2008 ஒலிம்பிக்கில் தங்கம் வென்று அசத்தினார் . 2005ம் ஆண்டு பிரெஞ்ச் பகிரங்க கிராண்ட்ஸ்லாம் போட்டியில் சம்பியன் பட்டம் வென்றதன் மூலம் அறிமுக போட்டியில் பட்டம் வென்ற இரண்டாவது வீரர் என்ற பெருமையை நடால் பெற்றார்.
http://www.abc.net.au/reslib/200706/r150311_534415.jpg
தொடர்ந்து 2006, 2007, 2008 ஆண்டுகளில் பிரெஞ் இறுதிப் போட்டியில் சம்பியன் பட்டம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தார் நடால். இந்த ஆண்டில் நடைபெற்ற விம்பிள்டன், பிரெஞ்ச், அமெரிக்க ஓபன் பட்டங்களை தொடர்ச்சியாக வென்றுள்ளார் நடால். இதன் மூலம், ஓரே ஆண்டில் தொடர்ச்சியாக மூன்று கிராண்ட்ஸ்லாம்களை வென்றுள்ள பெடரர், லேவர், பீட்சாம்ப்ரஸ் ஆகியோருடன் நடாலும் இணைந்தார். இது வரை 11 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள நடால் அவற்றில் 9ல் பட்டம் வென்றுள்ளார். மற்ற இரு போட்டிகளிலும் ரோஜர் ஃபெடரரிடம் பட்டத்தை இழந்தார்.
http://i.esmas.com/image/0/000/006/215/rafael-nadal-370x270.jpg
நடாலின் கனவாக இருந்தது . தான் அமெரிக்கன் ஓபனை வெல்ல வேண்டும் என்பதே . அதையும் வென்று அசத்தி விட்டார் . அமெரிக்க ஓபனை வென்றது எனது வாழ்க்கையில் முக்கிய தருணம். கோப்பையை கையில் ஏந்தியதும் என்னையே ஒரு கணம் நான் இழந்தேன். அந்த அளவுக்கு மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றேன் என்று கூறும் அளவுக்கு அவரின் அளப்பெரிய ஆனந்தம் . அவரின் கனவு நனவாகி விட்டது அல்லவா ?
http://www.livetennisguide.com/wp-content/uploads/Rafael-Nadal-vs-Kevin-Anderson.jpg
தற்போது 24 வயதாகும் ரபேல் நடால், ஆறு முறை விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ள ரோஜர் ஃபெடரரின் 16 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை எட்டிப் பிடிக்கும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை என்று டென்னிஸ் செய்தியாளர் கருத்து வெளியிட்டுள்ளனர். டென்னிசில் அபார திறமை கொண்ட நடால் இந்த சாதனைகளை எட்டி பிடிப்பது அவருக்கு ஒன்றும் பெரிதாக இருக்காது . அவருக்கு அது ஒரு இலகுவான விடயமாகவே இருக்கும் .
http://blinkthinks.files.wordpress.com/2008/07/rafael-nadal-wimbledon-trophy_1009071.jpg
அண்மைக்காலமாக பெடரரின் வீழ்ச்சியால் நடாலின் கை ஓங்கி உள்ளது . பெடரர் அண்மைக்காலமாக நடாலிடம் தொடர் தோல்விகளையே தழுவி வருகிறார் . அமெரிக்க ஓபனை வென்றதன் மூலம் ஆஸ்திரேலியன் ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என நான்கு கிராண்ட்ஸ்லாம்களையும் வென்ற ஏழாவது வீரர் என்ற பெருமையை பெற்ற நடால் இன்னும் பல பட்டங்களையும் , சாதனைகளையும் பெறுவார் .
http://www.topnews.in/sports/files/Roger-Federer-Rafael-Nadal2.jpg
இன்னும் நடாலின் சாதனை பயணம் தொடர வேண்டும் . பல வெற்றிகளை குவிக்க வேண்டும் . பல விறுவிறுப்பான போட்டிகளை காண வேண்டும் என்பதே ரசிகர்களின் அவா . நடாலின் வெற்றி பயணம் தொடரட்டும் .








 






4 comments:

பொன்கார்த்திக் said...

:)
http://ponkarthiktamil.blogspot.com/

Anonymous said...

dennish puyal nadaalllllllll


suba

Pavi said...

நன்றி கார்த்திக்

karthikkumar said...

வணக்கம் சகோதரி புதிய பதிவு ஒன்று போட்டுள்ளேன் உங்கள் வருகையையும் ஆதரவையும் எதிர்பார்கிறேன்
http://muraimaman.blogspot.com/2010/10/blog-post_14.html