தமிழ் சினிமாவை உலக சினிமாவுக்கு கொண்டு சென்றவர் . சினிமாவில் ஏற்று இராத பாத்திரங்கள் இல்லை . அவர் நடிக்காத வேடங்கள் இல்லை . சினிமாவில் தெரியாத அம்சங்கள் இல்லை . படத்துக்கு படம் வித்தியாசமான நடிப்பு , வித்தயாசமான வேடங்கள் என்று தனது பாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடிப்பார் . சில முக்கியமான கதைகளை நகைச்சுவையாக நடித்து எல்லோருக்கும் புரியும் படி நடிப்பதிலும் வல்லவர்.
எனக்கு கமலிடம் பிடித்த விடயம் என்னவெனில் அவரது வித்திசாமான வேடம் அணிந்து நடிப்பது . அவ்வை சண்முகியாகட்டும், தசாவதாரமாகட்டும் அச்சு பிசகாமல் சிறப்பான நடிப்பு . தனது உடல்கட்டமைப்பை என்றும் இளமையாக வைத்திருக்கிறார் .
ஏழை மக்களுக்கு உதவி செய்வது , மாணவர்களுக்கு உதவி செய்வது போன்ற பல நல்ல திட்டங்களை தனது பிறந்த நாளில் கமல் செய்வது வழமை . இப்படியான நல்ல உள்ளமும் கொண்டவர் . தமிழ் தவிர ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் இருந்து வெளிவர இருக்கும் மன்மதன் அம்பு வரை அவரது கலை பயணம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது . எனக்கு இவர் நடித்த படங்களில் பிடித்த படங்களாக மூன்றாம் பிறை , நாயகன், அபூர்வ சகோதரர்கள் , வசூல் ராஜா , அவ்வை சண்முகி , இந்தியன் , தெனாலி , தசாவதாரம் போன்ற படங்கள் எனக்கு மிகவும் பிடித்த படங்கள் ஆகும் .
1960 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படங்களில் அறிமுகம் ஆனார் . 1962 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படங்களில் அறிமுகம் ஆனார் . 1977 ஆம் ஆண்டு வங்காளம் , கன்னடம் , தெலுங்கு , இந்தி திரைப்படங்களில் அறிமுகம் ஆனார் . தசாவதாரம் படத்தில் பத்து வேடங்கள் ஏற்று நடித்திருந்தார் .
மூன்று முறை, இந்திய அரசின் நடிப்புக்கான தேசிய விருதுகள் பெற்று உள்ளார் .(மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன்) போன்ற படங்களில் நடித்தமைக்காக இவ்விருதுகள் கிடைத்தன . சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான இந்திய தேசிய விருது. (திரைப்படம் – களத்தூர் கண்ணம்மா). 18 பிலிம்பேர் விருதுகளை அள்ளி உள்ளார் . பத்மஸ்ரீ விருது கூட பெற்று உள்ளார் . சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கிய கௌரவ டாக்டர் பட்டம் பெற்று உள்ளார் .
இன்று பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் கமலுக்கு எல்லோரினதும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் . இன்னும் பல வெற்றி படங்களை தர வேண்டும் என்பதே ரசிகர்கள் அனைவரினதும் அவா .
2 comments:
Nalla pakirvu.
Kamalukku piranthanal vazhththukkal.
நன்றி குமார்
Post a Comment