இப்போது எல்லாம் தமிழ் சினிமாவை எடுத்து கொண்டால் இயக்குனர்கள் எல்லாம் நடிகர்களாக மாறி படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்கள் . அதில் சிலர் வெற்றிகளை கொடுத்து கொண்டு இருக்கிறார்கள் . சிலர் இரண்டு வெற்றிகளை கொடுத்துவிட்டு பின்பு ஒரே தோல்விகளை கொடுத்து கொண்டு இருக்கிறார்கள் . இப்படி இயக்குனர்களாக இருந்து நடிகராக மாறிய சேரன் , சுந்தர் சி , சசிகுமார் , அமீர் ,சீமான் என்று பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது .
சொல்லமறந்த கதை , ஆட்டோகிராப் போன்ற படங்களில் நாயகனாக நடித்து வெற்றியை தந்த சேரன் அதன் பின்பு வெற்றிகளை காணவில்லை . இந்த வரிசையில் சுந்தர் சி இயக்குனராக இருந்து பல வெற்றி படங்களை தந்துள்ளார் . அவரின் நடிகர் அவதாரமும் தோல்வி என்று சொல்வதற்க்கு இல்லாமல் நன்றாக போய் கொண்டு இருக்கிறது .
தனது தொடர் வெற்றிகளால், ஒரு காலத்தில் சுந்தர் சி வெற்றிகரமான இயக்குனராக வலம் வந்தார். இருப்பினும் அடுத்தடுத்து படங்கள் தோல்வியடைய தொடங்க , சுதாரித்துக்கொண்ட சுந்தர் சி படம் இயக்குவதை விடுத்து, ‘தலைநகரம்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். முதல் படமே வெற்றி பெற்றுவிட, தான் ஒரு இயக்குனர் என்பதையே மறந்து முழுநேர நாயகனாக மாறினார்.
இவர் நடித்த படங்கள் பெரிய வெற்றியை பெற விட்டாலும் போட்ட முதலுக்கு நட்டமில்லாமல் தயாரிப்பளர்களின் கையை கடிக்காமல் இருந்தது . வீராப்பு, ஐந்தாம்படை, தீ, சண்டை என வரிசையாக பல படங்களில் தொடர்ந்து அதிரடி காட்டி தனது படங்களுக்கு குறைந்தபட்ச வெற்றியையும் பெற்று தந்தார்.
நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்திருக்கும் இயக்குனர் சுந்தர் சி., சிறிது இடைவெளிக்குப் பிறகு கதை, திரைக்கதை எழுதி, இயக்கி, ஹீரோவாக நடித்திருக்கும் படம் நகரம். அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில், இந்தப் படத்தை தயாரித்து வழங்கியிருப்பவர் நடிகை குஷ்பு.
தலைநகரம், சண்ட என தொடர்ந்து ரவுடி வேடங்களில் நடித்து வந்த இயக்குனர் சுந்தர்.சி. ‘தீ’ யில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்து இருந்தார் . சுந்தர் சி இயக்கி, அனுயாவுடன் ஜோடி போட்டு நடித்த படம் நகரம். கடந்த வாரம் வெளியானது. வடிவேலு - சுந்தர் சி காம்பினேஷன் பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் தரும் படம் என கூறப்படுகிறது .
.
8 comments:
சுந்தர்.சி. குறித்த பகிர்வு ஓகே...
நகரம் நரகமா இருக்குன்னு கேள்விப்பட்டேன்.
மனைவி கணவருக்காற்றும் தொண்டா????!!!!!!!
சுந்தர் சி நடித்த படங்களிலையே என்னை கவர்ந்தது தலைநகரமும், நகரமும் தான் அதுவும் வடிவேலுவால் தான்
நகரம் தலைநகரம் அளவுக்கு கூட இல்லை. பல இடங்களில் தலைநகரத்தின் சாயல் தெரிகிறது. சென்டிமெண்டாக இருக்கலாம். ஆனால் வெற்றி பெறுவது கடினமே...
நன்றி குமார்
அப்படித்தான் எல்லோரும் சொல்லுறாங்க
நன்றி லக்ஷ்மி அம்மா அவர்களே
எனக்கும் தலைநகரம் படம் பிடிக்கும் .
நன்றி வெறும்பய
நன்றி பாலா
Post a Comment