Tuesday, December 21, 2010

தொடர்கிறது சச்சினின் சாதனைகள்

http://4.bp.blogspot.com/_yYXQ-QmYEjc/S3JLr14khII/AAAAAAAAFmU/JD3cF4JccKk/s400/Sachin+Tendulkar+celebrates+his+46th+Test+century,+India+v+South+Africa,+1st+Test,+Nagpur,+4th+day,+February+9,+2010.bmp

இந்திய அணி தென்னாபிரிக்கா புறப்படுகிறது . சச்சின் 50  ஆவது சதம்
 அடிப்பாரா ? என்று பல ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர் .
 அதனை நிறைவேற்றி உள்ளார் சாதனை மன்னனான சச்சின் .

ரசிகர்கள் எல்லோரும் குதூகலமாக உள்ளனர் . சச்சினின் சாதனைகளை
 சொல்லி கொண்டே போகலாம் . அவரது சாதனைகள் தொடர்ந்த 
வண்ணமே உள்ளது . உலகில் 50 சதங்களை அதாவது டெஸ்ட்
 சதங்களை குவித்த முதல் வீரர் என்ற பெருமையை , 
அவரது சாதனைகளுடன் சேர்த்து கொள்கிறார் .

சச்சின் எப்போதும் சொல்லிகொள்ளும் விடயம் நான் 
சாதனைகளை எதிர்பார்த்து விளையாடுவதில்லை . 
அணியின் வெற்றி முக்கியம் . அதற்காக என்னாலான பூரண ஒத்துழைப்பை நல்குவேன் என்று எப்போதுமே கூறுவார் . 

இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி
 செஞ்சுரியனில் நடந்தது. இப்போட்டியின் 2 வது இன்னிங்சில் 
சச்சின் (111*) சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் டெஸ்ட் 
அரங்கில் 50 சதம் அடித்த உலகின் முதல் வீரர் என்ற சாதனை
 படைத்தார். புதிய சாதனை படைத்த சச்சினுக்கு கிரிக்கெட் 
வீரர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சினை பாராட்ட 
வார்த்தைகள் போதாது. நான் கடந்த 2004ம் ஆண்டு இந்திய அணியில்
 காலடி வைத்தேன். அது முதல் அவருடன் வலைப்பயிற்சியில்
 பங்கேற்று வருகிறேன். ஆரம்ப காலத்தில் அவர் எப்படி முழு 
ஈடுபாட்டுடன் செயல்பட்டாரோ, அப்படியே தான் கடந்த 5 
ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். 21 ஆண்டுகளாக
 கிரிக்கெட் மீது அவர் கொண்ட ஈடுபாடு, இன்னும் 
குறையவில்லை. இது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது
 என்று கூறுகிறார் தோனி.

உடலுழைப்பும், நல்ல மனோநிலையும் சூழ்நிலைக்கு 
ஏற்றாற்போல் விளையாடும் பாங்கும் இருந்தால் சச்சினை 
போல ஆக முடியும் . சச்சின் சூழ்நிலைக்கு தகுந்தபடி
 ஆடக்கூடியவர் . அவருக்கு வயது ஒரு தடை அல்ல . 
வயது கூட கூட அனுபவமும் , அவரது ஆட்ட 
நுணுக்கங்களும் அவரது திறமையும் இன்னும்
 மேலோங்கி தான் காணப்படுகிறது . சச்சினின்
 வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம் .











































































1 comment:

'பரிவை' சே.குமார் said...

vetri nayagan sachin kuriththa pakirvu super. vazhththukkal.