சுனாமி என்ற சொல்லை
கேட்டால் மனம்
பதைக்கிறது , நடுங்குகிறது
அதன் வலி அப்படி
அதன் சோகம் அப்படி
அது ஏற்படுத்திய பாதிப்புகள்
அப்படி அல்லவா
கொஞ்ச நஞ்சமா
அழிவுகள் ஏராளம்
அழிந்த உயிர்கள் ஏராளம்
அல்லவா ? சுனாமியை
இந்த ஆழி பேரலையை
மறக்கத்தான் முடியுமா ???
கடல்கரையில் விளையாடிய
சிறுவர்கள் ஏராளம் பேரை
காவு கொண்டாய்
வீட்டில் உறங்கி கொண்டிருந்த பலரை
காவு கொண்டாய்
கடலில் மீன்பிடிக்க
சென்றவர்களை காவு கொண்டாய்
இப்படி எத்தனை ஏராளம்
வலிகள், வேதனைகளை
சொல்லி கொண்டே போகலாம்
மார்கழி மாதம்
26 ஆம் திகதியை நாம்
எல்லோரும் மறக்கத்தான்
முடியுமா ????
இயற்கையின் கொடூர
தாண்டவம் அல்லவா அது .
கடலுக்குள் மீன்கள்
பொறுக்கிய நாம்
சுனாமியால் மனித
பிணங்களை கண்டோம்
பொறுக்கினோம்
குழந்தைகளை பெற்றோர்களிடம்
இருந்து பிரித்தாய்
பெற்றோரை குழந்தைகளிடம் இருந்து பிரித்தாய்
ஒன்றா இரண்டா உயிர்கள்
கணக்கிடுவதட்க்கு நாம்
ஆழி பேரலை வந்து
ஆறு ஆண்டுகள் ஆனாலும்
என் மனதில் ஆளாத்துயரங்களை
அல்லவா ஏற்படுத்தினாய்
இன்னும் என்றும் எப்போதும்
சுனாமியின் நினைவுகளுடன்
நாம் அனைவரும் .............
4 comments:
ஆழிப்பேரலையில் உயிர் துறந்த அத்தனை உறவுகளுக்கும் அஞ்சலிகள் செய்வோம்.
சுனாமியின் கொடூர விளைவுகளை நேரில் பார்த்த அந்த நினைவுகள் இன்னும் நெஞ்சைவிட்டு அகலவில்லை.அதிலும் குழந்தைகளின் சடலங்களை பார்க்கும்போது நெஞ்சே வெடித்துவிடும் போல் இருந்தது.
எல்லோரும் அஞ்சலி செலுத்த வேண்டும்
நன்றி குமார்
ம்ம் உண்மைதான்
நன்றி இனியவன் அவர்களே
Post a Comment