நான் பொண்ணு ஒன்ன பார்த்தேன்
அவா என்னை பார்க்கவில்லை
நான் எனக்குள்ளே ஒருதலை
காதலாக அவளை காதலித்தேன்
அவள் தான் என் உலகம்
வாழ்ந்தால் அவளுடன் தான் வாழ
வேண்டும் என்று நினைத்தேன்
அவளிடம் போய் என் காதலை
சொல்ல எனக்கு துணிவில்லை
பயமாக இருந்தது - அவள்
என்ன சொல்கிறாளோ என்று
ஒருவேளை வேறோ யாராவது
ஒருவரை அவள் காதலிக்கிறாளோ
அல்லது நான் எனது காதலை
சொல்ல போய் அவளிடம் அடி
தான் தாராளோ என எனக்குள்
ஏக்கமாக இருந்தது - எனது
நண்பனிடம் அவளை பற்றியும்
என் மன ஏக்கத்தையும் அவனிடம்
கூறினேன் - அவன் இவை எல்லாம்
கேட்ட பின்பு பொறுத்திரு என்றான்
இரண்டு நாட்களுக்கு பின்பு
என் நண்பனை வீதியில் கண்டேன்
எனக்கு ஒரே இன்ப அதிர்ச்சி
நான் காதலிக்கும் பெண் என்று
கூறிய அந்த பெண்ணுடன் வீதியில்
கதைத்து கொண்டும் அவள் மீது கை
போட்டு கொண்டும் சென்றான்
நான் கண்டும் காணதது போல்
வீடு வந்தேன் எனக்கு மனது வலித்தது
நண்பனிடம் தொலைபேசி எடுத்து
விசாரித்தேன் அவன் சொன்னான்
நான் அவளிடம் பளிச்சென்று எனது
காதலை சொன்னேன் அவள்
ஏற்றுக்கொண்டாள்- நீ தைரியமில்லாதவன்
நீ மனதுக்குள்ளே காதலிக்க தான் சரி
என்று பதில் கூறினான் -இனிமேல்
அவள் என் காதலி எதிர்காலத்தில்
அவள் என் மனைவி இனிமேல்
அவளை மறந்து விடு என்று கூறி
இணைப்பை துண்டித்து கொண்டான்
இப்போது நான் தாடி வைத்து கொண்டு
தெருவில் அலைந்து கொண்டிருக்கிறேன்
அநாதரவற்ற நிலையில் ......................
4 comments:
கவிதை அருமை.. அந்தபொண்ணு போட்டோ சூப்பர்...
Also See..
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_20.html
பார்த்தீர்களா... அதுக்குதான் காலம் கடத்தாம தைரியமா எதையும் சொல்லணும் எங்கிறது.
நன்றி கருன்
உண்மைதான் .
நன்றி கருணாகரசு அவர்களே
Post a Comment