Wednesday, July 28, 2010

எல்லோரும் பாவிக்கும் வாசனை திரவியம்

perfume_bottles1

எல்லோரும் வாசனை திரவியமான சென்ட் பாவிப்பது வழமை . வியர்வை நாற்றம் தெரியாமல் , மணக்காமல் நல்ல வாசனை வீசுவதற்காக நாம் எல்லோரும் சென்ட் பாவிக்கின்றோம் . என்னதான் வித்தியாசமான உடையுடன், விதவிதமான அணிகலன்களை அணிந்து வலம் வந்தாலும், ஒருவர் உடம்பிலிருந்து வெளியேறும் துர்நாற்றம் அவரைச்சுற்றி இருப்பவர்களை முகம் சுளிக்க வைத்துவிடும்.  வெயில் காலத்தில் இதனுடைய பயன்பாடு இன்னும் அதிகரிக்கும். சிலரிடம் துர்நாற்றம் இல்லையென்றாலும், தன்னைச் சுற்றி உள்ளவர்களை வாசனையால் கவருவதற்காக வாசனைத் திரவியங்களை பயன்படுத்தி வருகின்றனர். 


perfumes

சில வாசனை திரவியங்கள் அதிக வாசனை கொண்டவையாக உள்ளன . ஏனையவர்களுக்கு அந்த வாசனை பிடிக்காமல் தலை சுற்றல் , தலை இடி போன்றவை இருக்கும் . அப்படியான வாசனை திரவியங்களை தவிர்த்து எல்லோருக்கும் பிடிக்கும் , எல்லோரும் விரும்பத்தக்கிய வாசனை திரவியங்களை உபயோகித்தல் நல்லது .

பழங் காலத்தில் இருந்தே உலகமெங்கிலும் வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தபட்ட தாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், முதன்முதலில் வாசனைத் திரவியங் களை பயன்படுத்திய பெருமை எகிப்தையே சேரும். ஒரு காலத்தில் அரசர்கள் , பெரும் மதிப்புக்கு உரியவர்கள் மட்டுமே வாசனை திரவியங்களை உபயோகித்து வந்தனர் . இப்போது எல்லோரும் பயன்படுத்தும் வண்ணம் வாசனை திரவியங்கள் வந்து விட்டன . 
 http://www.perfume-allergy.co.uk/perfume.jpg
பொது வைபவங்கள் , விழாக்கள் செல்லும்போது மட்டும்தான் வாசனைத் திரவியங்களை பயன்படுத்த வேண்டும் என்ற வரைமுறை எதுவும் கிடையாது. அதேபோல் இன்னார்தான் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுபாடும் கிடையாது. அலர்ஜியை ஏற்படுத்தாத வாசனைத் திரவியங்களை யார், எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். 

சிலர் எளிதில் தூங்குவதற்காக இரவில் தூங்க முன்னர் மென்மையான வாசனை வீசும் திரவியங்களை பூசிக் கொள்வர். பொதுவாக வாசனைத் திரவியங்கள் ஒருவித வசீகரமான சூழ்நிலையை ஏற்படுத்துகின்றன. இதனால் தாழ்வு மனபான்மை இல்லாமல் சந்தோஷமாக வெளியில் சுற்ற முடிகிறது. பலர் இருக்கக்கூடிய இடத்தில் உங்களை தனித்தன்மை வாய்ந்தவராகக் காட்டுகிறது. தன்னம்பிக்கைடன் செயல்பட முடிகிறது.

வெயில் காலங்களில் லேசான வாசனைத் திரவியங்களைம், குளிர்காலங்களில் `ஹெவி’யான வாசனைத் திரவியங்களையும் பயன்படுத்த வேண்டும். இயற்கையான நறுமண பொருட்களில் மட்டுமின்றி, கெமிக்கல்ஸ், ஆயில், ஆல்கஹால் போன்றவற்றில் இருந்தும் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கபடுகின்றன. 
http://www.behindthecounter.com/wp-content/uploads/2009/09/nina-ricci-perfumes.jpg
உடலில் பூசிக்கொள்பவை, உடையில் பூசிக்கொள்பவை என இரண்டுவிதமான வாசனைத் திரவியங்கள் உள்ளன. அதில் உங்களுக்கு எது உகந்ததோ அதைத் தேர்ந்தெடுப்பது நல்லது. உடலில் பூசும் வகையிலான வாசனைத் திரவியங்களை பயன்படுத்தும்போது அலர்ஜியை ஏற்படுத்தாத வாசனைத் திரவியங்களாக பார்த்து பயன்படுத்த வேண்டும்.

வாசனைத் திரவியங்களை பொறுத்த வரையில் பாட்டிலில் இருக்கும்போது ஒருவிதமான வாசனையும், உடலில் பூசிக்கொண்டபின் வேறுவிதமான வாசனையும் உண்டாகும். எனவே, வாங்கும்போதே உடைகளில் சிறிது தெளித்து முகர்ந்து பார்த்து வாங்க வேண்டும். சிலவற்றில் பூசிக்கொண்டதும் வாசனை தோன்றாமல், சிறிது நேரம் கழித்தே தோன்றும். இதுபோன்ற வாசனைத் திரவியங்களைத் தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்.
 http://itech.dickinson.edu/chemistry/wp-content/uploads/2008/04/perfumes-set.jpg
மல்லிகையில் இருந்து தயாரிக்கும் வாசனை திரவியம் மல்லிகையின் மம் கொண்டதாக அமையும் .விதவிதமான வாசனைகளில், கலர்களில் வாசனைத் திரவியங்கள் கிடைக்கின்றன.  ஆண்கள், பெண்கள் இருவருக்கும் தனித்தனி வாசனைத் திரவியங்கள் உள்ளன. அதேபோல் பாரம்பரிய முறை, நவீன முறை என இரண்டு விதமான முறைகளில் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கபடுகின்றன. கூடுதலாக இளவயது ஆண், பெண் இருவருமே தங்களது எதிர்பாலினர்களைக் கவருவதற்காக வாசனைத் திரவியங்களை பயன்படுத்துகின்றனர். 
http://itech.dickinson.edu/chemistry/wp-content/uploads/2008/04/800pxcollage_of_commercial_perfumes.jpg
நறுமணம் தரக்கூடிய பூக்களில் தயாரிக்கபடுபவை, பழங்களின் சாற்றில் இருந்து தயாரிக்கபடுபவை, கடலில் உள்ள பொருட்களால் தயாரிக்கப்படுபவை,  மரங்களின் வேர்கள், இலைகள், விதைகள் ஆகியவற்றில் தயாரிக்கபடுபவை, . ரோஜா இதழ்களை கொண்டு நறு மணத்துடன் தயாரிக்கப்பட்டவை என பல வகைகளில் இந்த வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன .

 வாசனைத் திரவியங்களை வாங்கும் முன், மணிக்கட்டின் மீது சிறிதளவு தெளித்து பாருங்கள். சிறிது நேரம் கழித்து அலர்ஜி எதுவும் ஏற்படவில்லையென்றால், அதை வாங்கலாம். அலர்ஜி ஏற்படும் பட்சத்தில் வேறொன்றை பரிசோதிபது நல்லது. 

வாசனை திரவியங்களை பயன்படுத்தும் போது தலை முடிகளில் படாதவாறு பயன்படுத்த வேண்டும் . சிறிதளவே தெளிக்க வேண்டுமே தவிர வாசனை திரவியங்களை அதிகம் தெளிக்க கூடாது . எல்லோரும் வியர்வை நாற்றத்தில் இருந்து விடுபட வாசனை திரவியங்களை பயன்படுத்துங்கள் . வாசனை திரவியங்கள் தயாரிக்கும் நாடுகளில் பிரபல்யம்  பெற்றது பிரான்ஸ் நாடுதான் .





10 comments:

S Maharajan said...

vasanaiyana
thagaval

'பரிவை' சே.குமார் said...

vasanai thiraviyam patriya ariyatha thagavalkal...

nalla pakirvu.

டிலான் said...

பெர்பியூம் பெர்பொமேசன் சூப்பர். பல நல்ல தகவல்களையும் தந்திருந்தீர்கள்.

Admin said...

நல்ல தகவல்கள். பகிர்வுக்கு நன்றிகள்

prince said...

நல்லா விவரமா தான் எழுதிருக்கீங்க! அதிக தகவல்கள்.

Pavi said...

நன்றி மகாராஜன்
நீண்ட நாட்களுக்கு பிறகு

Pavi said...

நன்றி குமார்

Pavi said...

நன்றி டிலான்

Pavi said...

நன்றி சந்ரு

Pavi said...

நன்றி ப்ரின்ஸ்