Monday, February 21, 2011

பாடகர் மலேசியா வாசுதேவன்


http://www.nanbargal.com/images/movies/singers/malaysia-vasudevan.jpg
பின்னணி பாடகரான மலேசியா வாசுதேவன் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார் . மலேசியாவில் பிறந்த இவருக்கு வயது 70 . உறவாடும் நெஞ்சம் என்ற படத்தின் மூலம் பின்னணி பாடகர் ஆனார். 16 வயதினிலே படத்தில் இடம்பெற்ற `ஆட்டுக்குட்டி முட்டையிட்டு என்ற பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். அன்றிலிருந்து பிரபலமானார் .
[play2.jpg]


நடிகராகும் எண்ணத்தில் சென்னைக்கு வந்தவர், வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் பாடகராகும் முயற்சியில் ஈடுபட்டார். இயற்கையிலேயே அமைந்த அவரது குரல் வளம் பல முன்னணி நடிகர்களுக்கும் பொருத்தமாக இருந்தது . பல வித்தியாசமான பாடல்களை பாடி உள்ளார் . இவர் பாடகர் மட்டுமல்ல நடிகரும் கூட .பாரதிராஜா, இளையராஜா ஆகியோருக்கு தொடக்க காலத்தில் நெருங்கிய நண்பராக இருந்து வந்துள்ளார் .இளையராஜா இசையில் ஏராளமான பாடல்களை பாடி உள்ளார் .
http://www.radiomirchi.com/mma2009/tamil/images/malaysia1.jpg
 பூங்காற்று திரும்புமா.. என் பாட்டை விரும்புமா’’, ‘’ஆசை நூறு வகை வாழ்வின் நூறு சுவை’’ என்று ஏராளமான பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.மேலும் இவர் முதல் வசந்தம்ஊமை விழிகள்திருடாதிருடா உட்பட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.கோடைகால காற்றே, அள்ளித் தந்த பூமி, அடியாடு பூங்கொடியே, தங்கச் சங்கிலி என அவர் பாடிய மெலடிப் பாடல்கள் காலத்தால் அழியாதவை.25 ஆண்டுகளில் எட்டாயிரத்திற்கும் அதிகமான தமிழ்த் திரைப் பாடல்களைப் பாடியுள்ளார்.  

நடிகர்கள் சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, சரத்குமார், கார்த்திக் உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் ஏராளமான பாடல்களை பாடியுள்ள மலேசியா வாசுதேவன் தமிழில் மட்டும் 8,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.இது தவிர கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 5,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
http://www.planetradiocity.com/musicopedia/musicphoto/Malaysia_Vasudevan_1238273707_music.jpg
85 திரைப்படங்களில் நடித்துள்ளார் மலேசியா வாசுதேவன். முதல்வசந்தம்,ஊமை விழிகள், திருடா திருடா ,ஒரு கைதியின் டைரி, ஊர்க்காவலன், ஜல்லிக்கட்டு என வெற்றிப்படங்கள் பலவற்றில் வில்லனாகவும் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் .

நடிப்புத்திறமைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தமிழ் சினிமாவின் தனித்துவமான வில்லன், சக குணச்சித்திர நடிகராகக் ரசிகர்களின் மனங்களை  கவர்ந்து கொண்டார். "ஆகாய கங்கை...'' (தர்மயுத்தம்), ""பூங்காற்று திரும்புமா....'' (முதல் மரியாதை) ""பொன்மானைத் தேடி...'' (எங்க ஊரு ராசாத்தி) ""கோயில் மணி ஓசைதனை கேட்டதாரோ...'' (கிழக்கே போகும் ரயில்) உள்ளிட்ட பாடல்கள் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றன . 
http://www.koodal.com/cinema/koodal_reel/2011/Malaysia%20Vasudevan-reel-15.jpg
தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த பாடகர்களுள் ஒருவர் மலேசியா வாசுதேவன். எவ்வளவு கடினமாக பாடலையும் அழகாகப் பாடிய அசாத்திய திறமைசாலி. இவரது தமிழ் உச்சரிப்பு அட்சர சுத்தமாக இருக்கும். அழகாக தமிழ் உச்சரிப்புடன் மிகவும் அழகாக பாடல்களை பாடும் பாடகர்களில் இவரும் ஒருவர் .தமிழக அரசின் கலைமாமணி விருதினையும் பெற்றுள்ளார்.

உஷா என்ற மனைவியும், யுகேந்திரன் என்ற மகனும், பிரசாந்தினி, பவித்ரா என்ற இரு மகள்களும் உள்ளனர்.யுகேந்திரன்  பின்னணிப் பாடகராகவும்,  நடிகராகவும் இவரது மகள் பிரசாந்தினி பின்னணிப் பாடகியாகவும் உள்ளனர். ஏராளமான ரசிகர்களும், நடிகர்களும் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர் . இன்று இறுதி சடங்குகள் நடைபெறுகிறது .
http://www.cinebasti.com/images_celebrities/large/avatar6775.jpg
மலேசியா வாசுதேவன் அவர்கள் எம்மை விட்டு பிரிந்தாலும் அவரது பாடல்கள் என்றும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து இருக்கும் . அவரின் ஆத்மா சாந்தியடைய ரசிகர்கள் அனைவரும் பிரார்த்திப்போமாக . நீங்கள் மறைந்தாலும் நீங்கள் பாடிய பாடல்கள் என்றும் உங்களை நினைவு படுத்தி கொண்டே இருக்கும் .









6 comments:

சக்தி கல்வி மையம் said...

அவருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம்..

எம் அப்துல் காதர் said...

நல்லதொரு - குடும்ப தலைவர், பாடகர், மனிதாபிமானி, நடிகர் .....

S Maharajan said...

அவருடைய ஆன்மா சாந்தியடைய
வேண்டுகிறேன்

Pavi said...

நன்றி கருன்
ம்ம்ம்ம்ம்ம்ம் எல்லோரும் பிரார்த்திப்போம்

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம் நன்றி காதர்

Pavi said...

நன்றி மகாராஜன்