மனிதனுக்கு உணவு , உடை , உறையுள் என்பன முக்கியம் போல நித்திரையும் முக்கியம் தான் . மனிதன் ஓடி ஓடி உழைக்கின்றான் , சாப்பிடுகின்றான் . ஆனால், எத்தனை பேர் போதிய நேரம் தூங்குகிறார்கள் .
பிறந்த குழந்தை விழித்து இருக்கும் நேரத்தை விட தூங்கும் நேரம் தான் அதிகம் . ஒரு மனிதன் சராசரியாக எட்டு மணித்தியாலங்கள் நித்திரை செய்ய வேண்டும் ஒரு நாளைக்கு . வேலை செய்பவர்கள் களைத்து போய் இருப்பர். அவர்களுக்கு ஓய்வு தேவை . உடல்நரம்புகள் எல்லாவற்றுக்கும் ஓய்வு தேவை . அந்த ஓய்வை தருவது நித்திரை தான் .
ஞாபக சக்தியை வளர்க்க தூக்கம் உதவுகிறது. மனிதனின் மூளையில் பல்வேறு பகுதிகள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இவற்றுக்கிடையில் பலவீனமான ஒருங்கிணைப்பு இருக்கும் பட்சத்தில் அது தூக்கத்தில் பலப்படுத்தப்படுகிறது. மூளையிலுள்ள, “ஹிப்போ கேம்பஸ்” என்ற பகுதி, நீண்ட காலத்துக்கு நினைவுகளை சேமிக்கும் பகுதி. தூக்கத்தின் போது, அன்றைய நினைவுகளை உள்வாங்கி நீண்ட காலப் பகுதியில் சேமித்து வைத்துக் கொள்கிறது.அதனால், சிறு தூக்கம் அல்லது ஆழ்ந்த உறக்கம், ஹிப்போ கேம்பஸ் வேலை செய்ய உறுதுணை செய்யும். அதன் மூலம் நினைவாற்றல் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் .
எல்லோரும் ஒவ்வொரு மாதிரி நித்திரை செய்வார்கள் . குப்பறப்படுத்தும் , நிமிர்ந்து படுத்தும் , சுருண்டு படுப்பதும் வழக்கம். குப்புறப்படுத்து தூங்குபவர்கள்: சோம்பேறித்தனம் மிகுதியாக உள்ளவர்கள், உழைப்பில் ஆர்வம் இல்லாதவர்கள், தங்கள் வேலையின் மீது பற்று இன்றி இருப்பர், சுருண்டு படுத்து உறங்குபவர்கள்: கோழைகள் , எப்போதும் , எதற்கும், எதிலும் பிறர் ஆதரவை நாடி நிற்பவர்கள். மல்லாந்து படுத்து உறங்குபவர்கள் : தன்னம்பிக்கை மிக்கவர்கள் ,பொது நலனில் அக்கறை கொண்டவர்கள், பிறரை எளிதில் கவரும் ஆற்றல் கொண்டவர்கள். இப்ப சொல்லுங்க நீங்க எந்த ரகம் என்று ???
8 comments:
எவ்வளவு நேரம் நீங்கள் நித்திரை கொள்கிறீர்கள் ?
5 HOURS ONLY
THANKS FOR THIS ARTICLE PAVI
தூக்கத்தின் பின் விளைவுகளையும், ஒரு மனிதனுக்கு எத்தனை மணி நேரம் தூக்கம் அவசியம் என்பதையும் உங்கள் பதிவில் அலசியுள்ளீர்கள்.
பகலில் அதிக நேரம் தூங்கினால், உடல் பருமன் ஆகும் என்கிறார்கள்.
இப்ப சொல்லுங்க நீங்க எந்த ரகம் என்று ??//
நான் எல்லாம் ஒவ்வோர் மணி நேரத்திற்கும் ஒவ்வோர் பொசிசனில் தூங்குற ஆள்...
ஆதலால் நான் எந்த ரகம் என்று சொல்ல முடியலையே சகோ
6 மணீ நெரத்தூக்கம் நிச்சயம்.. 8 மணி நேரத்தூக்கம் லட்சியம்
நான் சரியா எட்டு மணிநேரம் நித்திரை செய்வேன்
நன்றி சரவணன்
நன்றி நிரூபன் உங்கள் வரவுக்கும், கருத்துக்கும்
நான் எப்படி இரவில் சரிந்து படுக்கிறேனோ எழும்பும்போதும் அதே பக்கத்தில் கிடப்பேன் .
படுத்தால் விடிந்தவுடன் தான் கண் முழிப்பேன்.
நன்றி செந்தில்குமார்
Post a Comment