தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவின் பிறந்தநாள் ஜூலை மாதம் 23 ஆம் திகதி .
தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனது வித்தியாசமான நடிப்பு , வித்தியாசமான படங்கள் நடித்து கூடுதலான ரசிகைகளை கொள்ளை கொண்டவர் . வசந்தின் இயக்கத்தில், 'நேருக்கு நேர்' என்ற படத்தின் மூலம் வெள்ளித் திரையில் காலடி எடுத்து வைத்து 'பெரியண்ணா', 'பிரெண்ட்ஸ்', 'நந்தா', 'மௌனம் பேசியதே', 'காக்க காக்க', 'பிதாமகன்', 'ஆயுத எழுத்து', 'கஜினி,' 'ஆறு', 'சில்லுன்னு ஒரு காதல்', 'வாரணம் ஆயிரம்', 'அயன்', 'சிங்கம்', போன்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர் .
எனக்கு கஜினி படம் ரொம்பவும் பிடித்து இருந்தது . அவரின் அற்புதமான நடிப்பு எனக்கு மிகவும் பிடித்து இருந்தது . அதன் பின்பு சூர்யாவின் அயன் படம் நான் ரொம்பவும் ரசித்து பார்த்த படங்களில் ஒன்று . அடுத்த படம் சிங்கம் . சூர்யா பொலிஸ் கெட்டப்பில் வந்து அசத்தி இருப்பார் . பாடல்களும் நன்றாக இருந்தது .
சூர்யாவுக்கு ரசிகர்கள் அனைவரினதும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .
4 comments:
அப்படியே என் வாழ்த்தையும் பதிவு செய்து விடுகிறேன்...
vazhththukkal.
நன்றி சௌந்தர்
நன்றி குமார்
Post a Comment