Monday, September 19, 2011

அதிகரித்துவரும் விவாகரத்துகள்


http://seekmediation.com/images/0001%20-Divorce%20Court%20Drama.JPG
எவ்வளவோ கஷ்டப்பட்டு பெற்றோர் தமது மகளுக்கோ / மகனுக்கோ கல்யாணம் செய்து வைக்கிறார்கள் . சில கல்யாணம் காதல் கல்யாணத்தில் போய் முடிகிறது . எந்த கல்யாணம் ஆனாலும் எல்லா கல்யாணங்களும் நீண்ட நாட்களுக்கு அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்கிறார்களா ?
http://loveattraction.blog.com/files/2010/08/divorce5.jpg
முதலில் ஒரு பெண்ணை ஒரு ஆணுக்கு கல்யாணம் செய்து கொள்வதற்க்கு முதல் பெண் வீட்டுக்காரர் ஆணை பற்றி விசாரித்து , குடும்ப சூழ்நிலைகளை பற்றி விசாரிக்கிறார்கள் . அதே போல் தான் ஆண்வீட்டுக்காரர்களும் பெண்ணை பற்றி விசாரிக்கிறார்கள் . குடும்பத்தை பற்றி விசாரிக்கிறார்கள் . பின்பு கல்யாணம் செய்து வைக்கிறார்கள் . அதுவும் முக்கியமாக ஜாதகம் பொருத்தமாக இருக்க வேண்டும் . இப்போது எல்லாம் நூறு , இருநூறு ஜாதகம் பார்த்தால் தான் ஏதாவது ஒன்று சரிவருகிறது . அப்போ பெற்றோர் எவ்வளவு கஷ்டப்பட்டு பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து வைக்கிறார்கள் என்று யோசியுங்கள் .
http://www.blogcdn.com/www.walletpop.com/blog/media/2008/11/divorce.money.jpg
கல்யாணம் ஆயிரம் காலத்து பயிர் , இருமனம் சேர்ந்து ஒருமனம் ஆகும் திருமணம் என்று இருமனங்களை ஒன்று சேர்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள் . ஆயிரங்காலத்துப் பயிர் என்பர் திருமணத்தை. அத்தகையப் பயிரானது நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்களாகி இன்று அடிக்கும் சூறாவளியில் சிதைந்துப் போகிறது. கடைசியில் விவாகரத்தில் முடிகிறது .
http://www.moveoneinc.com/blog/wp-content/uploads/2011/03/divorce-money-fight.jpg
கைநிறைய சம்பளம் , கண்டதும் காதல் பின்பு மோதல் , கட்டற்ற சுதந்திரம் போன்ற இக்காலகட்ட தொழில்நுட்ப வளர்ச்சி போன்றன இந்த விவாகரத்துகள் ஏற்பட காரணிகளாகின்றன . காதலிக்கும் போது எல்லாவற்றையும் கதைத்து பேசி முடித்து விடுகிறார்கள் . பின்பு திருமணம் செய்து கொண்டவுடன் பேசுவதற்க்கு ஒன்றும் இல்லை . 
http://www.insightempire.com/Divorcelawyerconsultation/divorce%20lawyer.gif
இன்றைய இளம் தலைமுறையினர் எந்த அளவுக்கு வேகமாக திருமண வாழ்வில் இணைகிறார்களோ அதே வேகத்தில் மண வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள் . முறித்துக் கொள்கிறார்கள் . பின்விளைவுகளை பற்றி யோசிப்பதில்லை . விவாகரத்ஹ்டு கோருகிறார்கள் . 

வீட்டில் ஒரு மனஸ்தாபம் , பிரச்சனை , புரிந்துணர்வு இன்மை , சந்தோசமின்மை, இருவரும் ஒருவரை ஒருவர் மனம்விட்டு பேச நேரம் கிடைப்பதில்லை , என்று பிரச்சனைகள் நீண்டுகொண்டே போகின்றன . இப்போது எல்லாம் கணவன் அதிக சத்தமாக குறட்டை விடுகிறார் என்று விவாகரத்து கோருகிறார்கள் . மனைவி அதிக உடல்பருமனாக இருக்கிறார் எனக்கு விவாகரத்து வேண்டும் என்று கணவன் கேட்கிறார் , கணவன் குடித்துவிட்டு அடிக்கிறார் , வீட்டுக்கு நேரத்துக்கு வருவதில்லை , சண்டை பிடிக்கிறார் என்று மனைவிமார் விவாகரத்து கோருகிறார்கள் . கணவன்மார் சொல்கிறார்கள் மனைவி வீட்டில் சமைப்பதில்லை , சண்டை பிடிக்கிறார் , கோபமாக பேசுகிறார் , வாய்காட்டுகிறாள் என்று கணவன்மார் விவாகரத்து கோருகிறார்கள் .
http://www.burtfeldman.com/familyblog/wp-content/uploads/2009/11/heart-puzzle-300x300.jpg
இதனால் எல்லா நாடுகளிலும் நீதிமன்றங்களில் விவாகரத்து கோரி நிற்கும் வழக்குகள் நிறைந்து காணப்படுகின்றன . இதற்க்கு முடிவு என்ன என்று தெரியாமல் விழிக்கிறார்கள் , முழித்துக் கொண்டு இருக்கிறார்கள் . முதலில் எல்லா குடும்பங்களிலும் எல்லோரும் சந்தோசமாக , ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் . விவாகரத்துகள் குறைய வேண்டும் .
http://pacejmiller.files.wordpress.com/2010/06/indian-wedding.jpg
கணவன், மனைவி இருவரும் தமது பிரச்சனைகளை மனம் விட்டு பேச வேண்டும் , சந்தோசங்களை , சுக, துக்கங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் . நிகழ்ச்சிகள் , திருமண வைபவங்களில் இருவரும் சந்தோசமாக சென்று வர வேண்டும் . மற்றவர்கள் எவ்வாறு சந்தோசமாக இருக்கிறார்களோ அதே போல் நாமும் இருக்க வேண்டும் என்று இருவரும் பேசி சந்தோசமாக வாழ நினைக்க வேண்டும் . வேலை லீவு நாட்களில் இருவரும் பூங்கா , பீச் என்று மனதுக்கு ஆறுதல் தரும் இடங்களுக்கு சென்று வர வேண்டும் . 
http://manolobrides.com/images/2008/02/coupleanddog.jpg
சில தம்பதியினர் எவ்வளவு சந்தோசமாக வாழ்கிறார்கள் . ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து , சந்தோசமாக . எண்பது வயதிலும் காதலர்கள் போல் சந்தோசமாக இருக்கும் தம்பதியினரும் இவ்வுலகில் இருக்கிறார்கள் தானே . மனஸ்தாபம் எல்லோருக்கும் வரும் . கோபம் எல்லோருக்கும் வரும் . அதுக்கு தகுந்தபடி நாம் அனுசரித்து நடந்து கொண்டால் , ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் வாழ்வில் வசந்தம் வீசும் . விவாகரத்துகளும் குறையும் . தம்பதியினருக்கு இடையில் ஒற்றுமை மலரும்.விவாகரத்துகள் குறைய வேண்டும் . எல்லோரும் சந்தோசமாக இருக்க வேண்டும் . வாழ்க வளமுடன் .




3 comments:

அம்பாளடியாள் said...

புரிந்துணர்வு அற்ற தன்மையே கணவன் மனவியினருக்கு
இடையில் விவகாரத்தைக் கொண்டு வருகின்றது அத்தகைய
நிலைமையைப் போக்கி புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வதன்மூலம்
கணவன் மனைவியினர் ஒற்றுமையாக வாழலாம் என்று அருமையான
கருத்தை முன்வைத்துள்ளீர்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு ....முடிந்தால்
வாருங்கள் என் தளத்திற்கும் ............

அம்பாளடியாள் said...

தமிழ்மணம் 2

Pavi said...

நன்றி அம்பாள் அடியாள் உங்களை வருகைக்கும், கருத்துக்கும்