Sunday, September 25, 2011

கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும்


எல்லோரும் கஷ்டப்பட்டு உழைத்தால் தான் வாழ்க்கையில் முன்னேறலாம் . சந்தோசமாக இருக்கலாம் . சிலர் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கும் வரைக்கும் வீணாக பொழுதை கடத்திக் கொண்டு இருப்பார்கள் . அது தவறு .

எமக்கு கிடைத்த வேலையை செய்து கொண்டு நாம் வேறு வேலைகளுக்கும் முயற்சி செய்து கொண்டு இருக்க வேண்டும் . எத்தனையோ பேர் வேலையே எனக்கு கிடைக்குது இல்லையே என்று மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் . 
http://www.7junipers.com/images/sea/bali-rice-farmer.jpg
சிலர் என்ன வேலை செய்தாவது தமது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு உழைத்து முன்னேறுகிறார்கள் . நாம் நினைத்தது கிடைக்க வில்லை என்றால் நமக்கு கிடைப்பதை தக்க வைத்துக் கொள்வதே சிறந்த தெரிவு . 

இப்போது இளையர்கள் , யுவதிகள் இருவரும் வேலைக்கு சென்றால் தான் குடும்பத்தை கொண்டு நடத்தலாம் . படித்துவிட்டு வீட்டில் வீணாக பொழுதை கழிக்காமல் வேலைக்கு செல்வது ஒன்றும் தவறில்லை . ஆனால், சிலர் கிடைக்கும் சம்பளத்துக்கு அதிகமாக அவர்களுக்கு அவர்களின் அலங்காரத்துக்கும், உடைகளுக்கும் , வாகன போக்குவரத்துக்கும் செலவாகின்றது என்று அங்கலாய்ப்பவர்களும் நம்முள் உண்டு .
http://www.tip20.com/wp-content/uploads/2011/05/157966_waiter.jpg
இப்போதைய கால கட்டத்தில் பொருட்களின் விலை ஏற்றமும் , குடும்பத்தில் எப்படியாவது ஐந்து பேர் ஆவது இருப்பர். அப்போது அந்த வீட்டில் ஒருவர் உழைத்து சரிவராது . அவரின் உழைப்பு சாப்பாட்டுக்கு மட்டும் தான் போதும் . ஏனைய வசதிகளை செய்ய முடியாது . தண்ணீர் , மின்சாரம் , தொலைபேசி கட்டணங்கள் கட்ட வேண்டும் . ஏதாவது விசேசங்களுக்கு அன்பளிப்பு கொடுக்க வேண்டும் , தீபாவளி , தைபொங்கல் என்று விசட தினங்களுக்கு புதிய ஆடைகள் வாங்க வேண்டும் . இப்படி பல செலவுகளை ஈடு செய்ய வேண்டும் . 

களவெடுத்து , வழிப்பறி செய்து பிழைப்பதை விட ஒரு நேர உணவாக இருந்தாலும் கஷ்டப்பட்டு உழைத்து தன சொந்தக்காலில் நின்று வாழ்தல் தான் முக்கியம் . ஏனையவர்களை நம்பி நாம் வாழ்தல் கூடாது .

5 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரைட்டு

Unknown said...

"நாம் நினைத்தது கிடைக்க வில்லை என்றால் நமக்கு கிடைப்பதை தக்க வைத்துக் கொள்வதே சிறந்த தெரிவு" "வழிப்பறி செய்து பிழைப்பதை விட ஒரு நேர உணவாக இருந்தாலும் கஷ்டப்பட்டு உழைத்து தன சொந்தக்காலில் நின்று வாழ்தல் தான் முக்கியம்"

எல்லோரும் பின்பற்ற வேண்டிய கருத்துக்கள்

Unknown said...

நல்ல பதிவு.பதிவின் சாராம்சம் ஒத்து கொள்ள வேண்டிய உண்மைதான் சகோதரி.

Pavi said...

நன்றி வியபதி

Pavi said...

நன்றி செழியன்.