ஆணாக இருந்தால் என்ன , பெண்ணாக இருந்தால் என்ன ர்ந்த பிள்ளைகள் ஆனாலும் பெற்றோர் கஷ்டப்பட்டு வளர்க்கிறார்கள் . எந்த பிள்ளையும் பெற்ற்ரோர்களுடன் இருந்து வளரும் போது சந்தோசமாக , அன்பாக , கஷ்டம் என்றால் என்ன என்று தெரியாதபடி சில பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்கிறார்கள் .
சில பிள்ளைகள் இள வயதிலேயே பெற்றோரை இழந்து உண்ண உணவின்றி, உடுக்க உடை இன்றி கஷ்டப்படுகிறார்கள் . கல்யாணப் பொருத்தங்கள் பார்த்தவுடன் பெண் வீட்டாருடன் மாப்பிள்ளை வீட்டார் பேசுவார்கள் . முதலில் கேட்பது பெண்ணுக்கு எவ்வளவு சீதனம் கொடுப்பீங்க ? எவ்வளவு நகை போடுவீங்க ? சொந்த வீடு கொடுப்பீங்களா ? இப்படி கடைகளில் பொருட்கள் வாங்குவது போல் லிஸ்ட் போடுவார்கள் .
அதே கொஞ்சம் படித்த பேர்வழிகள் என்றால் நாங்கள் சீதனம் கேட்க மாட்டோம் . சீதனம் எங்களுக்கு வேண்டாம் . ஆனால், நீங்கள் உங்களுடைய மகளுக்கு என்ன செய்ய வேண்டுமோ செய்யுங்கோ என்பார்கள் . சிலர் சொல்வார்கள் உங்களது பிள்ளைக்கு உங்களால் என்ன கொடுக்க முடியுமோ அவற்றை கொடுத்து அனுப்புங்கோ . நாளைக்கு உங்களது பிள்ளை கஷ்டப்பட்டு நிற்கக்கூடாது பாருங்கோ ? என்பார்கள் .
அப்போ மகளை பெற்ற பெற்றோர் எங்களது பிள்ளை புகுந்த வீட்டுக்கு வெறும்கையுடன் போக கூடாது . அவளும் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் . நாலுபேர் நாலு விதமாக அவளை பற்றி தரக்குறைவாக பேச கூடாது என்று நினைத்து செய்ய வேண்டியவைகளை செய்வார்கள் . ஒரு பேச்சுக்காவது யாரேனும் நீ என்னத்தை கொண்டு வந்தனீ வரும்போது ? வெறும் கையுடன் தானே வந்தநீயடி என்று ஒரு சொல்லு சொன்னால் எமது பிள்ளை கலங்கி போய் விடுவாளே என நினைத்து பெற்றோர் தம்மால் இயன்றளவு தமது பெண்ணுக்கு செய்ய வேண்டியவற்றை செய்து புகுந்த வீட்டுக்கு அனுப்புவார்கள் .
சில வீடுகளில் பெண்கள் நாப்பது வயது ஆகியும் திருமணம் நடக்காமல் இருக்கிறார்கள். கேட்டால் எங்களுடன் அவ்வளவு சீதனம் கொடுத்து செய்ய கூடிய வசதி இல்லை . அதனால் நாம் சொந்த காலில் சுய சம்பாத்தியத்தில் இருக்கிறோம் . ஆசிரியராக , கைப்பணி வேலை செய்பவராக , புடைவை கடைகளில் வேலை செய்பவராக இருக்கிறோம் . எங்களது அப்பா, அம்மா இருவரும் கஷ்டப்பட்டவர்கள் . அவர்களிடம் இலட்சங்கள் கொடுத்து எம்மை வாழ வைக்க பணம் இல்லை . நாம் அதனால் திருமணம் செய்யவில்லை . எனது சம்பாத்தியத்தில் எனது பெற்றோரை இறுதிவரைக்கும் நன்றாக , சந்தோசமாக வைத்திருப்பேன் என்கிறார்கள் . அவர்கள் இறந்ததும் தனது எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமே , இந்த சமூகத்தில் தான் சந்தோசமாக வாழ தனக்கு ஒரு துணை வேண்டுமே என்று அவள் எப்போது சிந்திக்க போகிறாள் .
மாப்பிளை வீட்டார் : பொண்ணுக்கு எவ்வளவு நகை போடுவீங்க ?
பொம்பிளை வீட்டார் : நீங்க என்ன போடுவீங்க ?
மாப்பிளை வீட்டார் : நீங்க பொண்ணுக்கு போட்டு விட்ட நகையை எடை போடுவோம் .
ஹி...................ஹி ...................ஹி ......................
எப்பிடி இருக்கு சமுதாயம் ? எங்கு சென்று கொண்டு இருக்கு .
அதுவும் இப்போது என்ன இந்த காலத்தில் கேட்கிறார்கள் தெரியுமா ? பொண்ணுக்கு தாலி பத்து, பதினைந்து , இருபது பவுணில் தாலி செய்ய வேண்டும் . அதுக்கே எங்களுக்கு ஆறு , எட்டு , பத்து இலட்சம் வேண்டும் . நீங்க சீதனம் தந்தால் அதை உங்களது மகளுக்கு தாலி செய்யவே முடிந்து விடும் . பின்பு எங்களுக்கு எங்கே மிஞ்சுவது மிச்சம் . இது எப்பிடி இருக்கு ???
சில வீடுகளில் சீதனம் பெண்களிடம் வாங்கி மாப்பிளை வீட்டாருக்கு ஒரு செலவும் இல்லாமல் பெண் வீடாரே எல்லா செலவுகளையும் செய்து விடுகிறார்கள் . சீதனத்தை வாங்கி பெற்றோர் தமது எதிர்காலத்துக்கு என்று தமது வங்கி கணக்கில் போட்டு விடுகிறார்கள் . மகன் கல்யாணம் செய்ததும் நம்மை கவனிக்க மாட்டான் . எமக்கு கடைசி காலத்துக்கு தேவை தானே . மருந்து செலவுக்கு என்கிறார்கள் ???
காலம் எப்படி போய் கொண்டு இருக்கிறது என்று பெரு மூச்சு தான் விட வேண்டி இருக்கிறது ???????
பார்க்க போனால் காதலிச்சு திருமணம் செய்யலாம் என்று நினைக்கிறீர்களா ? அதிலும் தொல்லை இருக்கிறது . இருவரும் அறியா வயதில் காதலித்து ஓடி விடுவார்கள் . காதலியின் கையில் , காதில் கிடக்கும் நகைகள் இருக்கும் வரைக்கும் சுற்றி திரிந்து , சந்தோசமாக இருப்பார்கள் . முடிந்ததும் நீ உன்னுடைய அம்மா , அப்பாவிடம் உனக்கு சேர வேண்டிய சொத்து , நகைகளை வாங்கி கொண்டு வாடி என துரத்தி விடுகிறார்கள் . இறுதியில் மகள் கண்ணீர் விடுக்கொண்டு பெற்றோரிடம் வருகிறாள் . பெற்ற மனம் என்ன செய்யும் ??? இறங்கும் . பரிதவிக்கும் , தினம் தினம் கவலைபட்டு பெற்றோர் தம்மையே உருக்கி கொள்வார்கள் தம் மகளின் நிலையை அறிந்து .
எவ்வளவோ பாதிக்கப்பட்ட உள்ளங்களில் மனக்குமுறல்கள் இப்படியானவை . இவை வதந்திகளோ , பொய்களோ இல்லை . நியமானவை . சிந்திக்க வேண்டும் எல்லோரும் .
9 comments:
21-ம் நூற்றாண்டில் கூட இப்பிரச்சனை விடாமல் தொடர்வது வேதனைதான்...
வேதனையான சம்பவங்கள் நிறைய இருக்கிறது...
இந்நிலை மாற வேண்டும்...
இந்நிலை மாறவேண்டும்...
நல்ல பகிர்வு...
வருத்தமான விடயங்கள். திருந்தாத சமுதாயம்.
சீதனம் கேட்கும் பெற்றோர் தாமும் அந்த நிலையை கடந்துதான் வந்துள்ளதை உணர மறக்கிறார்கள்.அதுதான் மிகவும் கவலைக்கிடமான விடயம்.இந்நிலை கட்டாயம் மாறணும்.
ஆமாம். வேதனை தான் .
நன்றி சௌந்தர் உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும்
நன்றி குமார்
ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம் . நன்றி வருண்
ம்ம்ம்ம் எப்பதான் விடிவுகாலம் பிறக்கின்றதோ ...............
நன்றி சித்தாரா
Post a Comment