ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து இருப்பதினால் உடலின் இயக்கங்களும் குறைகின்றன . கண்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது . கண்கள் ஒரே நேரத்தில் வேலை செய்வதால் கண்கள் சோர்வு அடைகின்றன . கண்களில் கருவளையம் ஏற்பட வாய்ப்புகளும் உண்டு .
இளம் வயதினர் பலருக்கு தலைவலி அதிகம் ஏற்படுகிறது . அதற்க்கு காரணம் அதிக நேரம் கணனியின் முன்னால் உட்காந்து இருப்பது தான் காரணம் . இடைக்கிடை கண்களை அசைத்து கொள்ள வேண்டும் . ஒரே இடத்தில் அதிக நேரம் இருக்காமல் கொஞ்ச நேரம் நடந்து விட்டு கணணி முன்பு உட்காருங்கள் . இந்த தலைவலியை குறைக்கலாம் .
முதுகு வலி கூட ஏற்படுகிறது . நாம் கதிரையில் உட்காரும் போது நிமிர்ந்து உட்கார வேண்டும் . கூனி இருக்க கூடாது . இதனால் முதுகு கூனுகிறது . முதுகு வலி கூட ஏற்படுகிறது . கைகளுக்கும் சிறிது ஓய்வு கொடுக்க வேண்டும் .
எனவே கணணியில் வேலை செய்பவரா நீங்கள் . கவனம் . ஓய்வு எடுங்கள் . தலைவலி , முதுகுவலி போன்றன வராமல் பாதுகாத்து கொள்ளுங்கள் .
6 comments:
நிறையபேரு இன்னிக்கு கணினி முன்பு நிறைய நேரம் செலவிடுகிரார்கள் அவர்கள் அனைவருக்குமே பயன் படும் தகவல் சொல்லி இருக்கீங்க. நன்றி
கணினி முன் அதிக நேரம் செலவிடும்போது எனக்கு ஆரம்பத்தில் இது போல பிரச்சனைகள் வந்தன.உபயோகமான பயனுள்ள பதிவு.
நல்ல உபயோகமான பகிர்வு பவி.
கடந்த ஒரு வாரகாலமாக கிட்டத்தட்ட 14 மணி நேரம் (8 மணி முதல் இரவு 12 மணி வரை) தொடர்ந்து கணிப்பொறியில் வேலை.... உடம்பு ரொம்ப சோர்வாயிருச்சு... இருந்தும் இன்னும் வேலை தொடர்கிறது... நீங்கள் சொல்வது போல் அப்பப்ப எழுந்து நடந்து ரிலாக்ஸ் செய்து கொண்டாலும் வேலை காரணமான மனச் சோர்வு என்னவோ குறையவில்லை.
நன்றி லக்ஷ்மி அம்மா அவர்களே
நன்றி நண்பரே . எனது பதிவு உங்கள் எல்லோருக்கும் பயன்படுகின்றது என்றால் அதில் எனக்கு சந்தோசமே .
என்ன செய்வது . எனினும் நாம் எமது உடம்பையும் கவனித்துக் கொள்ள வேண்டும் நண்பரே . நன்றி குமார்
Post a Comment