Friday, June 3, 2011

அயனின் வசூலை முறியடித்தது கோசூர்யாவின் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம் அயன் . சிறந்த கதையம்சம் , பாடல்கள் , நடிப்பு என எல்லோரும் விரும்பி பார்த்த திரைப்படங்களில் அயனும் ஒன்று . கே .வி .ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்து வசூலையும் அள்ளிக்கொண்டது . இப்போதெல்லாம் கே .வி .ஆனந்த் படங்கள் என்றால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகின்றது . 
http://www.gtntv.net/wp-content/uploads/2010/07/ayan1.jpg
காரணம் எல்லாதரப்பு ரசிகர்களும் பார்க்க கூடியதாகவும் , சிறந்த கதையம்சத்துடனும் , சிறப்பான பாடல்களையும் கொண்டு இருப்பதனால்  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவருடைய படங்களை பார்க்க விரும்புகின்றனர் . படங்களும் வெற்றி பெறுகின்றன . ஆபாச வசனங்கள் இல்லை . இரட்டை அர்த்தங்கள் இல்லை . நடைமுறை யதார்த்தத்தை திரையில் காட்டுகின்றார் . அதனால் தான் கே.வியின் படங்கள் வெற்றிபெற இன்னுமொரு காரணம் . 
http://4.bp.blogspot.com/-BChShU43weU/TbEChxEEvsI/AAAAAAAACsE/_1KN5aLWANM/s400/K-V-Anand.jpg
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான அயன் படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது ஆனந்த் இயக்கி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கோ. ஜீவா, கார்த்திகா, பியா, அஜ்மல் ஆகியோரது அட்டகாசமான நடிப்பில் வெளியாகி, கே.வி.ஆனந்த் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜின் மயக்கும் பாடல்களில் உருவாகிய கோ படம் திரையிட்ட இடங்களிலெல்லாம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
http://3.bp.blogspot.com/_Qq3yK35xp2k/TUVnJIBki5I/AAAAAAAAADo/W5BQUlRcWus/s1600/Ko+Hero+Jeeva.jpg
இப்போதெல்லாம் ஜீவா சிறப்பாக நடிக்கின்றார் . ஏராளமான ரசிகைகளை கொண்டுள்ள நடிகராக வலம் வருகின்றார் . ஒவ்வொரு படத்திலும் அவரின் நடிப்பு மெருகேறி வருகின்றது . தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக ஜீவாவும் வலம்வருகிறார் . கோ வெற்றிக்கு பின்பு ஜீவா காட்டில் அடைமழை தான் . பல இயக்குனர்கள் எல்லோரும் ஜீவாவிடம் கதை சொல்ல காத்திருக்கிறார்கள் . 
http://4.bp.blogspot.com/-rSrIcD44_ho/TaEN_PtYLoI/AAAAAAAAHnQ/nQQ1-9n2IV0/s1600/Jeeva%2527s%2BKo%2BMovie%2BStills%2B%252812%2529.jpg
அலட்டலில்லாத , ஒவாரில்லாத அளவான நடிப்பு , எல்லோரையும் கவரும் முகபாவனை , தனக்கேற்ற உடை அலங்காரம் , நடன அசைவுகள் என்று பிரமிக்க வைக்கின்றார் . கதைகளுக்கு ஏற்றபடி தனது பாத்திரத்துடன் ஒன்றி போகும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் ஜீவா . எந்த கதைக்கும் பொருந்தும் நடிகர்களில் ஒருவராக மாறி இருக்கிறார் ஜீவா . 

50 நாட்களைத் தொட்டுள்ள கோ படம், தற்போது அயன் படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது . அனைத்து இடங்களிலும் வெற்றிகரமாக ஓடி வரும் கோ படத்தில் ஜீவா போட்டோ ஜர்னலிஸ்ட் ஆக நடித்துள்ளார். முன்னாள் ஹீரோயின் ராதாவின் மகள் கார்த்திகா அவருக்கு ஜோடியாக, பத்திரிக்கையாளராக அசத்தலாக நடித்துள்ளார்.
http://2.bp.blogspot.com/-uQBc8T4Hx_4/TaU9-I05cKI/AAAAAAAAOfw/rZdE-T4G2-M/s1600/ko_movie_latest_stills_01.jpg
இப்படம் தெலுங்கில் ரங்கம் என்ற பெயரில் வெளியாகி அங்கும் வெற்றி பெற்றுள்ளது.கோ படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. குறிப்பாக என்னமோ ஏதோ பாடல் அத்தனை பேரின் வாயிலும் முனுமுனுப்பை ஏற்படுத்தி விட்டது. வானொலிகளிலும் பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறது . ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் இயக்குனராக இருக்கிறார் கே.வி . தொடர்ந்து பல படங்களை ரசிகர்களுக்கு கே.வி தர வேண்டும் என்பதே எல்லோரினதும் அவா . 6 comments:

இராஜராஜேஸ்வரி said...

ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் இயக்குனராக இருக்கிறார் கே.வி . தொடர்ந்து பல படங்களை ரசிகர்களுக்கு கே.வி தர வேண்டும் என்பதே எல்லோரினதும் அவா .

பாராட்டுக்கள் பகிர்வுக்கு.

bandhu said...

அயன் படத்தை என்னால் சகிக்கவே முடியவில்லை. திருட்டு வீடியோ விற்பவனையும் வைரம் கடத்துவனையும் என்னால் கதாநாயகனாக பார்க்க முடியவில்லை. அதுவுமில்லாமல் கதாநாயகியை கதாநாயகனிடம் கோர்த்துவிடும் அண்ணன்! தாங்க முடியவில்லை!
கோ படம் பார்க்கவில்லை. பார்க்கும் எண்ணமும் இல்லை!

Lakshmi said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன்
நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2011/06/2.html

Pavi said...

நன்றி ஈஸ்வரி அவர்களே

Pavi said...

நன்றி பண்டு

Pavi said...

மிகவும் நன்றி
எனக்கு மிகவும் சந்தோசம் .
என்னையும் ஒருவராக இணைத்தமைக்கு
நன்றி லக்ஷ்மி அம்மா