Thursday, January 10, 2013

அடம்பிடித்தல் ...................



இப்போதெல்லாம் அடம்பிடிக்கும் பழக்கம் எல்லோருக்கும் இருக்கிறது . சிறு குழந்தை தான் அடம்பிடிக்கிறது . சரி அவன் கேட்டதை செய்யுங்கள் என்று விட்டு விடுகிறோம் . பெரியவர்கள் அடம் பிடித்தால் என்ன செய்வது ?.இப்போது பெரியவர்களும் அடம்பிடித்து தான் தமது தேவைகளை நிறைவேற்றுகிறார்கள் .

ஒவ்வொரு விசயமும் அடம்பிடித்து தான் நினைத்ததை சாதித்து கொள்கிறார்கள் . சின்ன பிள்ளைகள் அடம்பிடிக்கும் போது  இனிமேல் இப்படி செய்ய வேண்டும், சரி கோபப்படாமல் குழந்தைக்கு விளங்கும் படி எடுத்துச் சொல்ல வேண்டும் . குழந்தையை அடிக்காமல் அன்பால் அவர்கள் செய்யும் பிழைகளை சுட்டிக் காட்ட வேண்டும் . 

இந்த பொம்மை வேண்டும் . வாங்கி தந்தால் தான் வீட்டுக்கு வருவேன் என குழந்தை அடம்பிடித்து எப்படியும் அப்பா வாங்கி கொடுத்து விடுவார் . பிள்ளை தனக்கு எது வேணும் என்று தோன்றுகிறதோ அதெல்லாம் கேட்டு அடம்பிடித்து வாங்கி விடும். குழந்தைக்கு அன்பையும் , அறிவையும் கொடுப்பது அவர்களது அம்மாவும், அப்பாவும் . கூடவே அவன் வாழும் சுற்று சூழலும் தான் .

பெரியவர்கள் ஆனதும் சில வீடுகளில் பார்த்தீர்கள் என்றால் பையன் அடம்பிடிப்பான் எனக்கு இந்த புது ஸ்டைல் ஜீன்ஸ் , சேட்  தான் வேணும் . அந்த ஹீரோ போட்ட அதே கலர் தான் வேணும் என்று நிப்பான் . அந்தப் பொண்ணு இந்த கலர் சுடிதார் தான் வேணும் , அதே விலை கூடிய சுடிதார் தான் வேணும் என கடையில் நின்று தமது பெற்றோரிடம் சண்டை பிடிப்பார்கள் . தமது குடும்பத்து நிலைமை என்ன என்பது பற்றி பையனோ, பெண்ணோ சிந்திப்பதில்லை .

பெற்றோர் தமது கையில் உள்ள பணத்துக்கு ஏற்ப தமது பிள்ளைகளுக்கு உடுப்புகளை வாங்கி கொடுப்போம் என்று கடைக்கு வந்து இருப்பர் . ஆனால் , பிள்ளைகள் கேட்கும் உடுப்புகளை வாங்கி கொடுக்க அந்த பெற்ற்ரோரிடம் அவ்வளவு பணம் இல்லை . ஐயோ கடவுளே இவ்வளவு காசு கொடுத்து இந்த உடுப்பை வாங்கவா வேணும் என அந்த பிள்ளைகளை பார்த்து கேட்டால் மற்றவர்கள் மாதிரி நாங்களும் இந்த உடுப்பு தான் போடா வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள் .

தாயும், தந்தையும் மனம் கூனி நிப்பார்கள் . எமது கஷ்டத்தை எமது பிள்ளைகள் புரிந்து கொள்கிறார்கள் இல்லையே என்று நினைத்து கொள்வதும் உண்டு. அதைவிட இப்போதெல்லாம் தமக்கு இந்த பொண்ணு தான் வேணும். இவளைத்தான் நான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று அடம்பிடித்து பெற்றோரின் சம்மதத்துடன் நடக்கும் திருமணங்களும் ஏராளம் . பொண்ணுகளும் அப்படித்தான் . 

இதில் சில திருமணங்கள் சந்தோஷகரமானதாக அமைகிறது . சில திருமணங்கள் மனக்கசப்புகள் வேறு பிரச்சனைகளால் துன்பகரமானதாக அமைவதும் உண்டு . அடம்பிடித்தல் என்பது இப்போது எல்லோருக்கும் இருக்கிறது குழந்தைகளுக்கும் சரி , பெரியவர்களுக்கும் சரி. 

No comments: