Saturday, October 1, 2011

உலக சிறுவர் , முதியோர் தினம் இன்று


அக்டோபர் மாதம் முதலாம் திகதி உலக சிறுவர் தினமாகவும் , உலக முதியோர் தினமாகவும் உலகெலாம் கொண்டாடப்படுகிறது . இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் . நாளைய தலைவர்கள் எதிர்கால முதியவர்கள் ஆகிறார்கள் . 
http://www.wristbandconnection.com/wristbands-events/uploaded_images/universal-children-day-bracelet-774945.gif
எல்லோரும் சிறுவராக நீண்டகாலம் இருக்க முடியாது . அவர்களும் முதிய நிலையை அடையும் போது முதியவர்கள் ஆகின்றனர் . இது இயற்கை . இப்படி சொல்வார்கள் இதையும் கேளுங்கள் . பனை மரத்தில் இருந்து காவோலை விழ குருத்தோலை சிரிக்கிறது என்பார்கள் . அதன் அர்த்தம் என்ன தெரியுமா ? காய்ந்த ஓலை தனது பருவம் முடிந்ததும் மரத்தில் இருந்து கீழே விழும் . அதனை பார்த்து குருத்து ஓலையின் நினைப்பு தான் எப்போதும் அப்படியே மரத்தில் இருப்பேன் என்ற நினைப்பு . தானும் ஒருநாள் இதே ஒலைபோல் காய்ந்தவுடன் மரத்தில் இருந்து கீழே விழுவேன் என்று அதுக்கு அப்போது புரியாது . ம்ம்ம்ம் இப்படித்தான் சில மனிதர்களும் இருக்கிறார்கள் .

இன்று எத்தனை சிறுவர்கள் புத்தகம் ஏந்த வேண்டிய கைகளில் பிச்சை பாத்திரமும் , கல்லுகள் , வண்டில்கள் என்று இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம் . பள்ளி செல்ல வேண்டிய நேரத்தில் படிப்பை தொலைத்துவிட்டு பிச்சை ஏந்தி சாப்பிட்டு பிழைக்க வேண்டிய நிலைமை . இன்று உலகளவில் சிறுவர்கள் பலர் சொல்லொணா துன்ப , துயரங்களை சந்திக்கிறார்கள் .
http://www.prlog.org/11522468-wow-gold-safe-banner.jpg
பலர் பெற்றோரை இழந்தும் , உண்ண உணவின்றி பட்டினியால் உருக்குலைந்தும் , அனாதைகளாக வேறொருவருக்கு அடிமையாக எல்லாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் . என்ன கொடுமையப்பா ? . பசிக்கிறது . என்ன செய்வது . குப்பை தொட்டிகளுக்குள் கொட்டும் உணவை எடுத்து சாப்பிட்டு பசியை போக்கி கொள்கிறார்கள் . 

ஏன் இந்த கொடுமை ? வசதி படைத்தவர்கள் இப்படியான சிறுவர்களுக்கு உதவலாம் . அவர்களையும் தம் பிள்ளைகள் போல எல்லா வசதி, வாய்ப்புகளை செய்து கொடுக்கலாம் தானே . ஏன் இந்த அவலம் . அதே கொடுமை நிலைமை தான் வயது போனவர்களுக்கும் . தமது தாய் , தந்தை என்று பாராமல் பராமரிப்பு நிலையங்களில் பெற்றோரை கொண்டு போய் சேர்க்கிறார்கள் . 
http://farm3.static.flickr.com/2585/4223865559_c4e4010422.jpg
ஒருவர் , இருவர் நல்லவர்களாக இருந்தால் பயன் இல்லை . எல்லோரும் திருந்த வேண்டும் . எல்லோரும் தமது பெற்றோர்களை அவர்களது இறுதிக்காலம் வரைக்கும் கவனமாக பார்க்க வேண்டும் . நீங்கள் ஒரு திறமையான உத்தியோகத்தில் இருக்கிறீர்கள் என்றால் அதற்க்கு காரணம் உங்கள் பெற்றோர் தான் . அவர்கள் உங்களை எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து , படிக்க வைத்து உங்களுக்காக உழைத்து இருப்பார்கள் . அதனை ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள் . நாளைக்கு உங்களுக்கும் இதே நிலைமை வரலாம் . உங்களது பிள்ளைகள் உங்களையும் இந்த நிலைமைக்கு இட வேண்டுமா ? 

காலம் பதில்  சொல்லும் . பொறுத்திரு மகனே என்று சில பெரியோர்கள் சொல்லும் போது தான் அதன் அர்த்தம் உங்களுக்கு சிறிது காலத்துக்கு பிறகு விளங்கும் . ஊருக்கு உபதேசம் செய்து விட்டு நாம் நமது பெற்றோரை ஆச்சிரமங்களில் விடலாமா ? அப்படியும் செய்கிறார்கள் . தனக்கு ஒரு நியாயம் . ஊருக்கு ஒரு நியாயம் . என்ன வாழ்க்கைடா ? 
http://www.sxc.hu/pic/m/m/ma/marcos_bh/936076_--_familys_happy_day_--.jpg
சிறுவர்களாக இருக்கும் போது கவலைகள் இல்லாமல் , பெற்றோர் அரவணைப்பில் சந்தோசமாக பொழுதைக் கழிக்க வேண்டிய தருணம் . அது ஒரு வசந்த காலம் . முதியவர்கள் ஆனதும் தமது பிள்ளைகளை , பேரப்பிள்ளைகளை பார்த்து சந்தோசமாக , கவலைகள் எல்லாவற்றையும் மறந்து , பழைய ஞாபக அலைகளை மீட்டி பார்த்து இருக்கும் பொற்காலம் . 

சிறுவர்கள் , முதியவர்களை அன்பாக , சந்தோசத்துடன் , இன்முகத்துடன் நாம் எல்லோரும் கவனிக்க வேண்டும் . அவர்களிடம் அன்பாக பேச வேண்டும் . சந்தோசமாக எல்லோரும் இருக்க வேண்டும் . நல்லா இருப்போம் . நல்லா இருப்போம் . எல்லோரும் சந்தோசமா இருப்போம் . 


5 comments:

குறையொன்றுமில்லை. said...

சிறுவர்கள் , முதியவர்களை அன்பாக , சந்தோசத்துடன் , இன்முகத்துடன் நாம் எல்லோரும் கவனிக்க வேண்டும் . அவர்களிடம் அன்பாக பேச வேண்டும் . சந்தோசமாக எல்லோரும் இருக்க வேண்டும் . நல்லா இருப்போம் . நல்லா இருப்போம் . எல்லோரும் சந்தோசமா இருப்போம் .

சரியா சொன்னீங்க. நன்று

SURYAJEEVA said...

அருமை, இன்று உலக சிறுவர்கள் தினம் என்று உங்கள் பதிவை படித்து தான் தெரிந்து கொண்டேன்... இது போல் என்று என்று என்ன என்ன உலக தினங்கள் என்று தெரிந்து கொள்ள ஏதாவது வலை தளம் உள்ளதா?

Pavi said...

நன்றி லக்ஷ்மி அம்மா

Pavi said...

நன்றி உங்கள்வருகைக்கும் , கருத்துக்கும் ஜீவா
ம்ம்ம்ம்ம்ம் நிறைய இருக்கின்றன . அதில் சில :
http://www.justgk.com/International-Days.html

http://www.altiusdirectory.com/Society/events-gallery.html

ராமலக்ஷ்மி said...

மிக நல்ல பகிர்வு.