எந்த விடயத்திலும் அதிக எதிர்பார்ப்பு கூடாது . என்னுடைய மகன் நல்லா படிப்பான் . எல்லா பாடமும் பாஸ் பண்ணுவான் என்று அதிகம் எதிர்பார்த்து காத்து இருப்பார் தாய் . ரிசல்ட் வந்ததும் பார்த்தால் அவர் எதிபார்த்ததுக்கு மாறாக இருக்கும் . அப்போது அவருக்கு அதனை தாங்கிக் கொள்ள முடியாது .
அதிக எதிர்பார்ப்பு எமக்கு ஏமாற்றத்தை தருகின்றது . இவர் இப்படி இருப்பார் , இவள் இப்படி இருப்பார் என்று நாம் நினைத்து விட்டு அவருடன் நாம் பேசும்போது அவர் நாம் நினைத்ததை விட வித்தியாசமானவராக இருப்பார் . அல்லது நாம் நினைத்தது தப்பாகி விட்டது . நாம் எதிர்பார்த்ததை விட இவர் நல்லவராக இருக்கிறாரே என்கின்றோம் .
நாம் எதிலும் எதிர்பார்ப்போடு இல்லாமல் இருந்தால் எமக்கு ஏமாற்றமே இருக்காது . நாம் ஏன் வீணாக அதிக கற்பனையில் மிதப்பான் . எது நடக்கிறது அதை கண்டு கொள்வோம் என்று இருந்துவிட்டால் நடக்க வேண்டிய காரியங்கள் நடக்கும் . எமக்கும் ஏமாற்றம் ஏற்படாது .
எமது மகிழ்ச்சியின்மைக்கும் , முகம் சுளிப்பதட்க்கும் என்ன காரணம் என்றால் எதிர்பார்த்தலில் உண்டான ஏமாற்றம் தான் தவிர வேறொன்றுமில்லை . ஒரு ஆண் / பெண்ணோ தனக்கு வரப்போகும் மனைவியோ / கணவரோ எப்படி இருப்பார் என்று தெரியாமல் இருப்பார்கள் . அதில் சிலர் எனக்கு வரப்போகும் கணவர் அஜித் , பிரஷாந்த் , சூர்யா மாதிரி இருக்க வேண்டும் என்று ஒரு எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள் . கற்பனைகளில் மிதக்கிறார்கள் . ஆனால், அவர்கள் நினைத்தது போல எல்லாம் நடக்கின்றதா ? அதிக எதிர்பார்ப்பு நிறைவேறுகிறதா ? சில வேளைகளில் அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது .
இதே ஒரு ஆண் தனக்கு வரப்போகும் மனைவி அசின் , சிம்ரன் , தமன்னா போல இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள் . இப்படியான அதீத எதிர்பார்ப்பு கூடாது . ஏதோ எனக்கென்று இந்த உலகத்ஹ்டில் ஒருத்தி பிறந்திருப்பாள் . பார்க்க லட்சணமாக இருந்தால் சரி . அப்படி, இப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பதில்லை . ஒரு எனக்கு ஏற்ற சுமாரான ஒருத்தி எனக்கு மனைவியாக கிடைத்தால் போதும் . அவள் வெள்ளையாக இருக்க வேண்டும் , மெல்லியவளாக இருக்க வேண்டும் . என்பதில்லை . அளவான தோற்றம் , பொது நிறம் . அவ்வளவும் போதும் என்று நினைக்கின்ற ஆண்களும் இருக்கிறார்கள் . அவர்களிடம் அதீத எதிர்பார்ப்பில்லை .
நாம் எல்லோரும் கற்பனையாக எப்பொழுதும் ஏதாவது ஒன்றை எதிர்பார்க்கின்றோம் . அப்படி வசதியாக இருக்கணும் , இந்த மாளிகையில் வசிக்கணும், கார் வாங்கணும் என்ற அதீத எதிர்பார்ப்புகள் இல்லாமல் எப்பொழுதுமே எமக்கு ஆண்டவனின் கிருபையால் கிடைக்கிறது . எல்லாம் நாம் செய்த செயல் பலனால் தான் கிடைக்கிறது என்று எண்ணுவோம் .
எனவே அதீத எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை தருகிறது . அதிகமாக எதனையும் எதிர்பார்க்காதீர்கள் .
4 comments:
அதீத எதிர்பார்ப்பு வராமல் இருக்க சுய மதிப்பீடு அவசியம்... உங்கள் பலம் மற்றும் பலவீனம் ரெண்டும் தெரிந்திருந்தால் இந்த அதீத மதிப்பீடு பிரச்சினை வராது
உண்மைதான் பவி....
எந்த விசயத்திலும் அதிக எதிர்பார்ப்பு இருக்கவே கூடாது. அது கண்டிப்பாக ஏமாற்றத்தைத் தரும்.
நல்ல பகிர்வு.
உண்மைதான் . நன்றி ஜீவா
நன்றி குமார்
Post a Comment