Wednesday, November 16, 2011

ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை


http://www.aishwaryaraiactress.com/gallery/modeling/large_image/aishwarya-rai-modeling-photos35.jpg

என்று ஐஸ் கர்ப்பமாக இருக்கிறார் என்று அமிதாப் சொன்னாரோ அன்றில் இருந்து எல்லோரும் ஐஸ்க்கு என்ன குழந்தை பிறக்கும் , எப்போது பிறக்கும் என்று காத்திருந்தோர்  பலர் . அதுவும் நவம்பர் இரண்டாம் வாரத்தில் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் அறிவித்ததில் இருந்து ஐஸ்வர்யாவின் ரசிகர்களும், மீடியாக்களும் எப்பொழுது குழந்தை பிறக்கும், என்ன குழந்தை பிறக்கும் என்று டென்ஷனாக சுற்றிக் கொண்டிருந்தனர்.
http://www.aishwaryaraipic.info/photos/Aishwarya-Rai-009.jpg
இன்றைக்குத்தான் ரசிகர்களின் டென்சன் குறைந்து இருக்கு . அதுதானப்பா நம்ம ஐஸுக்கு இன்று காலை 10 மணி அளவில் சுக பிரசவத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது . பிரசவத்திற்காக மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். இன்று அழகிய பெண் குழந்தையை பெற்று எடுத்துள்ளார் ஐஸ் . 
http://cinema.stillgalaxy.com/images/public/04-29-2011/aishwarya%20rai/aishwarya-rai-abhishek-bachan-cannes--film-festival-stills-photo-gallery-pics-3.jpg
இதுவரைக்கும் ஐஸ் பற்றி வெளிவந்த செய்திகள் ஏராளம் .இரட்டை குழந்தைகள் பிறக்கும் என்றும் கூறினார்கள் ஜோசியர்கள் . பத்திரிகைகளிலும், இணையங்களிலும் அதிகம் ஐஸ் பற்றி தான் . புளி அச்சாறு, பீட்சா, டோக்லா, தயிர் வடை, பாவ் பாஜி, பரோட்டா என்று பல உணவுப் பொருட்கள் சாப்பிட ஆசையாக உள்ளதாம். மனைவியின் ஆசையை நிறைவேற்ற அபிஷேக் கடை, கடையாக அலைந்து அவர் கேட்கும் உணவுப் பண்டங்களை வாங்கி வந்து தருகிறார். மனைவியின் ஆசையை நிறைவேற்றுகிறார் என்று நாம் படித்த செய்திகள் பல . http://images2.fanpop.com/image/photos/12700000/Aishwarya-Rai-Abhishek-Bachan-Cannes-Filmfestival-2010-Raavan-Photocall-aishwarya-rai-12701301-712-624.jpg
 ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது . குட்டி ஐஸ் பிறந்திருக்கிறார் என்று அபிஷேக் மிகவும் சந்தோசத்தில் உள்ளார் . எல்லோரினதும் வாழ்த்துக்களும் ஐஸுக்கும் . 


7 comments:

பாலா said...

அடுத்த உலக அழகி ரெடி...

குறையொன்றுமில்லை. said...

வாழ்த்துக்கள் இளம் பெற்றோருக்கு.

Unknown said...

ஒரு வழியாக ஒரு பரபரப்பு ஒய்ந்தது.குழந்தையின் புகைப்படம் மீடியாக்களின் அடுத்த பரபரப்பாக இருக்கும்.

Pavi said...

ம்ம்ம்ம் நன்றி பாலா

Pavi said...

நன்றி லக்ஷ்மி அம்மா அவர்களே

Pavi said...

அப்படித்தான் இருக்கிறது . பரபரப்புக்கு பஞ்சம் இல்லை . நன்றி செழியன்

இராஜராஜேஸ்வரி said...

அழகான பேத்தி! அழகான தாத்தா!!