Monday, October 31, 2011

சிடுமூஞ்சியாக இராதே , சிரித்து வாழ்


http://www.webanswers.com/post-images/5/52/62D673BD-ED8D-4732-BFC9AF4B1DD9C8CE.jpg
சிலரை பார்த்தால் சிரிக்கவே மாட்டார்கள் . முகத்தை ம்ம்ம் என்று இறுக்கமாக வைத்திருப்பார்கள் . உனக்கு காசு கொடுத்தால் தான் சிரிப்பாய் போல் இருக்கிறது என்று சொல்வார்கள் . இப்படியும் இருக்கிறார்கள் . எனினும் , சிரித்து சந்தோசமாக இருப்போரும் உண்டு . சிரித்து வாழ வேண்டும் . சந்தோசமாக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் . 
http://www.firehow.com/images/stories/laugh.jpg
அவசர உலகில் சிரிக்கவே நேரமில்லை என்கின்றனர் . கவலை தான் மிச்சம் என்போரும் உண்டு. எதிர்பார்ப்புகள் அதிகம் , மனச்சுமை, நெருக்கடி , சச்சரவு என்று மனதை சந்தோசமாக வைத்திருக்கவே முடியவில்லை . என்ன செய்யலாம் . கொஞ்ச நேரம் ஒதுக்கி நகைச்சுவை காட்சிகளை ரசிக்கலாம் . சிரிப்பினால், உடல் நலம் பெறும். நகைச்சுவையாக பேசுவதால் நண்பர்கள் அதிகமாவர்கள். உங்களது நண்பர்கள் பலர் நகைச்சுவை உணர்வுடன் பேசுவோரும் உண்டு . அவர்களுடன் கொன்யா நேரம் தொலைபேசியில் உரையாடுங்கள் .
http://www.blogchalktalk.com/uploads/Laughing%20Woman%20Face-thumb.jpg
அனைவருடனும் மகிழ்ச்சியாக பேசி , சிரித்து வாழ்ந்தால் நோய் இல்லை . துன்பம் இல்லை . புன்னகை என்பது ஆன்மாவின் உருவம். கண்ணுக்குத் தெரியாமல் உள்ளுக்குள் மறைந்திருக்கும் ஆன்மா, தனது அழகை வெளிப்படுத்தும்போது, புன்னகை தோன்றுகிறது. ஆன்மா உடலுக்கு எவ்வளவு முக்கியமோ அதைப்போல உடல் நலத்துக்கு ஆன்மா வழங்கும் புன்னகை முக்கியம்.
http://afaceaday.files.wordpress.com/2010/11/sad-face.jpg?w=450&h=356
சிலர் எவ்வளவோ மருந்துகளை போடுகிறார்கள் . நோய் நீங்குது இல்லை என்று கவலைப்படுகிறார்கள் . சந்தோசமாக நாலு பேருடன் உரையாடுங்கள் . மனதை சந்தோசமாக வைத்திருங்கள் . மனதில் சோகத்தையும், கவலையும் வைத்து வைத்து யோசித்து உங்களுக்கு நோய் தான் அதிகம் வருகிறது . யோசிக்காமல் இருங்கள் . 

நாம் அமைதி , சந்தோசம் ஆகியவற்றுடன் இருக்கும்போது நாமும் சந்தோசமாக இருக்கலாம் . நமக்குள் பகை இல்லை , சண்டை இல்லை . ஒருவரை நேருக்கு நேர் காணும்போது உங்களது புன்னகையை தவள விடுங்கள் . சிரியுங்கள் . அவரும் உங்களை பார்த்து புன்னகைப்பார் . ஆண்களை விட பெண்கள் அதிகம் சிரிக்கிறார்கள் . நீண்டகாலம் வாழ்கிறார்கள் . பெண்கள் இயல்பாகவே பலரும் நகைச்சுவைகளை அள்ளி வீசுகிறார்கள் . பல நகைச்சுவை காட்சிகளை விரும்பி பார்க்கிறார்கள் . 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjte7lTXh67BN6oYb-vsriH2NFjCsAmmvHdI5wlxO67b3rg41HQbQ5OHDNq7gLWJczSnw9q6nBdrI8I5esm2MKbwvIjH75aefQuERZTahPbp8b5eXPQHfimbztwhaXVisyKJlQUgbGgHDoI/s320/laugh.jpg
புன்னகையும், சிரிப்பும் தான் நாம் நோய்நொடி இல்லாமல் வாழ்வதற்க்கு சிறந்த மருந்து . நகைச்சுவை உணர்வு எல்லோருக்கும் இருக்க வேண்டும் . மனிதனுக்கு மட்டுமே சிரிக்கும் , சிந்திக்கும் தன்மை உண்டு. சிரிக்கத்தெரியாமல் மனதை இறுக்கமாக வைத்திருந்தால் அவன் விலங்குகளுக்கு ஒப்பானவன் ஆகின்றான் . 

மனதுக்கு சக்தி, ஆரோக்கியம் , ஊட்டச்சத்து தருவது சிரிப்பு , சிரிப்பு மட்டுமே . மனதை சந்தோசமாக வைத்திருங்கள் . மனதை இறுக்கமாக வைத்திருக்காதீர்கள் . எல்லோருடனும் சந்தோசமாக பேசுங்கள் . வாழ்க்கை வசந்தம் வீசும் . வாழ்வில் புன்னகை மலரும் .






12 comments:

rajamelaiyur said...

சிரிப்பு நல்ல மருந்து

SURYAJEEVA said...

வாய் விட்டு சிரிப்போம்... இடுக்கண் வருங்கால் நகுக என்று சும்மாவா சொன்னார்கள்...

தமிழ்வாசி பிரகாஷ் said...

சிரிக்க சிரிக்க

குறையொன்றுமில்லை. said...

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகுமே/

பாலா said...

நீங்கள் சொல்வது சரிதான். எப்போதும் சிரித்த படியே இருப்பவனை எதிரியாளும் வீழ்த்த முடியாது.

'பரிவை' சே.குமார் said...

வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்...
நல்ல பகிர்வு...
சிரிப்போம்.... சிரிப்போம்...

Pavi said...

நன்றி ராஜா

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம் நன்றி ஜீவா

Pavi said...

நன்றி தமிழ்வாசி

Pavi said...

நன்றி லக்ஷ்மி அம்மா

Pavi said...

உண்மைதான் . நன்றி பாலா

Pavi said...

நன்றி குமார்