Monday, October 31, 2011

சின்னத்திரை தொடர்களும் , பெண்களும்இப்போதெல்லாம் எது முக்கியமான வேலை என்று சொல்லுங்கோ பார்ப்போம் . டிவியில் நாடகம் பார்ப்பது . ஐயோ ஒருநாளைக்கு அந்த தொடரில் வரும் எபிசோடை பார்க்காவிட்டால் அன்றைக்கு வீட்டில் அல்லோல கல்லோலம் தான் . இது நான் சொல்லவில்லை சில ஆண்கள் இப்படி சொல்லி புலம்புகின்றனர் . 
http://static7.depositphotos.com/1005869/709/i/110/depositphotos_7098229-Young-women-watch-TV.jpg
சில பெண்களுக்கு டிவி பார்க்கவே நேரம் இருப்பதில்லை. வேலை , வந்தால் வீடு , சமையல் என்று பொழுது போய்விடும் . டிவி பார்க்க நேரமில்லை . சில பெண்களுக்கு டிவி தான் கதி. பொழுதுபோக்கு . எல்லா நாடகங்களையும் தொடர்ந்து பார்ப்பார்கள் . 

ஒரு தொடர் கூட பார்க்காமல் இருப்பதில்லை . தொடர்கள் இத்தனை மணிக்கு ஆரம்பிக்கும் என்றால் அதுக்கு முன்பாக தமது வேலைகளையும் , சமயல்களையும் செய்து விட்டு டிவி முன்னாடி இருந்தால் எல்லா தொடரும் முடிந்த பின்பு தான் எழும்புகிறார்கள் . 
http://www.healthdirect.co.uk/wp-content/uploads/2011/08/television-watching-photo.jpg
இதனால் ஒரு இடத்தில் இருந்து டிவி பார்ப்பதால் இரத்த ஓட்டங்கள் சீராக ஓடாது . வெளி உலகம் தெரியாது , உற்றார், நண்பர்களுடன் அன்பாக பேசி , நாலு விடயங்களை , நாட்டு நடப்புகளை அறிவோதோ கிடையாது , பக்கத்து  வீட்டில் என்ன நடந்தாலும் ஒன்றும் தெரியாது . இப்படி இருக்கிறது காலம் .

உறவினர்கள் வீட்டுக்கு வந்தால் அவர்களை கவனிப்பதோ கிடையாது . அவர்களுடன் கதைத்துக் கொண்டு இருந்தால் டிவி யில் முக்கிய கட்டம் பார்க்க முடியாது என்று தான் . பிள்ளைகள் விளையாடுகிறார்கள் என்று அவர்களை கவனிப்பதில்லை . அந்த பிள்ளைகள் தெருவில் வாகனங்கள் வரும் , அடிபட்டு விடுவார்கள் அவர்களையும் கவனிப்பதில்லை . 

கணவர் வேலைக்கு சென்று வீட்டுக்கு வந்தால் இன்றைக்கு இந்த நாடகத்தில் இப்படி நடந்தது , அப்படி நடந்தது என்று ஒரு நாடக பேச்சு தான் . ஐயோ கடவுளே கொஞ்சம் அமைதியாக இரு . எனக்கு தலை இடிக்கிறது . சி இந்த வீட்டுக்கு வந்தா எண்ட நிம்மதி எல்லாம் போச்சு , சந்தோசம் எல்லாம் போச்சு . என்று புலம்புகிறார் கணவர் . 
http://uniquetourism.com/albums/Bundarika-Spa/yoka_015new.sized.jpg
பெண்களே சற்று சிந்தியுங்கள் . அவர்கள் வேலை செய்து களைப்பாக வரும்போது அவர்களுக்கு சமைத்து , உணவு கொடுத்து , அளவிலாவி பேசி உங்களது இன்ப துன்பங்களை பேசி சந்தோசமாக இருங்கள் . டிவியில் எவ்வளவு அறிவு சார்ந்த விடயங்கள் , நிகழ்ச்சிகள் போகின்றன . சந்தோசமாக வாய்விட்டு சிரிக்க எமது துக்கங்களை மறக்க நகைச்சுவை காட்சிகளை பாருங்கள் . மனம் இலேசாக இருக்கும் . 

நல்ல சிந்தனைகள் , ஆரோக்கியமான உரையாடல்கள் , பட்டி மன்றங்கள் என அவற்றை பார்த்து உங்களது சிந்தனா சக்திகளை மேம்படுத்துங்கள் . நீங்களும் சந்தோசமாக இருந்து மற்றவர்களையும் சந்தோசமாக வைத்திருந்தால் வீட்டில் சண்டை சச்சரவு இல்லை . வீட்டில் எந்நாளும் சந்தோசம் நிலவும் . எல்லாம் பெண்கள் கைகளிலே இருக்கிறது . 

பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்துங்கள் , உங்களது உற்றார், உறவினர்களோடு அன்பாக இருங்கள் , நிகழ்ச்சிகள், பிறந்தநாள் விழாக்களுக்கு சென்று வாருங்கள் . அப்போதுதான் உங்களை பற்றி தெரியும் . நாலுபேர் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று புரியும் . ஒவ்வொருநாளும் டிவி நாடகமே கதி என்று இருந்தால் வெளி உலகம் தெரியாமல் வந்து விடும் .

இதில் சில பெண்கள் விதிவிலக்கு . அவளவையும் , நாடகங்களும் . எந்த நேரமும் கண்ணை கசக்கியபடிதான் இருப்பார்கள் . அந்த நாடகத்தை யார் பார்ப்பது ? ஏதாவது அறிவு சார்ந்த , நகைச்சுவை காட்சிகளை போடுங்கோ . கொஞ்ச  நேரம் டிவி பார்ப்போம் என்று சொல்வோரும் உண்டு .
http://www.slovenia.info/pictures%5CTB_attractions%5C1%5C2008%5CMestni_park5_Slovenia_Slovenija_Maribor_Pohorje_Marko_Petrej_161164.jpg
மன அமைதிக்கு பூங்கா , கோவில் போன்ற இடங்களுக்கு செல்லலாம் . யோகாசனம் செய்யலாம் , உடல்பயிட்சி கொன்யா நேரம் செய்யலாம் . நீச்சல் செய்யலாம் . இப்படி எவ்வளவோ விடயங்கள் இருக்கின்றன . ஒரே வீடு தான் தஞ்சம் என்று இருக்க வேண்டியதில்லை .

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் எல்லோரும் ஒரே மாதிரியா ? இல்லைத்தானே ? 


1 comment:

suryajeeva said...

ஆண்கள் புலம்ப வேண்டியது நீங்கள் புலம்புகிறீர்கள்... நன்றி