Wednesday, November 16, 2011

எனக்கு பிடித்த Ferrero Rocher

 http://4.bp.blogspot.com/_wjXyl5xzYHg/TIT1U7maXqI/AAAAAAAAAQk/PbGSfXBbTG8/s320/ferrero-rocher.jpg

எனக்கு சொக்லேட் பிடிக்கும் . ரொம்ப பிடிக்கும் . எல்லோருக்கும் சொக்லேட் பிடிக்கும் தானே . சரி எனக்கும் சொக்லேட் என்றால் வெள்ளை சொக்லேட் கூடுதலாக பிடிக்கும் . கோகோ சொக்லேட் பிடிக்கவே பிடிக்காது . ஆனால், அதுக்கும் காரணம் உண்டு . கொஞம் கைக்கும் தானே . அதுதான் .
http://www.international-chocolates.com/i/ferrerorocher2.jpg
வெள்ளை சொக்லேட் பிடிக்கும். பருப்பு , கச்சான் போட்ட சொக்லேட்கள் என்றால் ரொம்பவும் பிடிக்கும் . எனது அங்கிள் வெளிநாட்டில் இருந்து வந்து  Ferrero Rocher  சொக்லேட் தந்தார் . நான் சொன்னேன் . அங்கிள் இதென்ன சொக்லேட் . நான் சாப்பிட்டதே இல்லையே. நல்லா இருக்குமா ? ருசியா ? என்று கேட்டேன் . அங்கிள் சொன்னார் .
http://giftsrilanka.com/images/Ferrero%20Rocher%2024%20Pieces.jpg
ஐயோ . நீ இன்னும் இந்த சொக்லேட் சாப்பிட்டது இல்லையா . ரொம்ப நல்லா இருக்கும் . வெளிநாடுகளில் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள் . விலையும் கூட . ம்ம்ம்ம் அப்படியா ? நானும் சாப்பிட்டு பாப்போம் என்று சாப்பிட்டேன் . அன்றில் இருந்து இன்று வரை  Ferrero Rocher என்றால் போதும் . யாரேனும் வெளிநாட்டில் இருந்து வந்தால் சரி . கொண்டுவராமல் விடவே மாட்டார்கள் . எப்பிடியும் எனக்காக கொண்டு வருவார்கள் .
http://peter.evans-greenwood.com/wp-content/uploads/2010/06/ferrero_rocher.jpg
ஒன்று, இரண்டு அல்ல முழுதும் சில மணித்தியாலங்களுக்குள் முடிந்து விடும் . இப்போது எனக்கு பிடித்த சொக்லேட்டாக மாறி விட்டது என்றால் பாருங்களேன் . நண்பர்களே நீங்களும் இந்த  Ferrero Rocher  சாப்பிட்டது உண்டா ?

No comments: