Tuesday, November 15, 2011

சிம்மக்குரல் பாடகர் ஜேசுதாஸ்


http://lyricstranslate.com/files/yesudas.jpg
பிரபல பின்னணிப் பாடகரும் , கர்நாடக சங்கீத இசை மேதையுமான கே. ஜே . ஜேசுதாஸ் திரைத்துறையில் பாடகராக அறிமுகமாகி 50 ஆண்டு காலத்தை நிறைவு செய்துள்ளார் . திரைத்துறையில் இது மிகப்பெரிய சாதனை ஆகும் . மதம், மொழி என்பதற்க்கு அப்பாற்பட்டது இசை . இசைக்கு மயங்காத மனிதன் இல்லை . நல்ல இசை கேட்கும் போது, பாடல்களை கேட்கும் போது நம்மையே நாம் மறந்து விடுகின்றோம் .

தெய்வீக குரலை உடைய ஜேசுதாஸ் அவர்கள் பாடிய அணித்து பாடல்களும் மனதுக்கு இதம் தரும் குரல் , கேட்க கேட்க ரசனையான பாடல்களும் அற்புத குரல் வளமும் இயற்கையிலே அமையப் பெற்றவர் . அது ஒரு கொடை. இறைவன் அளித்த கொடை . எல்லோருக்கும் நல்ல குரல்வளம் வாய்ப்பதில்லை. அப்படி வாய்த்தாலும் அந்த நல்ல குரலை அவர்கள் பயன்படுத்தி சிறந்த பாடகர்களாக திகழ்ந்து விடுவதில்லை . தமது திறமையை அவர்களே மழுங்கடித்து விடுவார்கள் . 
http://tkada.com/wp-content/uploads/2010/11/KJ-Yesudas-Successes.jpg
தனது 50 ஆண்டுகால கலை வாழ்க்கையில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி. பெங்காலி, ஒரியா, குஜராத்தி, துலு, மராத்தி, ஆங்கிலம், ரஷ்யன் உள்ளிட்ட 14 மொழிகளில் 50 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட பாடல்களைப் பாடி சாதனை புரிந்துள்ளார். ம்ம்ம்ம் இப்போதைய பாடகர்கள் இளம் பாடகர்கள் இவ்வளவு காலம் தாக்குப்பிடிப்பார்களா என்றால் சந்தேகம் தான் . இரண்டு, பத்து பாடல்கள் தான் பாடி இருப்பார்கள் . பின்பு அவர்களின் பாடல்களை கேட்க முடிவதில்லை . 

1961ம் ஆண்டு நவ.14ம் தேதி கல்பாடுகள் என்ற மலையாள படத்திற்காக தனது முதல் பாடலை பாடினார். அப்போது தொடங்கிய தனது இசை பயணத்தை இப்போதும் தனது 71 வயதிலும் தொடர்கிறார் என்றால் அது சாதனை தானே . பல விருதுகளை தமது குரல்வளம் மூலம் , பாடல்கள் மூலம் வென்று எடுத்துள்ளார் . தெய்வீகப் பாடகர் எனப் போற்றப்படும் ஜேசுதாசின் பாடல்களை கேட்டு மயங்காதோர் இல்லை . திரைத்துறையில் சிறந்த பாடல்களை பாடியதற்காக 7 முறை தேசிய விருதும், 17 முறை மாநில விருதும் பெற்றுள்ளார். 
http://www.hindu.com/mp/2004/04/01/images/2004040100050101.jpg
என்னை விட்டால் யாருமில்லை" ,  'மலரே குறிஞ்சி மலரே", "தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு" ,  'செந்தாழம் பூவில்',  'பூவே செம்பூவே',  'ராஜ ராஜ சோழன் நான்', 'கண்ணே கலைமானே', 'வெள்ளைப்புறா ஒன்று'  இந்த பாடல்களுக்கு மயங்காதோர் இல்லை. எனக்கும் மிகவும் பிடித்த பாடல்கள் . காலம் கடந்தும் கேட்டு ரசிக்க கூடிய பாடல்கள் . 
http://profile.ak.fbcdn.net/hprofile-ak-snc4/157898_37253407997_3344729_n.jpg
சிம்மக்குரலோன், காந்தக்குரலோன் என தனது குரலால் மயக்கும் வல்லமை கொண்டவர் பாடகர் ஜேசுதாஸ் . இவர் பாடிய பக்தி பாடல்கள் மனதை உருக்கும் வல்லமை படைத்தவை.  வயதையும் காலத்தையும் கடந்த ஒரு அற்புதமான பாடகர் . ஒரு மிகச்சிறந்த ஆண்குரலுக்கு சொந்தக்கார பாடகர்களில் ஒருவர் பாடகர் ஜேசுதாஸ் . பாடகர் எஸ் . பி. பி க்கு அடுத்து நான் ரசிக்கும் இன்னொரு குரல் என்றால் அது ஜேசுதாஸ் அவர்களின் குரல் தான் . அந்த காலத்து பாடல்களுக்கு உயிர் கொடுத்தவர்கள் . 




5 comments:

பாலா said...

ஜேசுதாஸ் அவர்கள் தெய்வீக குரலை உடையவர் என்பது நூறு சதவீதம் உண்மை. அவர் பணி இன்னும் பல ஆண்டுகள் தொடர வேண்டும் என்பதே என் விருப்பம்.

rajamelaiyur said...

அருமையான பாடகர்

r.v.saravanan said...

ராஜ ராஜ சோழன் நான் எனக்கு எப்போதும் பிடித்த பாடல்

எனக்கு மிகவும் பிடித்த பாடகர்களில் ஒருவர் ஜேசுதாஸ்

Pavi said...

நன்றி பாலா . எல்லோருடைய விருப்பமும் அதுதான்

Pavi said...

ம்ம்ம்ம் எனக்கும் பிடித்த பாடல் அது. நன்றி சரவணன்