சில வசதி படைத்தவர்கள் தாம் முன்னேறி தாம் சந்தோசமாக வாழ்ந்தால் சரி. மற்றவர்களை பற்றி எமக்கு கவலை இல்லை என்று அதிக செலவுகள் செய்து சொகுசாக வாழ்கிறார்கள் . செல்வந்தன் இன்னும் வசதி கூடி சொத்து , சுகபோகங்களுடன் வாழ்கிறான் . ஏழை அவன் இன்னும் தாழ்ந்து போகிறான் . அவன் முன்னேற இந்த உலகில் அவனுக்கு வாய்ப்புகள் , வசதிகள் இல்லை .
இன்று உலகில் வேலையில்லாப் பிரச்சனை அதிகமாகி விட்டது . இளைஞர் , யுவதிகள் திண்டாடுகின்றனர் . படித்து விட்டு நல்ல வேலையை எதிர்பார்த்து தமது காலத்தை வீணடிக்கின்றனர் . படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கூட கிடைப்பதில்லை .
பிறந்தநாள் கொண்டாட்டம் , கல்யாணம் என்று ஆடம்பரச் செலவுகள் செய்கிறார்கள் . அதிகம் செலவு செய்து ஆகோ ...ஓகோ என்று கொண்டாட்டங்கள் கொண்டாடுகிறார்கள் . சாப்பாடுகள் விதம் விதத்தில் ஓடர் செய்கிறார்கள் . எல்லோரும் சாப்பிட்டு முடிந்ததும் மீதியாக உள்ள சாப்பாட்டை கொட்டுகிறார்கள் . அதனை ஒருவேளை கூட சாப்பிடாத , கஷ்டப்பட்ட மக்களுக்கு கொடுத்து அவர்களின் வயிற்று பசியை போக்கினால் என்ன . அதனை இவர்கள் செய்வதில்லை . அப்படி அவர்கள் வாயார சாப்பிட்டு வாழ்த்தும் போது எவ்வளவு சந்தோசம் வரும் தெரியுமா ?
இருப்பவர்களுக்கு கொடுத்து பயனில்லை . இல்லாதவர்களுக்கு கொடுக்கும் போது தான் எமது மனம் குளிரும் . இருப்பவர்கள் புளியப்பத்தில் வந்து அதையும், இதையும் போட்டு இரண்டு வாய் சாப்பிட்டு கொட்டி விட்டு போவார்கள் . இல்லாதவர்கள் , பசியோடு இருப்போருக்கு கொடுக்கும் போது அவர்கள் ஒன்றும் விடாமல் வயிறார சாப்பிட்டு நம்மை ஒரு சந்தோசத்துடன் ஒரு பார்வை பார்ப்பார்கள் பாருங்கள் . அதுதான் திருப்தி .
இன்னும் சில நாடுகளில் போதிய உணவு , தண்ணீர் இல்லாமல் எவ்வளவு குழந்தைகள் , பெரியோர்கள் இருக்கின்றனர் . அவர்களை பார்த்தால் ஆவது நாம் திருந்த வேண்டாமா ?கொட்டாமல் , சிந்தாமல் உணவுகளை உண்ணுங்கள் . நமக்கு இறைவன் மூன்று வேளையும் சாப்பிட்டு நன்றாக இருக்கின்றோமே என்று நினைத்து இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள் .
4 comments:
உலகின் ஒருபக்கம் வீங்கி கொண்டேபோகிறது, மறுபக்கம் தேய்ந்து கொண்டே போகிறது....
நமக்கு இறைவன் மூன்று வேளையும் சாப்பிட்டு நன்றாக இருக்கின்றோமே என்று நினைத்து இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்
.இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!??
நன்றி பாலா உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும்
நன்றி ஈஸ்வரி அவர்களே உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும்
Post a Comment