மனதை அலைபாய விடாதே . மனதை ஒருநிலைப்படுத்து என்று சொல்கிறார்கள் . எல்லோராலும் அப்படி இருக்க முடிகிறதா . ம்ம்ம்ம்ம்ம்ம் இல்லையே . தியானம் அவசியம் . ஆனால், எல்லோரும் மனதை ஒருநிலைப்படுத்தி இருக்க அவர்களுக்கு முடிகிறதா ? சந்தேகம் தான் .
உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் தம்மை விட வசதி அதிகமாகவும் , ஆடம்பரமுள்ளவர்களாகவும், சொத்துகள் , வீடுகள் என்று வசதி உடையோரிடம் பழகத்தான் ஆசைப்படுகிறார்கள் . விருப்பபடுகிறார்கள். அவர்களது வாழ்க்கையை , வசதிகளை தமது வாழ்க்கையோடு , வசதியோடு ஒப்பிட்டு பார்த்து அவர்கள் இப்படி இருக்கிறார்கள் , அப்படி இருக்கிறார்கள் என ஏக்கம் அடைகின்றனர் . இதுதான் துன்பத்திற்க்கு ஆரம்ப புள்ளியாகி வாழ்க்கையை நரகமாக்குகிறது .
எம்மை விட வசதி குறைந்தவர்களுடன் எமது வாழ்க்கையை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் . அப்போது எமது வாழ்க்கை இன்னமும் வசதி கூடியதாகத் தெரியும் . மனதை இவ்வாறு சமாதானப்படுத்தி வாழும்போது தான் துன்பத்திலிருந்து தானாகவே விடுதலை கிடைத்து விடுகிறது . இதுதான் மன நிறைவு என்று சொல்வார்கள் . மனதை இப்படித்தான் நிறைவோடு வைத்திருக்க முடியும் .
நாம் அம்பானி ஆகி விட வேண்டும் , பில்கேட்ஸ் ஆக வேண்டும் என்று நினைத்து இரண்டு நாளில் ஆகிவிட முடியுமா ? நமக்கு எது முடியுமோ அதனை தான் செய்ய வேண்டும் . நாம் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்றால் உடனே ஆகி விட முடியுமா . இல்லை . நாம் முன்னேற வேண்டும் என்றால் கடின உழைப்பு , புத்திசாலித்தனம் , தைரியம் , தன்னம்பிக்கை போன்ற குணாதிசயங்கள் நம்மிடத்தில் இருந்தால் தான் நாம் முன்னேற முடியும் .
அவர் இப்படி இருக்கிறார் , நல்ல சாரி அவள் அணிந்து இருக்கிறாள் , நகைகள் அடுக்கி போட்டு இருக்கிறாள் என்று நாம் மற்றவர்களை பார்த்து ஏங்குகிறோம், பொறாமை படுகின்றோம் . அது தவறு . நமது வசதி வாய்ப்புக்கு ஏற்ப தான் நாம் வாழ முடியும் .
No comments:
Post a Comment