Sunday, December 11, 2011

8 ஆம் எண்காரர்கள் நல்லவர்களா ???


http://izodiaque.in/wp-content/uploads/2010/12/83.gif
8 ஆம் நம்பர் என்றால் ஐயோ என்று வாயைபிளக்கிறார்கள். அப்படி என்னதான் இருக்கு இந்த எட்டில் . பெரிய ஞானிகள் , அறிவாளிகள் , அரசியல்வாதிகள் , கண்டு பிடிப்பாளர்கள் , நடிகர்கள் என்று பல சாதனை படைத்தோர் எல்லாம் எட்டாம் எண்காரர்களாக தான் இருக்கிறார்கள் .

ஆனால், ஒன்று இவர்கள் எல்லாம் தமது இந்த உன்னத நிலைக்கு மிகவும் கஷ்டப்பட்டுத்தான் வந்து இருப்பார்கள் . எதிலும் கஷ்டப்பட்டால் தான் பலன் கிடைக்கும் . எட்டாம் எண்காரர்கள் எந்த விசயத்திலும் கஷ்டப்பட்டுதான் அதில் பலன் பெறுவார்கள் . 
http://www.freeclipartnow.com/d/40066-1/gold-number-8.jpg
சிம்பிளாக முடிக்க வேண்டிய காரியங்களிலும் மிகவும் சிரமத்தின் மத்தியில் செய்து முடிப்பார்கள் . கடின உழைப்பாளிகள் . இருந்தும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் குறைவாகத்தான் பெறுவார்கள் . கடும்போராட்ட குணம் நிறைந்தவர்கள் . மனதை ஒரு நிலையில் வைத்திருக்க மாட்டார்கள் . எல்லா இடமும் மனதை அலை பாய வைத்துக் கொண்டு இருப்பார்கள் .

சிறு வயதிலே பெரியவர்கள் போல பேச்சிலும் , நடை உடை பாவனைகளிலும் முதிர்ச்சி அடைந்தவர்கள் இந்த எண்காரர்கள் . ஏதாவது குறை , சஞ்சலம் ஏதாவது ஒன்று இவர்களுக்கு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் .  8, 17, 26 ஆம் திகதிகளில் பிறந்தவர்கள் என்றால் இவர்கள் தமது வாழ்வில் தோல்விகள் , வேதனைகள் , அவமானங்கள் போன்றவற்றை சந்தித்தே இருப்பார்கள் . 
http://upload.wikimedia.org/wikipedia/commons/7/7f/Hand_8.gif
பலரும் இந்த எட்டாம் எண்காரர்கள் என்றால் பயப்படுகிறார்கள் . எட்டாம் எண்ணில் ஏதாவது நற்காரியத்தையும் செய்ய தவிர்க்கிறார்கள் . ஆனால் எட்டாம் எண்காரர் போல் நல்லவர்களே இல்லை . எல்லோருக்கும் உதவும் மனப்பாங்கு கொண்டவர்கள் , எல்லோருடனும் அன்பாக, பண்புடன் பேசி எல்லோருடனும் சந்தோசமாக பேசி , சிரித்து மகிழ்வார்கள் . 

கொலை, களவு , கொள்ளை , கடத்தல் போன்றவற்றில் சிக்கி மாட்டி கொள்ளும் பேர்வழிகளும் இவர்கள் தான் . தெய்வநம்பிக்கை அதிகம் இந்த எட்டாம் நம்பர்காரர்களிடம்  உண்டு . இரும்பு , கணணி பொறியியலாளர்கள் , விவசாயம் , கட்டிடம் கட்டல் , வியாபாரம் போன்ற துறைகளில் ஈடுபட்டால் இவர்களுக்கு நன்மைதரும் . மனம்போல் வாழ்வு கிடைப்பது அரிது . இவர்களின் நண்பர்கள் 1, 4, 5 ஆகவே இருப்பார்கள் . இவர்களுடன் தான் அதிகம் நட்பாக இருப்பார்கள் .இந்த எட்டாம் எண்காரர்  5 ஆம் எண்காரர்களை , 1 ஆம் எண்காரர்களை திருமணம் செய்வது நன்று .






2 comments:

Anonymous said...

mmmmm erinaal etram , irankinaal irakkam.


vino

senthil velayuthan said...

most matching.