Monday, December 5, 2011

ரஜனியின் அடுத்த படம் என்ன ?


http://www.tamilguardian.com/images/g321/rajani.jpg
எந்திரனின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ரஜனி எந்த படத்தில் நடிப்பார் என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருந்தார்கள் . அதுக்கு இப்போதுதான் விடை கிடைத்துள்ளது . ராணா படம் என்று தான் இவ்வளவு நாளாக காத்து இருந்தோம் .
http://images.mathrubhumi.com/images/2011/Nov/28/00201_349729.jpg
ஆனால், அந்த படம் இல்லை . கோச்சடையான் என்ற படத்தில் ரஜனி நடிக்க உள்ளார் . அவருக்கு ஏற்பட்ட நோயிலிருந்து முழுமையாக குணமடைந்து கம்பீரமாக தோற்றமளிக்கிறார் சூப்பர் ஸ்டார் . சௌந்தர்யா ரஜினி இயக்க, கே எஸ் ரவிக்குமார் மேற்பார்வையில் வரவிருக்கும் படம் இது. இந்தப் படத்தில் நாயகியாக அனுஷ்கா நடிப்பார் என்று கூறப்படுகிறது. அனுஷ்காவின் மார்க்கட் தான் இப்போது ஏறி உள்ளது . 
http://a4.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc7/s320x320/380475_316288131732506_297061250321861_1149865_2040303932_n.jpg
ரஜனியின் தங்கை வேடத்தில் சினேகா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது . எத்தனை நடிகைகள் தாங்கள் ரஜனியுடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று ஏங்கித் தவிக்கிறார்கள் . ரகுமான் இசை அமைப்பார் என்று தெரிகிறது . கோச்சடையன்'. 3டி-யில் தயாராகும் வரலாற்றுப் படம் ஆகும் . வரலாற்று கதைகளில் நடிக்க தீவிர ஆசை காட்டி வருகிறார் ரஜனி . 

 ஸ்டண்ட் மாஸ்டர் யார் தெரியுமா இந்த கோச்சடையான் படத்துக்கு பீட்டர் ஹெயின் தான் . சிவாஜி , எந்திரன் படத்துக்கு பிறகு இந்த படத்திலும் சூப்பர் ஸ்டாருடன் சேர்ந்து பணியாற்ற இருக்கிறார் .

No comments: