தோழி நிசா
உன்னை காண ஆவலாக
உள்ளேன் நான்
உன்னை பார்த்து
பத்து வருடங்கள்
ஆகி விட்டன
நீ எப்பிடி இருக்கிறாய்
நீ ரஷ்யாவில் இருப்பதாய்
அறிந்து கொண்டேன்
உன்னை தொடர்பு கொள்ள
முடியவில்லை - எனினும்
எனது தேடலின் மூலமாக
உனது உறவினர் ஒருவரிடம்
உனது தொலைபேசி எண்ணை
கேட்டு அறிந்து கொண்டேன் .
உன்னுடன் கதைத்ததில்
நான் எவ்வளவு சந்தோசப்பட்டேன்
என்று தெரியுமா உனக்கு
ஐயோ சொல்ல வார்த்தைகளே இல்லை .
நீயும் என்னுடன் கதைத்தமைக்கு
சந்தோசப்பட்டு இருப்பாய்
என்பதை நான் அறிவேன் .
எனது ஆருயிர் தோழி
அல்லவா நீ .......
நீயும் பல வழிகளில்
என்னை தொடர்பு கொள்ள
எடுத்த முயற்சிகள்
பயனளிக்கவில்லை
எனினும் நான்
கஷ்டப்பட்டு உன்னுடன்
கதைத்து விட்டேன்
இது தான் நட்பு
நட்புக்கு எல்லை இல்லை
நம் நட்பு என்றும் மறக்க
முடியாது - என்றும்
தொடரும் நண்பியே
நிசா..... நிசா.....
எப்போது நீ பிறந்த
மண்ணுக்கு வருகிறாய்
கூடிய கெதியில்
வருவேன் என்றாய்
உன் வருகைக்காக
காத்து இருக்கிறேன்
தோழியே நிசா .
4 comments:
நீங்கள் உங்கள் தாயகத்தில் ஒன்று கூட என் வாழ்த்துக்கள்.
www.naalayavidiyal.blogspot.com
tholiyin varukaikaaka kaaththu irukkireerkal. seekkiram santhiunkial.
mano
நன்றி தமிழன்
நன்றி மனோ
Post a Comment