Friday, August 20, 2010

நகங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்

http://www.latina.com/files/0316nails_article.jpg?0
நாம் நமது நகங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் . முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நாம் வேறு உறுப்புகளுக்கோ கொடுப்பதில்லை . அது தவறு . நாம் அன்றாடம் எமது கைகளால் எவ்வளவு வேலை செய்கிறோம் . எவ்வளவு பொருட்களை எடுக்கிறோம் , வைக்கிறோம் . இன்னோரன்ன பல வேலைகளை செய்கின்றோம் . எப்போதாவது தான் கையில் உள்ள நகம்குற்றினால் தான் நகம் வளர்ந்து விட்டது என்று நமக்கு தெரிகிறது . இல்லாவிட்டால் அதுகும் தெரியாது . இப்படித்தான் பல பேர் இருக்கிறார்கள் .

இரண்டு கிழமைகளுக்கு ஒருதடவை  அல்லது ஒரு கிழமைக்கு ஒரு தடவை  கை, கால் நகங்களை சுத்தம் செய்ய வேண்டும் . நீண்டிருக்கும் நகங்களை வெட்டி துப்பரவாக இருக்க வேண்டும் . கைகளில் இருக்கும் அழுக்குகள் பின்பு வாய்க்குள் நாம் சாப்பிடும் போது செல்லும் . பின்பு பல வியாதிகள் எமக்கு உண்டாகும் . ஏன் இந்த நிலமை?
http://0.tqn.com/d/alzheimers/1/0/X/nail_photo3.jpg
சத்தான உணவினை உண்டு உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் மட்டும் போதுமா. எமது உடலினை அழகாக வைத்திருக்க வேண்டாமா. எனவே நாம் எமது கை, கால் நகங்களை எவ்வாறு அழகாக வைத்திருக்கலாம் என்று தேய்ந்திருக்க வேண்டும் . கை, கால்களுக்கு பொதுவாக வைக்ஸ் செய்து முல்தானிமெட்டியும் றோஸ் வோட்டரும் கலந்து அதனை பூசியபின் தானாகவே காயவிட்டு கழுவினால் நல்லது.

சிலருக்கு நகங்கள்  எளிதில் உடைந்துவிடும் தன்மையோடு காணப்படும். அவர்கள் இரவில் விரல் மற்றும் நகத்தில் சிறிது வெண்ணெய் தடவவும் . விரல் நகங்கள் உறுதியாக இருப்பதற்கு வெந்நீரில் எலுமிச்சைச் சாற்றில் நகங்களை நனையுமாறு 15 நிமிடம் வைக்க வேண்டும்.
http://www.sundaybrunchclub.co.uk/images/Sparkling%20Bingo%20logos/Image3.gif

அடுத்து, கை கால்கள் அழகாக உள்ள போது அவற்றிலுள்ள நகங்களை எபொழுதும் சுத்தமாக வைத்திருந்தாலே போதும். அவை அழகுடன் திகழும். நக வெட்டியால் நகங்களை வெட்டும்போது நம் கைகளின் அமைப்பிற்கு ஏற்ப வெட்டிக் கொள்வது நல்லது. 

நீளமான விரல்களாக இருந்தால் வளைவாக வெட்டிக் கொள்ளலாம். குட்டையான விரல்களை 'U' எழுத்து வடிவில்  வெட்டி ஷேப் செய்து கொள்ள வேண்டும். விரல் நகங்களுக்கு பாலிஷ் போடும் போது லெயிட் கலர் போடவும் உடைகளுக்கு ஏற்றது போல் டார்க் கலர் போடவும்.
 http://www.natures-comfort.com/nails5.JPG
குளித்தவுடன் நகம் வெட்டினால் நகம் ஈரத்தன்மையுடன் இருக்கும் . எளிதாக வெட்டலாம் . அதே போல் தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினாலும் எளிதாக வெட்டலாம் . தண்ணீரை மிதமாக சூடுபடுத்தி சிறிது உப்புக் கலந்து அதில் விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தாள் விரல்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும் .  நகங்கள் அடிக்கடி உடைந்து போகாமல் , கோணலாக வளைந்து வளராமல் நேராக வளர கல்சியம் சத்துள்ள உணவு வகைகளை உண்ண வேண்டும் .
http://www.skinpatientalliance.ca/files/images/nail_disorder-1_psoriasis.jpg
பப்பாளிப்பழம் எடுத்து அதில் சிறிதளவை மசித்து கூழாக்கி அதனோடு கஸ்தூரி மஞ்சள் சிறிதளவு கலந்து பூசி சிறிது நேரத்திற்கு பின் கழுவினால் நாளடைவில் தோல் நல்ல மிருதுவாகவும்  பளபளப்பாகவும் வரும். எப்பொழுதும் கை கால்களுக்கு கிறீம், வஸ்லின், எண்ணை என்று ஏதாவது பூசி தோல் காய்ந்துபோகாமல் வைத்திருக்க வேண்டும்.

நகங்களை பற்களால் கடிக்க கூடாது . நகங்கள் உடைந்து போய் விடும் . நகங்களின் இடுக்குகளில் தங்கும் நுண்ணுயிர்களால் வாந்தி, வயிற்றுபோக்கு, வாயிற்று தொல்லை ஆகியன ஏற்படும் . நகங்கள் மிருதுவானவை. விரல்களின் சதைப்பகுதியின் அடிப்பாகத்தில் இருப்பது. பொதுவாக ஆண்களுக்கு அதிக வளர்ச்சியும் , பெண்களுக்கு பிரசவ காலங்களில் வளர்ச்சி அதிகமாக இருக்கும். நகங்கள் இளம்சிகப்பு நிறத்தில் இருக்கும் .
http://www.steadyhealth.com/4542/Image/nail_fungus_1.jpg
நமது உடல்களில் ஏற்படும் பாதிப்பை பொறுத்து நகங்களில் நிறங்கள் வேறுபடும். ஈரல் பாதிப்பு இருந்தால் வெண்மையாகவும் , சிறுநீரக செயல் இழப்பு இருந்தால் நகங்களில் வளர்ச்சி குறைந்து பாதி நகங்கள்  சிகப்பாகவும் , மஞ்சள் காமாலை இருந்தால் நகங்கள் மஞ்சள் நிறத்திலும் , இதய நூலை இருந்தால் இளம் சிகப்பு நிறத்திலும் நகங்கள் இருக்கும் . இதை வைத்து நோய் அறிகுறிகளை அறிந்து கொள்ளலாம் .
http://www.sugar-gliders.com/images/nail_clip4.jpg
 நகங்களை நுனி பகுதி வரை வெட்ட கூடாது . நகத்தை மூடி சதை வளர்ந்து இருக்கும் . அப்படி வெட்டினால் அதிக வலி காணப்படும் . சாப்பிட்ட பின்பு கைகளை கழுவும்போது நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும் . நகத்தில் சின்ன சின்ன குழிகள் உண்டாகி வெடிப்பு ஏற்பட்டு செதில் செதிலாக உதிர்ந்தால் சொரியாசிஸ் என்ற தோல் வியாதியின் அறிகுறியாகும் .

எனவே நாம் எமது நகங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் . அவற்றில் இருந்து வரும் பாதிப்புகளில் இருந்து விடுபட வேண்டும் . நகங்களை பல்லால் கடிக்காமல் நிக வெட்டி கொண்டு வெட்ட வேண்டும் . பெரியவர்கள் சிறியோர்களுக்கு நல்ல பழக்க வழக்கங்களில் ஒன்றாக இதையும் கற்று கொடுக்க வேண்டும் . "சுத்தம் சுகம் தரும்" ."நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் ".4 comments:

DrPKandaswamyPhD said...

நல்ல பதிவு. அதனால்தான் இதுவரை ஒருவரும் பின்னூட்டம் இடவில்லை.

Anonymous said...

pavi sariya soneenka. ellorum suththamaaka vaiththirukka vendum nakankalai.


mano

Pavi said...

அதென்றால் உண்மைதான் . இப்படியான நல்லவற்றுக்கு கருத்துரைகள் குறைவாகத்தான் இருக்கும்.
நன்றி கந்தசாமி சார் .

Pavi said...

நன்றி மனோ