Sunday, December 11, 2011

தமிழனுக்கு எப்போது நிம்மதி பிறக்கும் ?



தமிழன் இல்லாத நாடும் இல்லை . ஆனால் , தமிழனுக்கு என்று ஒரு நாடும் இல்லை . இது நம் எல்லோருக்கும் தெரிந்த விடயம் . தமிழன் எங்கு தான் சந்தோசமாக இருக்கிறான் . எங்கும் துன்பமும் , கவலையுடனும் தான் இருக்கிறான் .

ஒன்றில் , உறவுகளால் , சகோதரர்களால் அல்லது இன்னொரு தமிழனால் துன்பங்களை அனுபவித்துக் கொண்டு இருக்கிறான் . எத்தனை உறவுகள் கஷ்டப்படுகிறார்கள் . வேறு நாடுகளுக்கு சென்று இரவு, பகல் பாராது உழைத்து தமது உறவுகளை சந்தோசமாக வைத்திருக்க பாடுபடுகிறார்கள் . 

இப்போது முல்லை பெரியாறு ஆணை தொடர்பாக சர்ச்சை நிலவுகிறது . இதிலும் தமிழனுக்குத்தான் துன்பம் . எப்போது தான் இந்த துன்பங்கள் நீங்கி இன்பங்களை இந்த தமிழன் அனுபவிக்கப் போகிறானோ தெரியவில்லை . 

எவ்வளவு காலம் துன்பங்களையே அனுபவித்துக் கொண்டு இருப்பது . வாழு அல்லது வாழவிடு .

4 comments:

அருண் காந்தி said...

தமிழருக்கென ஒரு யுகம் இருந்தது.
அது கட்டெறும்பாகத் தேய்வது மிகவும் வருத்தமான ஒன்றே.
நாம் தான் அதை மெல்ல மெல்ல மீட்டெடுக்க வேண்டும்...

SURYAJEEVA said...

சுரண்டல் அற்ற ஒரு சமூகம் பிறக்கும் பொழுது அனைத்து பிரச்சினைகளும் ஓய்ந்து விடும்

Pavi said...

நன்றி காந்தி உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும்

Pavi said...

பார்ப்போம் . நன்றி ஜீவா