Saturday, January 21, 2012

தோல்வியில் இருந்து மீள .......


http://nature0wonderama.files.wordpress.com/2010/12/racquets-1024x6471.jpg?w=620&h=320&h=320
எந்த விடயத்திலும் தோல்வி தான் கிடைக்கிறது . எடுக்கிற காரியம் ஒன்றும் வெற்றி கிடைப்பது இல்லை என்றும் ஏங்குவோர் பலர் . பலருக்கு தோல்வி என்பது தொடர்கதையாக இருக்கும் . வெற்றி என்னும் கனியை பெற படாதபாடு பெற வேண்டி உள்ளது .

நாம் தோல்வி அடையும் போது தான் வெற்றியின் இனிமை தெரிகிறது . எந்த விடயத்திலும் உடனே வெற்றி கிடைக்காது . தோல்வி தான் வெற்றியின் முதல் படி . அதுவே தொடர் தோல்வி என்றால் என்ன செய்வது ? கிரிக்கெட் , டென்னிஸ் , வியாபாரம் , வாழ்க்கை , காதல் போன்றவற்றில் கூடுதலானோர் தோல்வியை அடைகிறார்கள் . அதிலும் சிலர் தமது கடின உழைப்பாலும் , முன்னேற்றத்தாலும் , வெற்றிபெறுகிறார்கள் .
http://lifarre.com/socialnetwork/mod/file/thumbnail.php?file_guid=3740&size=large
தோல்வி அடைந்தவர்கள் தமது வாழ்க்கையை வெறுக்கிறார்கள் , தற்கொலை செய்து கொள்கிறார்கள் , அன்பை முறிக்கிறார்கள் . இவர்களுக்கு ஒரு பிரச்சனையை தீர்க்கவோ , பேசித் தீர்த்து முடிக்கவோ அவர்கள் முன்வருவதில்லை . 

பிரச்சனைகள் வந்தால் அதனை தீர்க்க என்ன வழி? என்ன செய்யலாம் என திட்டமிட்டு செயற்பட வேண்டும் . வெற்றி எனும் ஏணியின் படிகள் தோல்விகள் தானம்மா . வெற்றி அடைந்தவர்கள் ஒரு நாள் தமது வாழ்விலோ, விளையாட்டிலோ தோல்வி அடைந்தால் அவர்களுக்கு அதனை தாங்க முடிவதில்லை . ஜீரணிக்க முடிவதில்லை . அவர்களுக்கு அதனை பொறுத்துக் கொள்ள முடிவதில்லை . ஆனால், தோல்வி அடைந்தவன் ஒரு நாள் வெற்றி பெரும் போது அவனிடன் இறுமாப்பு ஏற்படாது . தான் பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடைத்தது என்று நினைத்துக் கொள்வான் .
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQveX6IKthQm7Nao_Ux9N0MXVzHnKXLAFxnBiEULF-Wwmm06eH41MegTeLhe7IMe1nM0xtufdUAo4WNGb51A7P_kN5yrcr5f9uIRXcx0sya16RIW1Fs-eQib7sQQO1UHOiQ6qWdsrFWYo/s400/lost+love.jpg
தோல்வி அடைந்தவனிடம் தான் வெற்றியின் அருமை தெரியும் . ஆனால் , வெற்றி அடைந்தவனிடம் மமதை இருக்கும் . அவன் தனது வெற்றிக்கான ரகசியங்களை சொல்லிக் கொடுக்க மறுப்பான் . ஆனால் , ஒரு விளையாட்டை எடுத்துக் கொண்டால் ;தோல்வி அடைந்தவன் எல்லாவற்றையும் வடிவாக விளங்கப்படுத்தி எப்பிடி செய்தால் வெற்றி பெறலாம் என்று அவன் அதற்க்கான பிரச்சனைகளை முன்வைத்து எப்படி அவற்றை தீர்க்க முடியும் என்று கூறுவான் . இதுதான் அவனது பண்பு. 

வாழ்வில் வெற்றிகள் நிரந்தரமில்லை அதுபோல் தோல்விகளும் நிரந்தரமில்லை . வெற்றிபெறுபவர்கள் எல்லாம் வல்லவர்களும் இல்லை . தோல்வி அடைந்தவர்கள் எல்லாம் மூடர்கள் இல்லை . ஒருநாள் அவனும் புத்திசாலி ஆவான் . எதுவும் நிரந்தரமில்லை . வெற்றி என்பது பட்டம் பூச்சி . மாறி மாறி வரும் . உனக்கு மட்டும் அது நிரந்தரமில்லை .

1 comment:

பாலா said...

தன்னம்பிக்கை ஊட்டும் கருத்துக்கள். நன்றி