Thursday, February 2, 2012

பெற்றோரின் எதிர்பார்ப்பும் , பிள்ளைகளின் போக்கும்


http://www.cindyclarklaw.com/images/parents_with_child_on_beach.jpg
பிள்ளைகளை அன்பாக , பண்புள்ளவனாக , அறிவுள்ள , புத்திசாலியாக வளர்க்க வேண்டும் என்பதே பெற்றோர் அனைவரினதும் ஆவல் , ஆசையும் கூட . ஆனாலும், சிலரிடம் வசதி வாய்ப்புகள் இருக்கிறது . பிள்ளையை படிக்க வைத்து , பட்டப்படிப்புகளுக்காக வெளிநாடு அனுப்பி படிக்க வைக்கின்றனர் சில பெற்றோர் .

இருந்தும் சில பெற்றோர் தமது வறுமையின் காரணமாக தமது பிள்ளைகளை இடையில் கல்வியை தொடர இயலாது நிறுத்துகிறார்கள் . இன்னும் சில பெற்றோர் தாம் கஷ்டப்பட்டது போல் தமது பிள்ளையும் கஷ்டப்பட கூடாது என நினைத்து கஷ்டத்தின் மத்தியில் தமது பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள் . 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgG9p-kr1BJN3V9ZPSi3Zf3vQRve5MNzQnFPjfVDGUyMm3_ZL87y2gc22i3jMko2DbBAZDtd1mZ859R3TSTPGHL3B6i68JVaen0VKvnYDldYzgdbUaZ-NsnqJwOENwxPatjubWNs20lrrg/s320/parents_walking_child1.jpg
இப்படியாக பெற்றோர் தமது பிள்ளைகளை கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கி சமுதாயத்தில் ஒரு அந்தஷ்துள்ளவனாக தமது பிள்ளையும் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள் . கடைசி வரைக்கும் தம்மை கண்கலன்காது வைத்து தமது பிள்ளைகள் நம்மை பார்ப்பார்கள் என்று நினைக்கிறார்கள் . ஆனால், பெற்றோர் நினைப்பது போல் இன்று எத்தனை இடத்தில் நடக்கிறது . இல்லையே . 

சில பிள்ளைகள் தான் தமது பெற்ற்றோரை வைத்து பராமரிக்கிறார்கள் . பார்க்கிறார்கள் . சந்தோசமாக வைத்திருக்கிறார்கள் . சில பிள்ளைகள் வயோதிப மடங்களில் தமது பெற்றோரை கொண்டு போய் சேர்க்கிறார்கள் . உன்னால் எனக்கு தொல்லை தான் மிச்சம் என்று பேசுகிறார்கள் . அந்த தாயின் மனது எவ்வளவு பாடுபடும் . மனம் வெந்து போகும் . தமது கடைசி காலத்தை அழுகை , புலம்பலுடன் தான் இருப்பார்கள் .
http://www.yupedia.com/wp-content/uploads/2011/11/2-parenting-tips-that-will-change-your-childs-life.jpg
சில பிள்ளைகள் தமது தாய், தந்தையரை மதித்து தம்மை தமது பெற்றோர் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கி இருப்பார்கள் . ஒரு நேரம் மட்டும் உணவு உண்டு எம்மை வளர்த்தாள் என் தாய் என தமது பழைய நினைவுகளை மீட்டி பார்ப்பார்கள் . தனது பெற்ற்றோரை சொந்த வீடு கட்டி அவர்களை கண்கலன்காது வைத்து  பார்க்க வேண்டும் . அவர்களின் தேவைகளை , ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கிறான் . அவன் தான் பிள்ளை . பற்றுள்ளவன் . பாசமுள்ளவன், அறிவுள்ளவன் . 
http://www.purematrimony.com/blog/wp-content/uploads/2012/01/perfect_parenting-cartoon_h.gif
இன்றைய தொழில்நுட்ப வசதியால் கையில் ஒரு தொலைபேசியும் , காதில் பாட்டும் கேட்டுக் கொண்டு தெருத்தெருவாக பல இளையர்களும் , யுவதிகளும் தெருக்களில் திரிகிறார்கள் . வேலை இல்லை . யாருடனாவது காதல் வசப்பட்டு அவனுடன் ஓடி போவது , கையில் இருக்கும் பணம் செலவழிந்து முடிந்ததும்  அப்போதுதான் வீட்டு ஜாபகம் வரும் . பெற்றோர் பிள்ளையை காணவில்லை என்று பதை பதைக்கிறார்கள். பிள்ளைகள் தமது பெற்றோரின் அந்தஸ்து , கவுரவம் அனைத்தையும் குழி தோண்டி புதைக்கிறார்கள் . 

உலகம் மாறிப் போச்சு, நடை , உடை பாவனைகள் எல்லாம் மாறி போச்சு , நம் கலாசாரம் மாறிப் போச்சு . என்ன கொடுமையடா ? என்ன வாழ்க்கையடா ? என்று எல்லாம் எண்ணத் தோன்றுகிறது .

1 comment:

பாலா said...

ஒவ்வொரு குழந்தையுமே அதன் பெற்றோர் வளர்ப்பை பொறுத்தே குணாதிசயங்கள் பெறுகிறது, இன்று இவர்கள் தன் பெற்றோரை அவமதிப்பதை பார்த்துத்தான், நாளை இவர்களின் பிள்ளைகள் இவர்களை அவமதிப்பார்கள்.