கோபப்படாதவன் யாரும் இல்லை . எல்லோருக்கும் கோபம் வருகிறது . சிலர் வீண் வம்பிழுத்து சண்டை பிடித்து கோபப்பட்டு கொள்கிறார்கள் . சிலர் கோபப்பட்டு சாகும் வரையில் ஒருவருக்கு ஒருவர் கதைக்காமலும் உள்ளனர். கூடுதலாக குடும்பங்களில் அதிகம் கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு போகிறவர்களும் , மாமியார் வீட்டுக்கு போகிறவர்களும் தான் அதிகம் .
ஆருயிர் நண்பர்களும் தேவையில்லாமல் சிறிய விடயங்களுக்கு கூட கோபித்து பிரிந்து விடுகிறார்கள் . எதனையும் மனம் விட்டு சரி எது பிழை எது என்று விசாரித்து பேசி ஒரு தீர்வை பெறலாம் . அப்படி இல்லை . கோபித்துக் கொண்டு இனிமேல் உன்னுடன் நட்பும் வேண்டாம் , சகவாசமும் வேண்டாம் என்று பிரிந்து விடுகிறார்கள் .
கோபம் வந்தால் வாயில் வந்தவற்றை பேசி விட்டு கோபம் குறைந்ததும் நானா இப்படி எல்லாம் பேசினது என்று கேட்பவர்களும் உள்ளனர் . ஏன் இந்த கோபம் எனக்கு இப்படி அதிகம் வருகிறது என்று சிந்திப்போரும் உண்டு .
கோபம் ஏன் ஏற்படுகிறது ....
# எமக்கு பிடிக்காத விடயங்களை பேசும் போது கோபம் வருகிறது .
# தான் சொன்னதை இன்னொருவர் கேட்காமல் உதாசீனம் செய்யும் போது கோபம் வருகிறது .
# ஒருவர் இன்னொருவரை ஏமாற்றும் போது
# சொன்ன நேரத்துக்கு இன்னொருவர் சமூகம் தராத போது
# பொய் பேசும்போது
#ஒருவனை பற்றி அவதூறாக இன்னொருவர் பேசும்போது
இப்படி பல காரணங்கள் உண்டு எமக்கு கோபம் வருவதற்க்கு . எனவே நாம் என்ன செய்யலாம் . கோபம் வந்தால் பேச்சை குறைக்கலாம் . கொஞ்ச நேரம் பேசாது அமைதியாக இருக்கலாம் . அந்த இடத்தை விட்டு அகன்று விடலாம் . அமைதியான பேச்சும் , அடக்கமும் சிறந்தது .
9 comments:
கோபம் கூடாது கோபம் தடுக்கும் வழி முறைகள் ஓகே பவி ஆனால் கோபப்படும் நேரத்தில் இது நினைவுக்கு வர வேண்டுமே
நல்ல பகிர்வு நன்றி பவி
நல்ல பகிர்வு
தங்களின் முந்தைய பதிவிலும் (மற்றவர்களின் மனம் நோகாமல் நடக்க வேண்டும்), இந்தப் பதிவிலும் நல்ல பல கருத்துக்கள்... பாராட்டுக்கள்...
நன்றி... தொடர வாழ்த்துக்கள்...
அமைதியான பேச்சும் , அடக்கமும் சிறந்தது
நன்றி சரவணன்
நன்றி சிவதரிசன்
உங்கள் ஆசீர்வாதத்துக்கு நன்றி தனபாலன் .
நன்றி ஈஸ்வரி அவர்களே
வாழ்க்கைக்கு தேவையான கருத்து...
நல்ல பதிவு...
வாழ்த்துக்கள்...
Post a Comment