விடுகதை திரைப்படத்தில் எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் . எப்போதும் கேட்க பிடித்த பாடலும் கூட . பிரகாஷ்ராஜ் , நீனா ஆகியோர் நடித்த திரைப்படம் . தேவாவின் இசையில் சித்ரா , கிருஷ்ணராஜ் ஆகியோர் இந்த பாடலை பாடி உள்ளனர் . இந்த படம் 1997 ஆம் ஆண்டு வெளிவந்தது . பலருக்கு பிடித்த பாடலும் கூட
இனியும் இனியும் தொடர்ந்திடுமே தினம் தினம் ஒரு கவிதை
இதயம் இதயம் இணைகிறதே இது ஒரு புதுக்கவிதை
இனியும் இனியும் தொடர்ந்திடுமே தினம் தினம் ஒரு கவிதை
பூங்காற்றே நில்லு நீ விலகியே நில்லு ..........
பூமேனி பிரிந்தால் நீ தழுவியே செல்லு ......
நான் இங்கு நலமே நலமே நலமா நலமா காற்றே சொல்லு
ஆண் : இதயம் இதயம் இணைகிறதே இது ஒரு புதுக்கவிதை
இனியும் இனியும் தொடர்ந்திடுமே தினம் தினம் ஒரு கவிதை
பெண் : நெஞ்சம் மணம் நிறைந்த மஞ்சம்
இரவுகளில் அஞ்சும் வீசி வந்து கெஞ்சும்
ஆண் : கொஞ்சம் மயக்கம் வந்து கொஞ்சம்
தனிமை என மிஞ்சும் உடன்படும் தஞ்சம்
பெண் : ஓ ஓ மாலையில் மலரும் காலையில் மணக்கும்
காயங்கள் பார்த்து தனிமையில் சிரிக்கும்
ஆண் :பூங்காற்றே நில்லு நீ விலகியே நில்லு ......
பூமேனி பிரிந்தால் நீ தழுவியே செல்லு ......
நான் இங்கு நலமே நலமே நலமா நலமா காற்றே சொல்லு
பெண் :இதயம் இதயம் இணைகிறதே இது ஒரு புதுக்கவிதை
இனியும் இனியும் தொடர்ந்திடுமே தினம் தினம் ஒரு கவிதை
ஆண் : தேகம் .....மழை பொழியும் மேகம்
கலைந்துவிடும் மோகம் தணியும் அந்த தாகம்
பெண்: யாகம் ஆசைகளின் வேகம்
காமனது யோகம் இரண்டும் உருவாகும்
ஆண் :ஓ ..ஓ ஊடலில் தானே தேடலின் தொல்லை
கூடலில் தானே ஊடலின் எல்லை
பெண் :பூங்காற்றே நில்லு நீ விலகியே நில்லு ..........
பூமேனி பிரிந்தால் நீ தழுவியே செல்லு ......
நான் இங்கு நலமே நலமே நலமா நலமா காற்றே சொல்லு
ஆண் :இதயம் இதயம் இணைகிறதே இது ஒரு புதுக்கவிதை
இனியும் இனியும் தொடர்ந்திடுமே தினம் தினம் ஒரு கவிதை
1 comment:
இனிமையான பாடல்... வரிகளுக்கு நன்றி...
Post a Comment