Thursday, August 27, 2009

விஜய் அரசியலுக்குள் நுழைகிறார்

வணக்கம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
நாமெல்லாம் விஜய் ஒரு நடிகர் என்ற பார்வையில் இருந்து இனி ஒரு அரசியல்வாதி என்ற கோணத்திலும் பார்க்க வேண்டியதாகிவிட்டது. எனக்கு விஜய் நடிப்பு பிடிக்காது . அவரின் டான்ஸ் , ஜோக்ஸ் பிடிக்கும். அவ்வளவு தான். சூர்யா, விக்ரம் ,அஜித், ஜெயம் ரவி ஆகியவர்களை பிடிக்கும். சூர்யாவின் நடிப்பு நாளுக்கு நாள் பிரமாதம். அவரின் ஒவ்வொரு படத்திலும் அவரின் கடின உழைப்பு தெரிகிறது. தான் ஏற்று நடிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ப அவர் மாறி படங்களை வெற்றி பெற வைக்கிறார்.
விக்ரமை சேது, பிதாமகனில் அவரின் நடிப்பு அற்புதம் . அஜித்தை வரலாறு , அமர்க்களம், வாலி போன்ற படங்களில் அவரை எனக்கு பிடித்தது.
சமீப காலமாக விஜய் அரசியலுக்கு வருகிறார் என பல செய்திகள் வந்தன. வந்து கொண்டு இருக்கின்றன. இப்போது அது உண்மை தான் என்ற நிலைமை ஆக போக போகின்றது போல் இருக்கின்றது. அதற்க்கு காரணமும் இருக்கிறது . விஜய்யின் ராகுல் காந்தியின் சந்திப்பு. ராகுல் காந்தி காங்கிரசின் பெரிய தலைகளில் ஒன்று. அடுத்தது இளைய தலை முறையினரை கவர்ந்த ஒரு அரசியல் வாதி
.இளைய உள்ளங்களை கொள்ளை கொண்ட நாயகன் அகவும் இருக்கிறார். இப்படி இரு இளைய தலைகளும் ஒன்று கூடி சந்தித்தால் எமக்கு இனி என்ன நடக்கும் என புரிகிறது தானே. அரசியல் வருவதற்கான ஆயத்தங்களை விஜய் செய்து கொண்டு இருக்கிறார்.
அரசியல் சம்பந்தமான புத்தகங்களை படிக்கிறார். அரசியல்வாதிகளின் சந்திப்புகளை ஏற்படுத்தி அவர்களின் அரசியல் அனுபவங்கள் , அரசியல் வருவதற்கான அடி அத்திவாரங்களை இடுகிறார் விஜய்.
அவர் சினிமாவில் படங்களில் வெற்றி பெற்று முன்னணி நாயகனாக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். உண்மை தான். ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள் அவருக்கு.
அதே அவர் அரசியலுக்கு வருவதற்கு எத்தனை ரசிகர்களுக்கு பிடித்து இருக்கிறதோ நமக்கு தெரியாது. அரசியலிலும் நின்று மக்களின் மனதை கொள்ளை கொள்வாரா விஜய் . பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் . பொறுத்தார் பூமி ஆழ்வார் என்று சொல்வார்கள் . அதே போல் நாமும் கத்து இருப்போம்.
பல நலத்திட்டங்கள், உதவிகள், கணனிகள் அன்பளிப்பு என நல்ல காரியங்களை செய்து மக்களை தன பக்கம் திரும்பி பார்க்க வைத்து மக்கள் இயக்கம் எனும் பெயரில் அவரின் அரசியல் கட்சி பெயரிட பட்டுள்ளது.
ரஜனி கூட ஒரு சூப்பர் ஸ்டார். அவர் கூட அரசியலுக்கு வர , காலடி எடுத்து வைக்க பயப்படுகிறார். விஜய் ரஜினி அளவுக்கு பல ஹிட் படங்களை கொடுக்கவும் இல்லை. சூப்பர் ஸ்டார் அளவுக்கு உயரவும் இல்லை . இந்த அரசியல் கடலுக்குள் நீந்தி வெற்றி பெறுவாரா?
அரசியல் ஒரு கடல் போல என்று சொல்வார்கள். அதில் விஜய் என்ன செய்கிறார் என்று நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்...........................

1 comment:

கார்ல்ஸ்பெர்க் said...

அருமையான பதிவு!!!