Tuesday, September 1, 2009

தொடரட்டும் இலங்கை அணியின் வெற்றி

இலங்கை அணி தொடர் வெற்றியை பெற்றுள்ளது. இலங்கை , நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது.2-0 என்று.
இலங்கை அணி சங்ககரா தலைமையில் அபாரமாக டெஸ்ட் போட்டிகளில் செயற்பட்டு வருகிறது.
அண்மையில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி . இப்போது நியூசிலாந்துக்கு எதிரான வெற்றியும் அடங்கும். இந்த வெற்றிகள் இலங்கை அணியின் சிறந்த துடுப்பாட்டம் , பந்து வீச்சு , களத்தடுப்பு என்பன ஒருங்கே சேர்ந்து எல்லா வீரர்களும் தங்கள் பங்களிப்பை வழங்கி வெற்றி பெற ஒருங்கே கிடைத்தது .
சங்ககரவுக்கு இன்னுமொரு விதத்தில் அவருக்கு மகிழ்ச்சி. என்னவெனில் தரவரிசையில் முதல் இடத்தையும் பிடித்திருக்கிறார்.
சங்ககராவின்
அண்மைக்கால சிறந்த துடுப்பாட்டமே இதற்கு காரணம். இன்னுமொரு சந்தோசம் இலங்கை அணி தரவரிசையில் இரண்டாவது இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.
மஹேல அண்மைய காலமாக துடுப்பாட்டத்தில் சோபித்து வருகிறார். இருந்தும் அவரை துரதிஸ்டம் துரத்துகிறது என்று தான் சொல்ல வேண்டும் . 92, 96 ஓட்டங்களை பெற்று வெளியேறி விட்டார். இரண்டு சதங்களை தவற விட்டு விட்டார்.
சுழல் மன்னர்களான முரளி, ஹேரத் சுழலில் அசத்த சங்க, மஹேல, டில்ஷான், சமரவீர போன்ற வீரர்கள் தமது சிறந்த பங்களிப்பை அசத்தலாக அளிக்க நியூசிலாந்துடனான போட்டிகளை வென்று சாதித்தது. வெற்றியை ருசித்தது.
இனி இலங்கை , இந்திய , நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒரு நாள் சர்வதேச போட்டிகள் ஆரம்பமாக இருக்கிறன. மூன்று அணிகளும் பலமான அணிகள் . பொறுத்திருந்து பார்போம். எந்த அணி வெற்றி பெறுகிறது என்று ...........

No comments: